Author: Farook

Bukhari-2065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 (அனுமதிக்கப்பட்ட வழிகளில்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து சிறந்தவற்றைச் செலவு செய்யுங்கள்! எனும் (2:267ஆவது) இறைவசனம்.

2065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும்!

ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்!’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 34


«إِذَا أَنْفَقَتِ المَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا»


Bukhari-2064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் அதன் பால் சென்று விடுகிறார்கள்! (எனும்62:11ஆவது வசனத்தொடர்).

அல்லாஹ் கூறுகிறான்: வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திருப்பாது! (24:27)

அன்றைய மக்கள் வியாபாரம் செய்துவந்தனர். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அவர்கள் முன்னே வந்தால் அதை நிறைவேற்றாதவரை அவர்களது வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ இறைநினைவிலிருந்து அவர்களைத் திருப்பாது! என்று கத்தாதா (ரஹ்) கூறுகிறார்கள்.

2064. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே, பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, ‘அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!’ என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!’
Book : 34


«أَقْبَلَتْ عِيرٌ وَنَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الجُمُعَةَ، فَانْفَضَّ النَّاسُ إِلَّا اثْنَيْ عَشَرَ رَجُلًا»، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا، وَتَرَكُوكَ قَائِمًا} [الجمعة: 11]


Bukhari-2063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கடல்வழிப் பயணம் மேற் கொண்டு வியாபாரம் செய்தல்.

இதில் எந்தத் தவறுமில்லை! குர்ஆனில் கடல் பயணம் குறித்து அல்லாஹ், தகுந்த காரணத்தோடுதான் (தன் அருட்கொடையாக அதை வர்ணித்துக்) கூறியுள்ளான்! என்று ம(த்)தர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு,

நீங்கள் கடலிலிருந்து மிருதுவான (புத்தம் புதிய) மாமிசத்தைப் புசிப்பதற்காகவும், அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிக் கொணர்வதற்காகவும் அவன்தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்! இன்னும் அதில் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பல்களை நீர் காண்கின்றீர்!

(பல்வேறு நாடுகளுக்கும் சென்று) அவனது அருட்கொடையை நீங்கள் தேடுவதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் (உங்களுக்கு வசப்படுத்தித் தரப்பட்டு) உள்ளன! எனும் (16:14ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள) அல்ஃபுல்க் எனும் சொல் கப்பல்களைக் குறிக்கும். ஒருமை, பன்மை ஆகிய இருநிலைகளிலும் இச்சொல் ஆளப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தில் பிளந்து கொண்டு செல்லும் என்பதைக் குறிக்க மவாகிர எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. . இந்த வசனம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள்

«ذَكَرَ رَجُلًا مِنْ بَنِي إِسْرَائِيلَ، خَرَجَ إِلَى البَحْرِ، فَقَضَى حَاجَتَهُ»


Bukhari-2062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

வணிகத்திற்காக வெளியே செல்லுதல்.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: 62:10)

2062. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அபூமூஸா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்தார்கள் போலும். அபூமூஸா (ரலி) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூமூஸா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள். அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், ‘‘அபூமூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். ‘‘அவர் திரும்பிச் சென்றுவிட்டார்” என்று கூறப்பட்டது.

உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூஸா (ரலி) அவர்களை அழைத்துவரச் செய்தார்கள். (‘‘ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டபோது) அபூமூஸா (ரலி) அவர்கள், ‘‘இவ்வாறே நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்” எனக் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘‘இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!” எனக் கூறினார்கள். உடனே அபூமூஸை (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம்

أَنَّ أَبَا مُوسَى الأَشْعَرِيَّ: اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَلَمْ يُؤْذَنْ لَهُ، وَكَأَنَّهُ كَانَ مَشْغُولًا، فَرَجَعَ أَبُو مُوسَى، فَفَرَغَ عُمَرُ، فَقَالَ: أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ، قِيلَ: قَدْ رَجَعَ، فَدَعَاهُ فَقَالَ: «كُنَّا نُؤْمَرُ بِذَلِكَ»، فَقَالَ: تَأْتِينِي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ، فَانْطَلَقَ إِلَى مَجْلِسِ الأَنْصَارِ، فَسَأَلَهُمْ، فَقَالُوا: لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا إِلَّا أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الخُدْرِيُّ، فَذَهَبَ بِأَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، فَقَالَ عُمَرُ: أَخَفِيَ هَذَا عَلَيَّ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ يَعْنِي الخُرُوجَ إِلَى تِجَارَةٍ


Bukhari-2060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 தரைவழி வாணிபமும் மற்றவையும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

அந்த இறையில்லங்களில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதிலிருந்தும், தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும், ஸகாத் கொடுப்பதிலிருந்தும் வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் திசைதிருப்பி விடுவதில்லை! (24:37)

அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்துவந்தார்கள்; ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும் போது அதை நிறைவேற்றி முடிக்காத வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை! என்று கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2060. & 2061. அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார்.

‘நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன்.

அதற்கவர்கள், ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு ‘உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!’ என அவர்கள் பதிலளித்தார்கள்!’ என்றார்கள்!’

سَأَلْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ، وَزَيْدَ بْنَ أَرْقَمَ عَنِ الصَّرْفِ، فَقَالاَ: كُنَّا تَاجِرَيْنِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّرْفِ، فَقَالَ: «إِنْ كَانَ يَدًا بِيَدٍ فَلاَ بَأْسَ، وَإِنْ كَانَ نَسَاءً فَلاَ يَصْلُحُ»


Bukhari-2059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 எப்படி சம்பாதித்தோம் என்று பொருட்படுத்தாமலிருப்பது

2059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34


«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ مَا أَخَذَ مِنْهُ، أَمِنَ الحَلاَلِ أَمْ مِنَ الحَرَامِ»


Bukhari-2058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அவர்கள் வியாபாரத்தை அல்லது வீணானவற்றைக் கண்டால் அதன்பால் சென்று விடுகிறார்கள் எனும் (62:11ஆவது) இறைவசனம்.

2058. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஷாம் நாட்டிலிருந்து ஒரு வணிகக் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது, ‘அவர்கள் வியாபாரத்தையோ வீணானவற்றையோ கண்டால் அதன் பால் செல்வார்கள்’ என்ற வசனம் அருளப்பட்டது.
Book : 34


«بَيْنَمَا نَحْنُ نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَتْ مِنَ الشَّأْمِ عِيرٌ تَحْمِلُ طَعَامًا، فَالْتَفَتُوا إِلَيْهَا حَتَّى مَا بَقِيَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا اثْنَا عَشَرَ رَجُلًا فَنَزَلَتْ»: {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا} [الجمعة: 11]


Bukhari-2057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2057. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை’ என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்’ என்றார்கள்.
Book :34


أَنَّ قَوْمًا قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ قَوْمًا يَأْتُونَنَا بِاللَّحْمِ لاَ نَدْرِي أَذَكَرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ أَمْ لاَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَمُّوا اللَّهَ عَلَيْهِ وَكُلُوهُ»


Bukhari-2056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 அடிப்படை இல்லா மனக் குழப்பங்கள் சந்தேகத்திற்குரியவைகளில் சேரா.

2056. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.

‘ஒருவர் தொழும்போது காற்றுப் பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘சப்தத்தைக் கேட்கும்வரை அல்லது நாற்றத்தை உணரும்வரை முறியாது’ என்றார்கள்.

சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் உளூ தேவையில்லை என்று ஸுஹ்ரி கூறுகிறார்.
Book : 34


شُكِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ يَجِدُ فِي الصَّلاَةِ شَيْئًا أَيَقْطَعُ الصَّلاَةَ؟ قَالَ: «لاَ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا» وَقَالَ ابْنُ أَبِي حَفْصَةَ، عَنِ الزُّهْرِيِّ: «لاَ وُضُوءَ إِلَّا فِيمَا وَجَدْتَ الرِّيحَ أَوْ سَمِعْتَ الصَّوْتَ»


Bukhari-2055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 சந்தேகத்திற்குரியவற்றை எந்த அளவுக்குத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்?

2055. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘இது ஸதக்காப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள்.

‘என்னுடைய படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்…’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 34


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ: «لَوْلاَ أَنْ تَكُونَ مِنْ صَدَقَةٍ لَأَكَلْتُهَا»

وَقَالَ هَمَّامٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَجِدُ تَمْرَةً سَاقِطَةً عَلَى فِرَاشِي»


Next Page » « Previous Page