Author: Farook

Bukhari-2643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2643. அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்கள். பிறகு, மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்கள்.

நான், ‘விசுவாசிகளின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?’ என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சி சொல்கிறார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்’ என்று கூறினார்கள்.

நாங்கள், ‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ்

أَتَيْتُ المَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ وَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا، فَجَلَسْتُ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَمَرَّتْ جَنَازَةٌ، فَأُثْنِيَ خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى، فَأُثْنِيَ خَيْرًا، فَقَالَ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ شَرًّا، فَقَالَ: وَجَبَتْ، فَقُلْتُ: وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ المُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ»، قُلْنَا: وَثَلاَثَةٌ، قَالَ: «وَثَلاَثَةٌ»، قُلْتُ: وَاثْنَانِ، قَالَ: «وَاثْنَانِ»، ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الوَاحِدِ


Bukhari-2642

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்?

2642. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்’ என்று கூறினார்கள்.
Book : 52


مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ: «وَجَبَتْ»، ثُمَّ مُرَّ بِأُخْرَى، فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا – أَوْ قَالَ: غَيْرَ ذَلِكَ – فَقَالَ: «وَجَبَتْ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ لِهَذَا وَجَبَتْ، وَلِهَذَا وَجَبَتْ، قَالَ: «شَهَادَةُ القَوْمِ المُؤْمِنُونَ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ»


Bukhari-2641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 நேர்மையான சாட்சிகள்

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (65:2)

இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282)

2641. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது.

இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைத் கொண்டே. எனவே, தம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகிறவரை நம்பிக்கைக்குரியவராக்கி கெரளவித்துக் கொள்வோம். அவரின் இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரின் அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான்.

நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; தம் அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.
Book : 52


إِنَّ أُنَاسًا كَانُوا يُؤْخَذُونَ بِالوَحْيِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّ الوَحْيَ قَدِ انْقَطَعَ،

وَإِنَّمَا نَأْخُذُكُمُ الآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ، فَمَنْ أَظْهَرَ لَنَا خَيْرًا، أَمِنَّاهُ، وَقَرَّبْنَاهُ، وَلَيْسَ إِلَيْنَا مِنْ سَرِيرَتِهِ شَيْءٌ اللَّهُ يُحَاسِبُهُ فِي سَرِيرَتِهِ، وَمَنْ أَظْهَرَ لَنَا سُوءًا لَمْ نَأْمَنْهُ، وَلَمْ نُصَدِّقْهُ، وَإِنْ قَالَ: إِنَّ سَرِيرَتَهُ حَسَنَةٌ


Bukhari-2640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முதலில்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும்.

இது (எப்படியென்றால்) பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கஅபாவினுள் தொழுதார்கள் என்று செய்தியறிவிக்க, ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை என்று கூறிய போது, பிலால் (ரலி) அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போன்றதாகும் என்று ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறே, இன்னாருக்கு இன்னாரி டமிருந்து ஆயிரம் திர்ஹங்கள் (கடன் தொகை) வரவேண்டியள்ளது என்று இருவர் சாட்சியமளித்து, வேறு இருவர், இரண்டாயிரம் திர்ஹம்கள் வர வேண்டியுள்ளது என்று சாட்சியம் அளித்தால் (இரு தொகைகளில்) அதிகமான தொகை எதுவோ அதைச் செலுத்தும்படியே தீர்ப்பு வழங்கப்படும்.

2640. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ இஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்’ என்று கூறினாள். நான், ‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணந்தபோது)

أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ، فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ، وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَأَرْسَلَ إِلَى آلِ أَبِي إِهَابٍ يَسْأَلُهُمْ، فَقَالُوا: مَا عَلِمْنَا أَرْضَعَتْ صَاحِبَتَنَا، فَرَكِبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ»، فَفَارَقَهَا وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ


Bukhari-2639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)’ என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், ‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது’ என்று கூறினார்கள்.

அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், ‘அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.
Book :52


جَاءَتْ امْرَأَةُ رِفاعَةَ القُرَظِيِّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كُنْتُ عِنْدَ رِفَاعَةَ، فَطَلَّقَنِي، فَأَبَتَّ طَلاَقِي، فَتَزَوَّجْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الزَّبِيرِ إِنَّمَا مَعَهُ مِثْلُ هُدْبَةِ الثَّوْبِ، فَقَالَ: «أَتُرِيدِينَ أَنْ تَرْجِعِي إِلَى رِفَاعَةَ؟ لاَ، حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ وَيَذُوقَ عُسَيْلَتَكِ»، وَأَبُو بَكْرٍ جَالِسٌ عِنْدَهُ، وَخَالِدُ بْنُ سَعِيدِ بْنِ العَاصِ بِالْبَابِ يَنْتَظِرُ أَنْ يُؤْذَنَ لَهُ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ أَلاَ تَسْمَعُ إِلَى هَذِهِ مَا تَجْهَرُ بِهِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-2638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம்.

இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், (கண்ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சி சொல்லலாம். (அதுவும் ஏற்கப்படக் கூடியதே. சாட்சி சொல்பவர், வாக்குமூலம் தந்தவரை அவர் வாக்கு மூலம் தரும் போது கண்ணால் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை) என்று கூறினர். ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டு விட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், என்னை (சாட்சியாக அழைத்து வந்தவர்கள்) எதையும் பார்க்கச் செய்யவில்லை. நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன் என்று கூற வேண்டும். (அப்படிக் கூறினால் அது செல்லும்) என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2638. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து

انْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ يَؤُمَّانِ النَّخْلَ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنْ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ، وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ – أَوْ زَمْزَمَةٌ – فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لِابْنِ صَيَّادٍ: أَيْ صَافِ، هَذَا مُحَمَّدٌ، فَتَنَاهَى ابْنُ صَيَّادٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»


Bukhari-2637

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

சாட்சியங்கள்

பாடம் : 1 வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர் ஒருவர் அதை நீதியுடன் எழுதட்டும். எழுதத் தெரிந்தவர், அல்லாஹ் அவருக்குக் கற்றுத் தந்ததைப் போன்று (பிறருக்காக அவரும்) எழுதித் தரட்டும். அவர் எழுதித் தர மறுக்க வேண்டாம்.

எவர் மீது (கடன் சுமையைத் தீர்க்கும்) பொறுப்புள்ளதோ அவர் (எழுதுவதற்காக) வாசகம் சொல்லித் தரட்டும். (அந்த நேரத்தில்) தன் அதிபதிக்கு அவர் அஞ்சட்டும். மேலும், கடன் விஷயமாகத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் மறைக்க வேண்டாம். (உள்ளதை உள்ளபடி சொல்லட்டும்.)

கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் பேதையாகவோ (மூளை வளர்ச்சி குன்றியவராகவோ) பலவீனராகவோ,வாசகம் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது காப்பாளர் நீதியுடன் (வாசகம்) சொல்லட்டும். மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவதற்காக. இவர்கள் நீங்கள்

حِينَ – قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ: مَا قَالُوا: فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا، وَأُسَامَةَ حِينَ اسْتَلْبَثَ الوَحْيُ يَسْتَأْمِرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَقَالَ: أَهْلُكَ وَلاَ نَعْلَمُ إِلَّا خَيْرًا، وَقَالَتْ بَرِيرَةُ: إِنْ رَأَيْتُ عَلَيْهَا أَمْرًا أَغْمِصُهُ أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ، فَتَأْكُلُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَعْذِرُنَا فِي رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِ بَيْتِي، فَوَاللَّهِ مَا عَلِمْتُ مِنْ أَهْلِي إِلَّا خَيْرًا، وَلَقَدْ ذَكَرُوا رَجُلًا مَا عَلِمْتُ عَلَيْهِ إِلَّا خَيْرًا»


Bukhari-2636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 ஒரு மனிதர் (மற்றொரு மனிதரை) குதிரையின் மீது ஏற்றி (அனுப்பி) விட்டால் அது உம்றாவையும், சதகாவையும் போன்றதாகும். அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உரிமையுண்டு என்று சிலர் கூறினர்.

2636. உமர்(ரலி) அறிவித்தார்.

நான் இறைவழியில் (போரிடுவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்த குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (‘அதை வாங்கலாமா?’ என்று) கேட்டேன். அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்’ என்று கூறினார்கள்.
Book : 51


حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لاَ تَشْتَرِهِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ»


Bukhari-2635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 மக்களின் வழக்கிலுள்ளபடி உனக்கு இந்த அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்து விடுகிறேன் என்று ஒருவர் கூறினால் அது செல்லும்.

இப்படிச் சொல்வது இரவலாகக் கொடுப்பதையே குறிக்கும் (அன்பளிப்பு ஆகாது) என்று சிலர் கூறுகின்றனர். மேலும், ஒருவர், நான் இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன் என்று கூறினால் அது(வும்) அன்பளிப்பாகும்.

2635. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் மனைவி) ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். எகிப்து நாட்டு மன்னரின் ஆட்கள், ஸாராவுக்கு ஹாஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். ஸாரா திரும்பி வந்து, ‘அல்லாஹ், நிராகரிப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?’ என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘எகிப்து நாட்டு மன்னன், ஸாராவுக்கு ஹாஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
Book : 51


هَاجَرَ إِبْرَاهِيمُ بِسَارَةَ، فَأَعْطَوْهَا آجَرَ، فَرَجَعَتْ، فَقَالَتْ: أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً ،

وَقَالَ ابْنُ سِيرِينَ: عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَخْدَمَهَا هَاجَرَ»


Bukhari-2634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2634. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘இது யாருடைய நிலம்?’ என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்’ என்று கூறினார்கள்.

அதற்கு அவர்கள், ‘இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி) மனீஹாவாக (இரவலாக) கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 51


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى أَرْضٍ تَهْتَزُّ زَرْعًا، فَقَالَ: «لِمَنْ هَذِهِ؟»، فَقَالُوا: اكْتَرَاهَا فُلاَنٌ، فَقَالَ: «أَمَا إِنَّهُ لَوْ مَنَحَهَا إِيَّاهُ كَانَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا أَجْرًا مَعْلُومًا»


Next Page » « Previous Page