Author: Farook

Bukhari-2167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2167. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘நபித்தோழர்கள் உணவுப் பொருட்களைக் கடை வீதி துவங்கும் இடத்தில் வாங்கி அதே இடத்தில் விற்று வந்தனர்; எனவே, கடைத் தெருவுக்குள் கொண்டு செல்லாமல் வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!’
Book :34


«كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ، فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ»


Bukhari-2166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72 வியாபாரிகளை எதிர் கொள்வதற்குரிய எல்லை.

2166. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபி(ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.

வணிகர்களை எதிர்கொண்டது கடைவீதி துவங்கும் இடத்தில்தான் இதைப் பின்வரும் ஹதிஸ் தெளிவு படுத்துகிறது என புகாரி கூறுகிறேன்.
Book : 34


«كُنَّا نَتَلَقَّى الرُّكْبَانَ، فَنَشْتَرِي مِنْهُمُ الطَّعَامَ فَنَهَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَبِيعَهُ حَتَّى يُبْلَغَ بِهِ سُوقُ الطَّعَامِ»


Bukhari-2165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2165. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«لاَ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ  بَعْضٍ، وَلاَ تَلَقَّوْا السِّلَعَ حَتَّى يُهْبَطَ بِهَا إِلَى السُّوقِ»


Bukhari-2164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2164. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

யாரேனும் மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கினால் (திருப்பிக் கொடுப்பதாக இருந்தால்) அத்துடன் ஒரு ஸாவு (பேரீச்சம்பழம் அல்லது உணவுப் பொருள்) சேர்த்துக் கொடுக்கட்டும்.

வியாபாரிகளை எதிர்கொண்டு வாங்குவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.
Book :34


«مَنِ اشْتَرَى مُحَفَّلَةً فَلْيَرُدَّ مَعَهَا صَاعًا»

قَالَ: «وَنَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَلَقِّي البُيُوعِ»


Bukhari-2163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2163. தாவூஸ் அறிவித்தார்.

‘கிராமராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக்கூடாது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதன் பொருள் என்ன? என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘இவர் அவருக்கு இடைத் தரகராகக் கூடாது’ என்றார்.
Book :34


سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مَا مَعْنَى قَوْلِهِ: «لاَ يَبِيعَنَّ حَاضِرٌ لِبَادٍ» فَقَالَ: لاَ يَكُنْ لَهُ سِمْسَارًا


Bukhari-2162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71 (சந்தைக்குச் சரக்கு கொண்டுவரும்) வியாபாரிகளை எதிர் கொண்டு வாங்கக் கூடாது! இத்தகைய வியாபாரம் ரத்து செய்யப்படும்;

ஏனெனில், இவ்வாறு செய்பவர் அறிந்து கொண்டே செய்தால் அவர் பாவியும் குற்றவாளியுமாவார். இது வியாபாரத்தில் செய்யும் மோசடியாகும். மோசடி கூடாத ஒன்றாகும்.

2162. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வணிகர்களை எதிர் கொண்டு வாங்குவதையும் கிராமத்திலிருந்து சரக்குக் கொண்டு வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
Book : 34


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»


Bukhari-2161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2161. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

‘கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!’ என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!’
Book :34


«نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»


Bukhari-2160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி தரகராக நின்று வாங்கிக் கொடுக்கக் கூடாது.

விற்பவர் வாங்குபவர் இருவருக்குமே இடைத் தரகராக இருக்கக் கூடாது என்று இப்னு சீரீன், இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

அரபியர், எனக்கு இந்த ஆடையை வாங்கிக் கொடு! என்று சொல்வதற்கு எனக்கு விற்றுக் கொடு! என்று கூறுவதற்குப் பயன்படுத்தும் சொல்லை (பிஃ லீ ஸவ்பன் எனும் வாக்கியத்தை) கையாள்வார்கள்! என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2160. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராம வாசிகக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34


«لاَ يَبْتَاعُ المَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ، وَلاَ تَنَاجَشُوا، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ»


Bukhari-2159

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.

2159. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.  இவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 34


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ» وَبِهِ قَالَ ابْنُ عَبَّاسٍ


Bukhari-2158

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2158. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!’ என்பதன் பொருள் என்ன?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் ‘இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)’ என பதிலளித்தார்கள்’ என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.

கிராமத்திலிருந்து (சரக்குக் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலி வாங்கிக் கொண்டு விற்றுக் கொடுக்கக் கூடாது.
Book :34


«لاَ تَلَقَّوُا الرُّكْبَانَ، وَلاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ»، قَالَ: فَقُلْتُ لِابْنِ عَبَّاسٍ: مَا قَوْلُهُ «لاَ يَبِيعُ حَاضِرٌ لِبَادٍ» قَالَ: لاَ يَكُونُ لَهُ سِمْسَارًا


Next Page » « Previous Page