Author: Farook

Bukhari-2234

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபச்சாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்று விடுங்கள்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :34


«إِذَا زَنَتْ أَمَةُ أَحَدِكُمْ، فَتَبَيَّنَ زِنَاهَا، فَلْيَجْلِدْهَا الحَدَّ، وَلاَ يُثَرِّبْ عَلَيْهَا، ثُمَّ إِنْ زَنَتْ فَلْيَجْلِدْهَا الحَدَّ، وَلاَ يُثَرِّبْ، ثُمَّ إِنْ زَنَتِ الثَّالِثَةَ، فَتَبَيَّنَ زِنَاهَا فَلْيَبِعْهَا وَلَوْ بِحَبْلٍ مِنْ شَعَرٍ»


Bukhari-2232 & 2233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2232 & 2233. ஸைத் இப்னு காலித்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்களிடம், விபச்சாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபச்சாரம் செய்தால் மீண்டும் அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மூன்றாவது முறை அல்லது நான்காவது முறை விபச்சாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்று விடுங்கள்!’ என்று பதிலளித்தார்கள்.
Book :34


أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُسْأَلُ عَنِ الأَمَةِ تَزْنِي وَلَمْ تُحْصَنْ، قَالَ: «اجْلِدُوهَا، ثُمَّ إِنْ زَنَتْ، فَاجْلِدُوهَا، ثُمَّ بِيعُوهَا» بَعْدَ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ


Bukhari-2231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2231. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!’ என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!’
Book :34


«بَاعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-2230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 110 என் மரணத்திற்குப் பின், நீ விடுதலையடைந்து விடுவாய்! என்று உரிமையாளரால் பின் விடுதலையளிக்கப்பட்ட (முதப்பர்-) அடிமையை விற்பது.

2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!’ என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!’
Book : 34


«بَاعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُدَبَّرَ»


Bukhari-2229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 109 அடிமைகளை விற்பது.

2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!’ என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)
Book : 34


أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُصِيبُ سَبْيًا، فَنُحِبُّ الأَثْمَانَ، فَكَيْفَ تَرَى فِي العَزْلِ؟ فَقَالَ «أَوَإِنَّكُمْ تَفْعَلُونَ ذَلِكَ؟ لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا ذَلِكُمْ، فَإِنَّهَا لَيْسَتْ نَسَمَةٌ كَتَبَ اللَّهُ أَنْ تَخْرُجَ إِلَّا هِيَ خَارِجَةٌ»


Bukhari-2228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 107 யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றிய போது அவர்களின் நிலத்தை விற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டது.

இது பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு (நபிமொழி) அறிவிப்பு உள்ளது.

பாடம் : 108 உயிரினத்திற்கு பதிலாக உயிரினத்தையும் அடிமைக்கு பதிலாக அடிமையையும் கடனாக (பிறகு தருவதாக) விற்பது.

ஒட்டகத்தின் சொந்தக்காரர் தமது சொந்தப் பொறுப்பில் ரபதா எனுமிடத்தில் அதைத் தம்மிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இப்னு உமர் (ரலி) அவர்கள் நான்கு ஒட்டகங்களைக் கொடுத்து பயணம் செய்வதற்கேற்ற ஓர் ஒட்டகத்தை விலைக்கு வாங்கினார்கள்.

சில நேரங்களில் ஓர் ஓட்டகம் இரண்டு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக இருக்கலாம்! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இரண்டு ஒட்டகங்களுக்குப் பகரமாக ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். அப்போது, ஓர் ஒட்டகத்தை மட்டும் கொடுத்து விட்டு, மற்றொன்றை அல்லாஹ் நாடினால் தாமதமின்றி நாளை உம்மிடம் தருகிறேன்! என்று கூறினார்கள்.

இரண்டு ஒட்டகத்திற்கு ஓர் ஒட்டகம் இரண்டு ஆட்டிற்கு ஓர் ஆடு என்று கடனாக வாங்கினாலும் உயிரினத்தில் வட்டி என்பதில்லை! என்று சயீத்

«كَانَ فِي السَّبْيِ صَفِيَّةُ فَصَارَتِ الى دَحْيَةَ الكَلْبِيِّ، ثُمَّ صَارَتِ الى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-2227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 106 சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.

2227. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறினான்.

ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34


ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ


Bukhari-2226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 105 மதுபான வியாபரம் (மதுபானம் விற்பதோ வாங்குவதோ) ஹராம்- தடைசெய்யப்பட்டதாகும்.

மதுபான வியாபாரத்தை (மது விற்பதையும், வாங்குவதையும்) நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2226. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகரா அத்தியாயத்தின் (வட்டியைத் தடை செய்யும் வசனத்திலிருந்து இறுதி வசனம் வரை இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் (மக்களிடம்) வந்து, ‘மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது!’ என்றார்கள்.
Book : 34


لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ البَقَرَةِ عَنْ آخِرِهَا، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «حُرِّمَتِ التِّجَارَةُ فِي الخَمْرِ»


Bukhari-2225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 104

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும், விற்கத்தகாத உருவங்களும்.

2225. ஸயீத் பின் அபுல்ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தபோது ஒருவர் வந்து, ‘அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். ‘யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால், வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும் வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்றார்.

கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!’ என்றார்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ இமாம்) கூறுகிறார்:

இந்த ஒரு ஹதீஸை, நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபூஅரூபா (ரஹ்) அவர்கள் செவியேற்றுள்ளார்.

அத்தியாயம்: 34


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ: يَا أَبَا عَبَّاسٍ، إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي، وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لاَ أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً، فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً، وَاصْفَرَّ وَجْهُهُ، فَقَالَ: وَيْحَكَ، إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ، فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ، كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ


Bukhari-2224

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2224. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :34


«قَاتَلَ اللَّهُ يَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا»،


Next Page » « Previous Page