Author: Farook

Bukhari-2831

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டோரில் தகுந்த காரணமின்றி (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் உடைமைகளாலும், தம் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக ஆக முடியாது.

அறப்போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டவர்களை விட அதில் கலந்து கொண்டு தம் உடைமைகளாலும், உயிர்களாலும் அறப்போர் புரிந்தவர்களை கண்ணியமான ஓர் அந்தஸ்தைக் கொண்டு அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (இவ்விரு பிரிவினரில்) ஒவ்வொரு வருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

ஆயினும், அறப்போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டவர்களை விட அறப்போரில் கலந்து கொண்டவர்களுக்கு மகத்தான நற்பலனை அதிகமாகத் தருகின்றான். அவர்களுக்கு அல்லாஹ்விடம் (சொர்க்கத்தின்) பல படித்தரங்கள் உண்டு; மன்னிப்பும், கருணையும் உண்டு. மேலும், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும், இரக்கமுடையவனாகவும் இருக்கின்றான். (4:95,96)

2831. பராஉ(ரலி) அறிவித்தார்.

‘இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…’ என்னும்

لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ} [النساء: 95] مِنَ المُؤْمِنِينَ ” دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا، فَجَاءَ بِكَتِفٍ فَكَتَبَهَا، وَشَكَا ابْنُ أُمِّ مَكْتُومٍ ضَرَارَتَهُ،

فَنَزَلَتْ: {لاَ يَسْتَوِي القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95]


Bukhari-2830

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2830. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :56


«الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»


Bukhari-2829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகை உயிர்த் தியாகங்கள் உண்டு.

2829. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:

1. பிளேக் நோயால் இறந்தவர் 2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர் 3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் 5. இறைவழியில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book : 56


الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ


Bukhari-2828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 நோன்பை விட புனிதப் போருக்கு முதலிடம் கொடுப்பது.

2828. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் பங்கெடுத்த காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.
Book : 56


«كَانَ أَبُو طَلْحَةَ لاَ يَصُومُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَجْلِ الغَزْوِ، فَلَمَّا قُبِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أَرَهُ مُفْطِرًا إِلَّا يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى»


Bukhari-2827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2827. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்’ என்று கேட்டேன். அப்போது ஸயீத் இப்னு ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), ‘இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். உடனே நான், ‘இவர் (நுஃமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர்’ என்று கூறினேன்.

அதற்கு ஸயீத் இப்னு ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), ‘என்ன ஆச்சரியம்! (தன்னுடைய ‘தவ்ஸ்’ குலத்தார் வசிக்கின்ற) ‘ளஃன்’ என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழி முயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறை சொல்கிறதே! அவரை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை’ என்று கூறினார்.

அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘நபி(ஸல்) அவர்கள் அபானுக்குப் பங்கு கொடுத்தார்களா, பங்கு கொடுக்கவில்லையா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்.
Book :56


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِخَيْبَرَ بَعْدَ مَا افْتَتَحُوهَا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَسْهِمْ لِي، فَقَالَ بَعْضُ بَنِي سَعِيدِ بْنِ العَاصِ: لاَ تُسْهِمْ لَهُ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «هَذَا قَاتِلُ ابْنِ قَوْقَلٍ»، فَقَالَ ابْنُ سَعِيدِ بْنِ العَاصِ: وَاعَجَبًا لِوَبْرٍ، تَدَلَّى عَلَيْنَا مِنْ قَدُومِ ضَأْنٍ، يَنْعَى عَلَيَّ قَتْلَ رَجُلٍ مُسْلِمٍ أَكْرَمَهُ اللَّهُ عَلَى يَدَيَّ، وَلَمْ يُهِنِّي عَلَى يَدَيْهِ، قَالَ: «فَلاَ أَدْرِي أَسْهَمَ لَهُ أَمْ لَمْ يُسْهِمْ لَهُ»، قَالَ سُفْيَانُ: وَحَدَّثَنِيهِ السَّعِيدِيُّ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «أَبُو عَبْدِ اللَّهِ السَّعِيدِيُّ هُوَ عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ العَاصِ»


Bukhari-2826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமைக் கொன்ற பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, மார்க்கத்தில் உறுதியுடன் இருந்து, பிறகு கொல்லப்பட்டு விடுதல்.

2826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Book : 56


يَضْحَكُ اللَّهُ إِلَى رَجُلَيْنِ يَقْتُلُ أَحَدُهُمَا الآخَرَ يَدْخُلاَنِ الجَنَّةَ: يُقَاتِلُ هَذَا فِي سَبِيلِ اللَّهِ، فَيُقْتَلُ، ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى القَاتِلِ، فَيُسْتَشْهَدُ


Bukhari-2825

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமையான அளவு எது என்பதும், அதற்காக நாட்டம் கொள்வதும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் கனமானவர்களாயிருந்தாலும் சரி; இலேசானவர்களாகயிருந்தாலும் சரி (அறப்போருக்குப்) புறப்படுங்கள்; உங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

உடனடி லாபம் (போர்ச் செல்வம்) கிடைப்பதாக இருந்து, இலேசான பயணமாகவும் இருந்திருப்பின் (நபியே!) உங்களை அவர்கள் பின்பற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் பயணம் தூரமாகி (சிரமமாகி) விட்டது. (9:41,42)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் பூமியிலேயே ஒட்டிக் கொண்டு கிடக்கின்றீர்களே! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி கொண்டு விட்டீர்களா? (அப்படியாயின்) உலக வாழ்வின் இன்பங்கள் யாவும் மறுமை வாழ்க்கைக்கு முன்பாக அற்பமானவையே (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). (9:38)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பல குழுவினர்களாகப் புறப்படுங்கள் (4:71) என்பதற்கு, (தனித் தனியாகிப்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الفَتْحِ: «لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»


Bukhari-2824

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 அறப்போரில், தான் பட்ட துன்பங்களை ஒருவர் எடுத்துரைக்கலாம்.

இதை ஸஅத்  பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ உஸ்மான் நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2824. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நான் தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஆகியோருடன் தோழமை கொண்டிருந்தேன்.

அவர்களில் ஒருவரும் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவித்ததை நான் கேட்டதில்லை. ஆனால், தல்ஹா(ரலி) உஹுதுப் போரின் நாள் குறித்து அறிவித்ததை கேட்டிருக்கிறேன்.
Book : 56


«صَحِبْتُ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَسَعْدًا، وَالمِقْدَادَ بْنَ الأَسْوَدِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، فَمَا سَمِعْتُ أَحَدًا مِنْهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ»


Bukhari-2823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2823. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள்,

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி’

இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று பிரார்த்திப்பது வழக்கம்.
Book : 56


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»


Bukhari-2822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.

2822. அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்) கூறினார்.

ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்;

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி –

‘இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’

என்று கூறிவிட்டு, ‘இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) கூறினார்:
இந்த ஹதீஸை நான் முஸ்அப்(ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். இது உண்மையானது தான் என அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
Book : 56


كَانَ سَعْدٌ يُعَلِّمُ بَنِيهِ هَؤُلاَءِ الكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ المُعَلِّمُ الغِلْمَانَ الكِتَابَةَ وَيَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْهُنَّ دُبُرَ الصَّلاَةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»،

فَحَدَّثْتُ بِهِ مُصْعَبًا فَصَدَّقَهُ


Next Page » « Previous Page