Author: Farook

Bukhari-3217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3217. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்’ என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்.

(இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று கூறினேன்.

ஆயிஷா(ரலி) ‘நீங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
Book :59


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ»، فَقَالَتْ: وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، تَرَى مَا لاَ أَرَى، تُرِيدُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘இரண்டு ஜோடி (பொருள்)களை இறைவழியில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் ‘இன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி), ‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்கள்.
Book :59


«مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ، دَعَتْهُ خَزَنَةُ الجَنَّةِ، أَيْ فُلُ هَلُمَّ» فَقَالَ أَبُو بَكْرٍ: ذَاكَ الَّذِي لاَ تَوَى عَلَيْهِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»


Bukhari-3215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3215. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) எப்படி வருகிறது?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார்.

அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்த நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 59


أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ قَالَ: «كُلُّ ذَاكَ يَأْتِينِي المَلَكُ أَحْيَانًا فِي مِثْلِ صَلْصَلَةِ الجَرَسِ، فَيَفْصِمُ عَنِّي، وَقَدْ وَعَيْتُ مَا قَالَ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَيَتَمَثَّلُ لِي المَلَكُ أَحْيَانًا رَجُلًا فَيُكَلِّمُنِي، فَأَعِي مَا يَقُولُ»


Bukhari-3214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3214. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகுன்கி கிளையாரின் குறுகலான வீதியில் .. கிளம்புகிற புழுதியின் பக்கம் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அறிவிப்பாளர் மூஸா(ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) அவர்கள், தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வருவதால் (கிளம்புகின்ற)…’ என்னும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்தார்.
Book :59


«كَأَنِّي أَنْظُرُ إِلَى غُبَارٍ سَاطِعٍ فِي سِكَّةِ بَنِي غَنْمٍ» زَادَ مُوسَى، مَوْكِبَ جِبْرِيلَ


Bukhari-3213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்’ என்று கூறினார்கள்.
Book :59


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَسَّانَ: «اهْجُهُمْ – أَوْ هَاجِهِمْ وَجِبْرِيلُ مَعَكَ»


Bukhari-3212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3212. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்’ என்று கூறிவிட்டு,

அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)’ என்று பதிலளித்தார்கள்.
Book :59


مَرَّ عُمَرُ فِي المَسْجِدِ وَحَسَّانُ يُنْشِدُ فَقَالَ: كُنْتُ أُنْشِدُ فِيهِ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ، ثُمَّ التَفَتَ إِلَى أَبِي هُرَيْرَةَ، فَقَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، أَسَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَجِبْ عَنِّي، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ؟» قَالَ: نَعَمْ


Bukhari-3211

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«إِذَا كَانَ يَوْمُ الجُمُعَةِ، كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ المَسْجِدِ المَلاَئِكَةُ، يَكْتُبُونَ الأَوَّلَ فَالأَوَّلَ، فَإِذَا جَلَسَ الإِمَامُ طَوَوُا الصُّحُفَ، وَجَاءُوا يَسْتَمِعُونَ الذِّكْرَ»


Bukhari-3209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3209. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள்.

உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம் (ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.
Book :59


إِذَا أَحَبَّ اللَّهُ العَبْدَ نَادَى جِبْرِيلَ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحْبِبْهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللَّهَ يُحِبُّ فُلاَنًا فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ القَبُولُ فِي الأَرْضِ


Bukhari-3208

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான்.

அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:)

1. அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்),

2. அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்),

3. அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்),

4. அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது’ என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும்.

பிறகு அதனுள் உயிர் ஊதப்படும்.

இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள்

إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ


Next Page » « Previous Page