Author: Farook

Bukhari-2136

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2136. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் உணவுப் பொருட்களை வாங்கினால், அது முழுமையாக அவரின் கைக்கு வந்து சேரும் வரை அதை அவர் விற்கக் கூடாது!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ»، زَادَ إِسْمَاعِيلُ: «مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ»


Bukhari-2135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 55 உணவுப் பொருள் கைக்கு வந்து சேருவதற்கு முன் அதை விற்பதும் கை வசம் இல்லாததை விற்பதும்.

2135. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!’ என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தது, உணவுப் பொருட்களுக்குத் தான்! (ஆயினும்) எல்லாப் பொருட்களுக்கும் இவ்வாறுதான் என்று கருதுகிறேன்!’
Book : 34


أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلَّا مِثْلَهُ


Bukhari-2134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2134. ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:

‘யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?’ என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) ‘என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும் வரை தரமுடியாது!’ என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர!’ என உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«الذَّهَبُ بِالذَّهَبِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ، وَالبُرُّ بِالْبُرِّ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ، وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلَّا هَاءَ وَهَاءَ»


Bukhari-2133

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரின் கைக்கு (முழுமையாக) வந்து சேரும் வரை அதை அவர் விற்கக்கூடாது!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«مَنِ ابْتَاعَ طَعَامًا فَلاَ يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ»


Bukhari-2132

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2132. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்’ என்று பதிலளித்தார்கள்.
Book :34


«نَهَى أَنْ يَبِيعَ الرَّجُلُ طَعَامًا حَتَّى يَسْتَوْفِيَهُ» قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: كَيْفَ ذَاكَ؟ قَالَ: ذَاكَ دَرَاهِمُ بِدَرَاهِمَ وَالطَّعَامُ مُرْجَأٌ


Bukhari-2131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும்.

2131. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு முன்பு வழியிலேயே விற்றதற்காக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்!’
Book : 34


«رَأَيْتُ الَّذِينَ يَشْتَرُونَ الطَّعَامَ مُجَازَفَةً، يُضْرَبُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَبِيعُوهُ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ»


Bukhari-2130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2130. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களின் ஸாவு, முத்து ஆகியவற்றில் நீ பரக்கத்தை அளிப்பாயாக!’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :34


«اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ، وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ، وَمُدِّهِمْ» يَعْنِي أَهْلَ المَدِينَةِ


Bukhari-2129

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த (அளவைகளான) ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் (-பரக்கத்) உள்ளது.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது.

2129. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம்(அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன்.’
என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لَهَا، وَحَرَّمْتُ المَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ، وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ لِمَكَّةَ»


Bukhari-2128

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 அளப்பது நல்லதே.

2128. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்.’
என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார்.
Book : 34


«كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ»


Bukhari-2127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2127. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி) தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடினேன்.

நபி(ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யுமாறு) கோரியபோது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீர் சென்று உம்முடைய பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் ரகத்தைத் தனியாகவும் இப்னு ஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் அனுப்புவீராக!’ என்றனர். அவ்வாறு நான் செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பினேன்.

நபி(ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் ‘(கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக!’ என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். என்னுடைய பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது.

மற்றோர் அறிவிப்பில் ‘பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.
Book :34


تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ حَرَامٍ وَعَلَيْهِ دَيْنٌ، فَاسْتَعَنْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى غُرَمَائِهِ أَنْ يَضَعُوا مِنْ دَيْنِهِ، فَطَلَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَلَمْ يَفْعَلُوا، فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَصَنِّفْ تَمْرَكَ أَصْنَافًا، العَجْوَةَ عَلَى حِدَةٍ، وَعَذْقَ زَيْدٍ عَلَى حِدَةٍ، ثُمَّ أَرْسِلْ إِلَيَّ»، فَفَعَلْتُ، ثُمَّ أَرْسَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ فَجَلَسَ عَلَى أَعْلاَهُ، أَوْ فِي وَسَطِهِ، ثُمَّ قَالَ: «كِلْ لِلْقَوْمِ»، فَكِلْتُهُمْ حَتَّى أَوْفَيْتُهُمُ الَّذِي لَهُمْ وَبَقِيَ تَمْرِي كَأَنَّهُ لَمْ يَنْقُصْ مِنْهُ شَيْءٌ

وَقَالَ فِرَاسٌ عَنِ الشَّعْبِيِّ، حَدَّثَنِي جَابِرٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّاهُ»،

وَقَالَ هِشَامٌ: عَنْ وَهْبٍ، عَنْ جَابِرٍ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُذَّ لَهُ فَأَوْفِ لَهُ»


Next Page » « Previous Page