Author: Farook

Bukhari-3197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நட்சத்திரங்கள்.

நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம் என்னும் (67:5) இறை வசனத்திலிருந்து

அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின்றான் என்று தெரிய வருகின்றது: 1-அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.

2-ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.

3-அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

எவர் இதுவல்லாத பிற பொருள்களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார் என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 4 சூரியன்-சந்திரன் ஆகியவற்றின் நிலை. பார்க்க இறை வசனங்கள் :- 1)55:5 2)79:29, 46 3)36:40 4)36:37 5)69:16, 17 6)6:76 7)81:1 8)84:17, 28 9)15:16 10)25:61 11)22:61

3197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும்

الزَّمَانُ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ وَذُو الحِجَّةِ وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ


Bukhari-3196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3196. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59


«مَنْ أَخَذَ شَيْئًا مِنَ الأَرْضِ بِغَيْرِ حَقِّهِ، خُسِفَ بِهِ يَوْمَ القِيَامَةِ إِلَى سَبْعِ أَرَضِينَ»


Bukhari-3195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஏழு பூமிகள்.

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும், அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.5 (65:12) பார்க்க இறை வசனங்கள் :- 1)52 : 5 2)79 : 28 3)51 : 7 4)84 : 2, 4, 5 5)91 : 6 6)79 : 14

3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள்.

ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்’ எனக் கூறினார்கள்’ என்றார்கள்.
Book : 59


وَكَانَتْ، بَيْنَهُ وَبَيْنَ أُنَاسٍ خُصُومَةٌ فِي أَرْضٍ، فَدَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرَ لَهَا ذَلِكَ، فَقَالَتْ: يَا أَبَا سَلَمَةَ، اجْتَنِبِ الأَرْضَ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ»


Bukhari-3194

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3194. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது’ என்று எழுதினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


«لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي»


Bukhari-3193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்:

ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ‘நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது’ என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59


أُرَاهُ قَالَ اللَّهُ تَعَالَى: يَشْتِمُنِي ابْنُ آدَمَ، وَمَا يَنْبَغِي لَهُ أَنْ يَشْتِمَنِي، وَيُكَذِّبُنِي وَمَا يَنْبَغِي لَهُ، أَمَّا شَتْمُهُ فَقَوْلُهُ: إِنَّ لِي وَلَدًا، وَأَمَّا تَكْذِيبُهُ فَقَوْلُهُ: لَيْسَ يُعِيدُنِي كَمَا بَدَأَنِي


Bukhari-3192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3192. உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரக வாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும்வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்தார்; அதை மறந்தவர் மறந்துவிட்டார்.
Book :59


 قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا، فَأَخْبَرَنَا عَنْ بَدْءِ الخَلْقِ، حَتَّى دَخَلَ أَهْلُ الجَنَّةِ مَنَازِلَهُمْ، وَأَهْلُ النَّارِ مَنَازِلَهُمْ، حَفِظَ ذَلِكَ مَنْ حَفِظَهُ، وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ


Bukhari-3191

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!’ என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்’ என்று பதில் கூறினார்.

பிறகு, ‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள்

دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَقَلْتُ نَاقَتِي بِالْبَابِ، فَأَتَاهُ نَاسٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا بَنِي تَمِيمٍ»، قَالُوا: قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا، مَرَّتَيْنِ، ثُمَّ دَخَلَ عَلَيْهِ نَاسٌ مِنْ أَهْلِ اليَمَنِ، فَقَالَ: «اقْبَلُوا البُشْرَى يَا أَهْلَ اليَمَنِ، إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ»، قَالُوا: قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالُوا: جِئْنَاكَ نَسْأَلُكَ  عَنْ هَذَا الأَمْرِ؟ قَالَ: «كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ، وَكَانَ عَرْشُهُ عَلَى المَاءِ، وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ، وَخَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ» فَنَادَى مُنَادٍ: ذَهَبَتْ نَاقَتُكَ يَا ابْنَ الحُصَيْنِ، فَانْطَلَقْتُ، فَإِذَا هِيَ يَقْطَعُ دُونَهَا السَّرَابُ، فَوَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي كُنْتُ تَرَكْتُهَا


Bukhari-3190

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Bukhari-3189

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது ‘இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது இல்லை. ஆயினும், ஜிஹாத் எனும் அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மேலும் மக்கா வெற்றியின்போது

‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இதில் போரிட அனுமதி தரப்படவில்லை. எனக்கும் கூட (மக்கா வெற்றியின் போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டும் (இதில் போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப்படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே திகழும்.

அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து விடக்கும் பொருளை அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பாஸ்(ரலி),

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لاَ هِجْرَةَ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا اسْتُنْفِرْتُمْ، فَانْفِرُوا»
وَقَالَ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «إِنَّ هَذَا البَلَدَ حَرَّمَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَهُوَ حَرَامٌ  بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ القِيَامَةِ، وَإِنَّهُ لَمْ يَحِلَّ القِتَالُ فِيهِ لِأَحَدٍ قَبْلِي، وَلَمْ يَحِلَّ لِي إِلَّا سَاعَةً مِنْ نَهَارٍ، فَهُوَ حَرَامٌ بِحُرْمَةِ اللَّهِ إِلَى يَوْمِ القِيَامَةِ، لاَ يُعْضَدُ شَوْكُهُ، وَلاَ يُنَفَّرُ صَيْدُهُ، وَلاَ يَلْتَقِطُ لُقَطَتَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهُ» فَقَالَ العَبَّاسُ: يَا رَسُولَ اللَّهِ، إِلَّا الإِذْخِرَ فَإِنَّهُ لِقَيْنِهِمْ وَلِبُيُوتِهِمْ، قَالَ: «إِلَّا الإِذْخِرَ»


Bukhari-3188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3188. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :58


«لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يُنْصَبُ بِغَدْرَتِهِ يَوْمَ القِيَامَةِ»


Next Page » « Previous Page