Author: Farook

Bukhari-2913

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87 மதிய ஓய்வின் போது தலைவரைப் பிரிந்து மரத்தின் நிழலில் மக்கள் தங்குவது.

2913. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு புனிதப் போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்த போது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்தது. மக்கள் அந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தம் வாளைத் தொங்கவிட்டார்கள். பிறகு தூங்கிவிட்டார்கள். பிறகு கண்விழித்த போது நபியவர்களுக்கே தெரியாமல் அங்கே ஒருவர் நின்றிருந்தார். (அவரைப் பற்றி) நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதர் என் வாளை உருவிக் கொண்டு, ‘உன்னை (என்னிடமிருந்து) பாதுகாப்பவர் யார்?’ என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே, வாளை உறையில் போட்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்’ என்றார்கள். அதற்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் அவரை தண்டிக்கவில்லை.
Book : 56


أَنَّهُ غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَدْرَكَتْهُمُ القَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ العِضَاهِ، فَتَفَرَّقَ النَّاسُ فِي العِضَاهِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ شَجَرَةٍ، فَعَلَّقَ بِهَا سَيْفَهُ، ثُمَّ نَامَ، فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَجُلٌ وَهُوَ لاَ يَشْعُرُ بِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ؟ قُلْتُ: اللَّهُ، فَشَامَ السَّيْفَ، فَهَا هُوَ ذَا جَالِسٌ “، ثُمَّ لَمْ يُعَاقِبْهُ


Bukhari-2912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 86 (தலைவர்களின்) மரணத்தின் போது ஆயுதங்களை உடைப்பது (மற்றும் வாகனப் பிராணியை அறுப்பது) சரியல்ல!

2912. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறக்கும்போது தம் ஆயுதத்தையும், வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையையும், கைபரில் அவர்களுக்கிருந்த ஒரு நிலத்தையும் தவிர வேறெதையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை; அந்த நிலத்தையும் அவர்கள் தருமமாக ஆக்கி விட்டிருந்தார்கள்.
Book : 56


«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا سِلاَحَهُ، وَبَغْلَةً بَيْضَاءَ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً»


Bukhari-2911

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85 தலைக் கவசம் அணிவது.

2911. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி உஹுதுப் போரின்போது என்னிடம் கேட்கப்பட்டது. நான், ‘நபி(ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டது. (அவர்களின்) தலைக்கவசம் அவர்களின் தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ – ரலியல்லாஹு அன்ஹு – அவர்கள் அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா(ரலி), இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்தபோது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும் வரை அதை எரித்தார்கள். பிறகு, அதை காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்றுவிட்டது’ என்று கூறினேன்.
Book : 56


أَنَّهُ سُئِلَ عَنْ جُرْحِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ، فَقَالَ: «جُرِحَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ، وَهُشِمَتِ البَيْضَةُ عَلَى رَأْسِهِ، فَكَانَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلاَمُ، تَغْسِلُ الدَّمَ وَعَلِيٌّ يُمْسِكُ، فَلَمَّا رَأَتْ أَنَّ الدَّمَ لاَ يَزِيدُ إِلَّا كَثْرَةً، أَخَذَتْ حَصِيرًا فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا، ثُمَّ أَلْزَقَتْهُ فَاسْتَمْسَكَ الدَّمُ»


Bukhari-2910

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84

பிரயாணத்தில் மதிய ஓய்வின் போது வாளை மரத்தில் தொங்க விடுவது.

2910. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து

أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ القَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ العِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ: ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي، وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: اللَّهُ، – ثَلاَثًا – ” وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ


Bukhari-2909

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 83

வாட்களை அலங்கரிப்பது.

2909. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு சமுதாயத்தினர் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்கள் தங்கத்தாலோ வெள்ளியாலோ அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களின் (வாட்களின்) ஆபரணங்களெல்லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல் முனையில் சுற்றி வைக்கப்படும்) பச்சைத் தோல், ஈயம் மற்றும் இரும்பு ஆகியன தாம்.

அத்தியாயம்: 56


«لَقَدْ فَتَحَ الفُتُوحَ قَوْمٌ، مَا كَانَتْ حِلْيَةُ سُيُوفِهِمُ الذَّهَبَ وَلاَ الفِضَّةَ، إِنَّمَا كَانَتْ حِلْيَتُهُمْ العَلاَبِيَّ وَالآنُكَ وَالحَدِيدَ»


Bukhari-2908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82 வாட்களைத் தொங்க விடும் தோல் வார்களும், கழுத்தில் வாளைத் தொங்க விடுவதும்.

2908. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள்.

எனவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்துவிட்டு அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், ‘பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு, ‘நாம் இந்தக் குதிரையைத் தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்’ என்று கூறினார்கள். அல்லது, ‘இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது’ என்று கூறினார்கள்.
Book : 56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ، وَأَشْجَعَ النَّاسِ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ المَدِينَةِ لَيْلَةً، فَخَرَجُوا نَحْوَ الصَّوْتِ، فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ اسْتَبْرَأَ الخَبَرَ، وَهُوَ عَلَى فَرَسٍ لِأَبِي طَلْحَةَ عُرْيٍ، وَفِي عُنُقِهِ السَّيْفُ، وَهُوَ يَقُولُ: «لَمْ تُرَاعُوا، لَمْ تُرَاعُوا» ثُمَّ قَالَ: «وَجَدْنَاهُ بَحْرًا» أَوْ قَالَ: «إِنَّهُ لَبَحْرٌ»


Bukhari-2907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2907. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும், ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், ‘நீ இவர்களுடைய (வீர விளையாட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?’ என்று கேட்டிருக்க வேண்டும்.

நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். ‘அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்’ என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்று விட்டபோது, ‘போதுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க நான், ‘ஆம், போதும்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால் நீ போ!’ என்று கூறினார்கள்.
Book :56


وَكَانَ يَوْمُ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِمَّا قَالَ: «تَشْتَهِينَ تَنْظُرِينَ»، فَقَالَتْ: نَعَمْ، فَأَقَامَنِي وَرَاءَهُ، خَدِّي عَلَى خَدِّهِ، وَيَقُولُ: «دُونَكُمْ بَنِي أَرْفِدَةَ»، حَتَّى إِذَا مَلِلْتُ، قَالَ: «حَسْبُكِ»، قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَاذْهَبِي»


Bukhari-2906

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81 தோல் கேடயம்

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, ‘அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?’ என்று கடிந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, ‘அவர்களை (பாட) விடுங்கள்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.
Book : 56


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، فَدَخَلَ أَبُو بَكْرٍ، فَانْتَهَرَنِي وَقَالَ: مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «دَعْهُمَا»، فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا، فَخَرَجَتَا


Bukhari-2905

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2905. அலீ(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை.

ஸஅத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்’ என்று கூறியதை கேட்டேன்.
Book :56


مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَدِّي رَجُلًا بَعْدَ سَعْدٍ سَمِعْتُهُ يَقُولُ: «ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي»


Bukhari-2904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2904. உமர்(ரலி) அறிவித்தார்.

பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன.

அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.
Book :56


كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِمَّا لَمْ يُوجِفِ المُسْلِمُونَ عَلَيْهِ بِخَيْلٍ، وَلاَ رِكَابٍ، «فَكَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  خَاصَّةً، وَكَانَ يُنْفِقُ عَلَى أَهْلِهِ نَفَقَةَ سَنَتِهِ، ثُمَّ يَجْعَلُ مَا بَقِيَ فِي السِّلاَحِ وَالكُرَاعِ عُدَّةً فِي سَبِيلِ اللَّهِ»


Next Page » « Previous Page