தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-819

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு செய்த உபதேசங்கள் பின்வருமாறு:

அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும்.

மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள்.

லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.

சிறியோர் மீது அன்பு செலுத்து, பெரியோர்களுக்கு மரியாதை கொடு. அதனால் மறுமை நாளில் (சொர்க்கத்தில்) என்னோடு இருப்பாய்.

(almujam-assaghir-819: 819)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ الْجَدُوعِيُّ (الْجَذُوعِيُّ) الْقَاضِي، حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجُنْدِ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” يَا أَنَسُ: أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمْرِكَ , وَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ , وَإِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ وَصَلِّ صَلَاةَ الضُّحَى، فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ , وَارْحَمِ الصَّغِيرَ وَوَقِّرِ الْكَبِيرَ تَكُنْ مِنْ رُفَقَائِي يَوْمَ الْقِيَامَةِ

لَمْ يَرْوِهِ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ إِلَّا عَلِيُّ بْنُ الْجُنْدِ , وَلَا عَنْ عَلِيٍّ إِلَّا مُسَدَّدٌ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-819.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-821.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்   علي بن الجنيد الطائفي அலி பின் ஜஃத் – ஜனத் – ஜுன்த் – ஜுனத் – தாயிஃபீ (ஜுனைத் என்பதே சரி) பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் நிராகரிக்கப்பட்டவர் என்றும், அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரின் செய்திகள் பொய்யானவை என்றும் விமர்சித்துள்ளனர். பார்க்க : லிஸானுல் மீஸான் 5/508.

وقال البخاري : منكر الحديث
لسان الميزان: (5 / 508)

மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3624 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.