தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-987

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி, என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவைகள் கூறுங்கள்!

பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவைகள் அதனைக் கூறுங்கள்! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவைகள் கூறுங்கள்! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவைகள் கூறுங்கள்!

பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவைகள் கூறுங்கள்! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் 10 தடவைகள் அதனைக் கூறுங்கள்! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவைகள் அதனைக் கூறுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள் வீதம் நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உங்களது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அப்பாஸ் (ரலி), அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தினமும் உங்களுக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்யுங்கள்! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்செய்யுங்கள்! இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூராஃபிவு (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 987)

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ، ثنا مُوسَى بْنُ عُبَيْدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ أَبِي رَافِعٍ،

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْعَبَّاسِ: «يَا عَمُّ، أَلَا أَصِلُكَ، أَلَا أَحْبُوكَ، أَلَا أَنْفَعُكَ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللهِ، قَالَ: ” تُصَلِّي يَا عَمُّ أَرْبَعَ رَكَعَاتٍ، تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ، فَإِذَا انْقَضَتِ الْقِرَاءَةُ، فَقُلِ: اللهُ أَكْبَرُ، وَالْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً قَبْلَ أَنْ تَرْكَعَ، ثُمَّ ارْكَعْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا، ثُمَّ قُمْ فَتِلْكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ وَهِيَ ثَلَاثُمِائَةٍ فِي أَرْبَعِ رَكَعَاتٍ، فَلَوْ كَانَتْ ذُنُوبُكَ مِثْلَ زَبَدِ الْبَحْرِ غَفَرَ اللهُ لَكَ ” قَالَ: يَا رَسُولَ اللهِ، وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقُولَهَا فِي كُلِّ يَوْمٍ؟ قَالَ: «فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تُصَلِّيَهَا فِي يَوْمٍ فَصَلِّهَا فِي جُمُعَةٍ» حَتَّى قَالَ: «صَلِّهَا فِي شَهْرٍ» حَتَّى قَالَ: «صَلِّهَا فِي سَنَةٍ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-987.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




إسناد شديد الضعف فيه موسى بن عبيدة الربذي وهو منكر الحديث

மேலும் பார்க்க : திர்மிதீ-482 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.