Author: Farook

Bukhari-2116

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2116. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் அமீருல் மூமினீன் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ‘வாதில் குரா எனும் இடத்தில் உள்ள என்னுடைய சொத்தை கைபரில் அவருக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள் வியாபாரம் பேசி முடித்ததும் உடனடியாக அவரின் வீட்டிலிருந்து வெளியேறி, வந்தவழியே திரும்பி விட்டேன். ‘அவர்கள் வியாபாரத்தை முறித்து விடுவார்கள்’ என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்; (ஏனெனில்) ‘(வியாபாரம் பேசிய தலத்தைவிட்டுப்) பிரியும் வரை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் (வியாபாரத்தை) முறித்துக் கொள்ளும் உரிமை உள்ளது’ என்பது நபிவழியாக இருந்தது!

வியாபாரம் முடிவானதும் அவருக்கு நான் துரோகம் செய்து விட்டதாகக் கருதினேன்; ஏனெனில், மதீனாவிலிருந்து மூன்று இரவுகள் பயணத் தொலைவுள்ள ஸமூது குலத்தார் வசித்த பகுதிக்கு அவரை நான் தள்ளினேன்; அவர் (அங்கிருந்து) மூன்று இரவுகள் தொலைவுள்ள மதீனாவுக்கு என்னைத் தள்ளினார்!
Book :34


قَالَ: بِعْتُ مِنْ أَمِيرِ المُؤْمِنِينَ عُثْمَانَ بْنِ عَفَّانَ مَالًا بِالوَادِي بِمَالٍ لَهُ بِخَيْبَرَ، فَلَمَّا تَبَايَعْنَا رَجَعْتُ عَلَى عَقِبِي حَتَّى خَرَجْتُ مِنْ بَيْتِهِ خَشْيَةَ أَنْ يُرَادَّنِي البَيْعَ وَكَانَتِ السُّنَّةُ أَنَّ «المُتَبَايِعَيْنِ بِالخِيَارِ حَتَّى يَتَفَرَّقَا» قَالَ عَبْدُ اللَّهِ: فَلَمَّا وَجَبَ بَيْعِي وَبَيْعُهُ، رَأَيْتُ أَنِّي قَدْ غَبَنْتُهُ، بِأَنِّي سُقْتُهُ إِلَى أَرْضِ ثَمُودَ بِثَلاَثِ لَيَالٍ، وَسَاقَنِي إِلَى المَدِينَةِ بِثَلاَثِ لَيَالٍ


Bukhari-2115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் உடனே அன்பளிப்பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனேயே விடுதலை செய்வதும்.

ஒருவர் விற்பவரின் திருப்தியுடன் ஒரு பொருளை வாங்கி, பிறகு அவர் அதை விற்றால் அந்த வியாபாரம் செல்லும்; இலாபம் இரண்டாவதாக விற்றவருக்கு உரியது என்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2115. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்; நான் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தினருக்கு முன்னால் சென்றது. உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். மீண்டும் அது முன்னே சென்றது.

அப்போதும் உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், ‘இதை எனக்கு விற்று விடுவீராக!’ என்றார்கள். உமர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இது தங்களுக்கு உரியது!’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு இதை விலைக்குத் தாரும்!’ என்றார்கள். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘உமர் மகன்

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُنْتُ عَلَى بَكْرٍ صَعْبٍ لِعُمَرَ، فَكَانَ يَغْلِبُنِي، فَيَتَقَدَّمُ أَمَامَ القَوْمِ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، ثُمَّ يَتَقَدَّمُ، فَيَزْجُرُهُ عُمَرُ وَيَرُدُّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: «بِعْنِيهِ»، قَالَ: هُوَ لَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «بِعْنِيهِ» فَبَاعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ لَكَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، تَصْنَعُ بِهِ مَا شِئْتَ»


Bukhari-2114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2114. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் செய்யப்படும்’ அவர்கள் பொய் சொல்லி மறைத்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்கலாம். ஆனாலும் வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

நான் பதிவு செய்த ஏட்டில் இவ்வாறு இதன் மூன்று முறை உரிமையைப் பயன்படுத்தலாம் என்று உள்ளது என்று ஹம்மாம் கூறுகிறார்.
Book :34


«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا» قَالَ هَمَّامٌ: وَجَدْتُ فِي كِتَابِي «يَخْتَارُ – ثَلاَثَ مِرَارٍ -، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا فَعَسَى أَنْ يَرْبَحَا رِبْحًا، وَيُمْحَقَا بَرَكَةَ بَيْعِهِمَا»


Bukhari-2113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 விற்பவருக்கு மட்டும் முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2113. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்கக் கூடியவரும் வாங்கக் கூடியவரும் பிரியும்வரை அவர்களுக்கிடையே வியாபாரம் ஏற்படவில்லை; முறித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டு அதைப் பயன்படுத்தாவிட்டால் தவிர’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«كُلُّ بَيِّعَيْنِ لاَ بَيْعَ بَيْنَهُمَا حَتَّى يَتَفَرَّقَا، إِلَّا بَيْعَ الخِيَارِ»


Bukhari-2112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 வியாபாரம் முடிந்த பின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கினால் (அவர் முறித்துக் கொள்ளாவிட்டால்) வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.

2112. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் வியாபாரம் செய்தால் அவ்விருவரும் பிரியாமல் சேர்ந்து இருக்கும் வரை முறித்துக் கொள்ளும் உரிமை படைத்துள்ளார்கள். ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமையை வழங்கி அதை அவர் பயன்படுத்தாமல் இருவரும் ஒப்பந்தம் செய்தால் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது; இருவரும் ஒப்பந்ததைத் முடித்தபின் வியாபாரத்தை முறிக்காமல் பிரிந்துவிட்டால் அப்போதும் வியாபாரம் ஏற்பட்டுவிட்டது.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«إِذَا تَبَايَعَ الرَّجُلاَنِ، فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا الآخَرَ، فَتَبَايَعَا عَلَى ذَلِكَ، فَقَدْ وَجَبَ البَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ يَتَبَايَعَا وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا البَيْعَ، فَقَدْ وَجَبَ البَيْعُ»


Bukhari-2111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2111. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை ஒவ்வொருவரும் முறித்துக் கொள்ளும் உரிமை படைத்திருக்கிறார்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :34


«المُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَتَفَرَّقَا، إِلَّا بَيْعَ الخِيَارِ»


Bukhari-2110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்…) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர்.

2110. ‘விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை (முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மை கூறி (பொருளின் குறையை)த் தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் அவர்களுக்கு பரக்கத் செய்யப்படும். அவ்விருவரும் பொய் கூறி(எதையேனும்) மறைத்தால் அவர்களுக்கு வியாபாரத்தின் பரக்கத் நீக்கப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا»


Bukhari-2109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 வியாபாரத்தை முறித்துக் கொள்ள ஒரு காலக்கெடு கூறப்படா விட்டால் அந்த வியாபாரம் செல்லுமா?

2109. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரிடம் (உறுதிப்படுத்துவதோ முறிப்பதோ) உம்முடைய விருப்பம் என்று கூறினாலும் முறித்துக் கொள்ளும் உரிமை படைத்திருக்கிறார்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 34


«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَقُولُ أَحَدُهُمَا لِصَاحِبِهِ اخْتَرْ»، وَرُبَّمَا قَالَ: «أَوْ يَكُونُ بَيْعَ خِيَارٍ»


Bukhari-2108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2108. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும் வாங்குபவரும் பிரிவது வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ள) உரிமை உண்டு.’ என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
Book :34


«البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَفْتَرِقَا»


Bukhari-2107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 வியாபாரத்தை எவ்வளவு நாட்களில் முறித்துக் கொள்ளலாம்?

2107. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘விற்பவரும் வாங்குபவரும் (வியாபாரம் பேசிய தலத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை படைத்தவர்களாவர்! ‘வியாபாரத்தை உத்தரவாத காலத்திற்குள் முறிக்கலாம்’ என முன்பே பேசிக் கொண்டால் முறித்துக் கொள்ளலாம்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) தமக்கு விருப்பமான ஒரு பொருளை வாங்கினால் உடனே விற்றவரைப் பிரிந்து விடுவார் என்று நாஃபிவு கூறுகிறார்.
Book : 34


إِنَّ المُتَبَايِعَيْنِ بِالخِيَارِ فِي بَيْعِهِمَا مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَكُونُ البَيْعُ خِيَارًا

قَالَ نَافِعٌ: وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا اشْتَرَى شَيْئًا يُعْجِبُهُ فَارَقَ صَاحِبَهُ


Next Page » « Previous Page