Author: Farook

Bukhari-2811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 அல்லாஹ்வின் பாதையில் புழுதியடைந்த பாதங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

(போருக்குச் செல்லாமல்) அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் பின்தங்கி விடுவதும், அவரைப் பற்றி அக்கறை காட்டாமல் தங்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும் மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் அழகல்ல.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் பசி, தாகம் மற்றும் களைப்பு இவற்றில் எந்தத் துன்பம் அவர்களைத் தீண்டினாலும், நிராகரிப்பவர்களுக்குக் கோபமூட்டும் பாதையில் எந்த அடியை அவர்கள் எடுத்து வைத்தாலும், எந்தப் பகைவனுக்கெதிராகவும் அவர்கள் ஒரு வெற்றியைப் பெற்றாலும் அவர்களுக்கு ஒரு (நற்செயல் புரிந்த) நன்மை எழுதப் படாமல் இருப்பதில்லை. நிச்சயமாக, அல்லாஹ் நற்செயல் புரிவோரின் பிரதிபலனை வீணாக்குவதில்லை. (9:120)

2811. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியானின் பாதங்கள் இரண்டிலும், இறைவழியில் புழுதி படிந்திருக்க, அதை நரக நெருப்புத் தீண்டுவதில்லை. என அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் இப்னு ஜப்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 56


«مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ»


Bukhari-2810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 அல்லாஹ்வின் வாக்கு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவர்.

2810. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள், ‘(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ الرَّجُلُ: يُقَاتِلُ لِلْمَغْنَمِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِلذِّكْرِ، وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُرَى مَكَانُهُ، فَمَنْ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-2809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படுதல்.

2809. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ‘ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ البَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ، أَلاَ تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ، وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ، اجْتَهَدْتُ عَلَيْهِ فِي البُكَاءِ، قَالَ: «يَا أُمَّ حَارِثَةَ إِنَّهَا جِنَانٌ فِي الجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الفِرْدَوْسَ الأَعْلَى»


Bukhari-2808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அறப்போரில் ஈடுபடுவதற்கு முந்தைய நற்செயல்கள்

நீங்கள் போர் புரிவதெல்லாம் (உங்கள் போரின் முடிவுகளெல்லாம்) உங்கள் செயல்களை வைத்துத் தான் என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும். எவர் அல்லாஹ்வுடைய வழியில் ஈயம் பூசப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக (ஒன்றுபட்டு) நின்று போர் புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் விரும்புகிறான். (61:2-4)

2808. பராஉ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள்.

எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்.
Book : 56


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مُقَنَّعٌ بِالحَدِيدِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أُقَاتِلُ أَوْ أُسْلِمُ؟ قَالَ: «أَسْلِمْ، ثُمَّ قَاتِلْ»، فَأَسْلَمَ، ثُمَّ قَاتَلَ، فَقُتِلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَمِلَ قَلِيلًا وَأُجِرَ كَثِيرًا»


Bukhari-2807

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன்.

(ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:

அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
Book :56


«نَسَخْتُ الصُّحُفَ فِي المَصَاحِفِ، فَفَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقْرَأُ بِهَا، فَلَمْ أَجِدْهَا إِلَّا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ»، وَهُوَ قَوْلُهُ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23]


Bukhari-2806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2806. அனஸ்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி ‘ருபய்யிஉ’ எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் இப்னு நள்ரு(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளுடைய முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது’ என்று கூறினார்.

அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல்விட்டுவிட்டனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (இப்படி நடக்க வேண்டும் என்று சபதம் செய்து)விட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்’ என்று கூறினார்கள்.
Book :56


إِنَّ أُخْتَهُ وَهِيَ تُسَمَّى الرُّبَيِّعَ كَسَرَتْ ثَنِيَّةَ امْرَأَةٍ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسٌ: يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَرَضُوا بِالأَرْشِ، وَتَرَكُوا القِصَاصَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»


Bukhari-2805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்லாஹ் கூறுகிறான்:

தாங்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர். அவர்களில் சிலர், தம் இலட்சிய(மான வீரமரண)த்தை அடைந்து விட்டனர். அவர்களில் இன்னும் சிலர் (அதனை) எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். (தங்கள் வாக்குறுதியில்) அவர்கள் ஒரு போதும் மாறி விடவில்லை. (அல்குர்ஆன் 33:23)

2805. அனஸ் (ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர் (ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான்.

பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், ‘இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்’ என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத்

غَابَ عَمِّي أَنَسُ بْنُ النَّضْرِ عَنْ قِتَالِ بَدْرٍ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ المُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ المُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ»، فَلَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، وَانْكَشَفَ المُسْلِمُونَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ – يَعْنِي أَصْحَابَهُ – وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ، – يَعْنِي المُشْرِكِينَ – ثُمَّ تَقَدَّمَ»،

فَاسْتَقْبَلَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ، فَقَالَ: «يَا سَعْدُ بْنَ مُعَاذٍ، الجَنَّةَ وَرَبِّ النَّضْرِ إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ»، قَالَ سَعْدٌ: فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللَّهِ مَا صَنَعَ،

قَالَ أَنَسٌ: فَوَجَدْنَا بِهِ بِضْعًا وَثَمَانِينَ ضَرْبَةً بِالسَّيْفِ أَوْ طَعْنَةً بِرُمْحٍ، أَوْ رَمْيَةً بِسَهْمٍ وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَقَدْ مَثَّلَ بِهِ المُشْرِكُونَ، فَمَا عَرَفَهُ أَحَدٌ إِلَّا أُخْتُهُ بِبَنَانِهِ قَالَ أَنَسٌ: ” كُنَّا نُرَى أَوْ نَظُنُّ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِيهِ وَفِي أَشْبَاهِهِ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23] إِلَى آخِرِ الآيَةِ


Bukhari-2804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) கூறுங்கள்: (இறைமறுப்பாளர்களான) நீங்கள், எங்கள் விஷயத்தில் (வெற்றி, அல்லது வீர மரணம் ஆகிய) இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றீர்களா? (9:52)

(இதைத் தான்) வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் (என்று அபூசுஃப்யான் அவர்கள் ரோம சக்கரவர்த்தி ஹிராக்ளியஸிடம் கூறினார்.

2804. அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

என்னிடம் (ரோம சக்கரவர்த்தி) ஹிராக்ளியஸ், ‘முஹம்மதை எதிர்த்து நீங்கள் புரிகிற போர் (முடிவு) எப்படியுள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு நீங்கள், ‘போர் (முடிவு எங்களிடையே) மாறி மாறி வரும்’ என்று பதிலளித்தீர்கள். இறைத்தூதர்கள் இப்படித் தான் சோதிக்கப்படுவார்கள். பிறகு, அவர்களுக்குச் சாதகமாகவே இறுதி முடிவு இருக்கும்’ என்று கூறினார்.
Book : 56


أَنَّ هِرَقْلَ قَالَ لَهُ: سَأَلْتُكَ كَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ؟، فَزَعَمْتَ «أَنَّ الحَرْبَ سِجَالٌ وَدُوَلٌ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْتَلَى ثُمَّ تَكُونُ لَهُمُ العَاقِبَةُ»


Bukhari-2803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 அல்லாஹ்வின் பாதையில் காயப்படுத்தப்படுபவர் (பெறும் சிறப்பு)

2803. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் – உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை ‘(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் – மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும், கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُكْلَمُ أَحَدٌ فِي سَبِيلِ اللَّهِ، وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُكْلَمُ فِي سَبِيلِهِ إِلَّا جَاءَ يَوْمَ القِيَامَةِ، وَاللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالرِّيحُ رِيحُ المِسْكِ»


Bukhari-2802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2802. ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், ‘நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!’ என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.
Book :56


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي بَعْضِ المَشَاهِدِ وَقَدْ دَمِيَتْ إِصْبَعُهُ، فَقَالَ: «هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيتِ، وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ»


Next Page » « Previous Page