Author: Farook

Bukhari-1887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 மதீனாவின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குடிபெயர்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 

1887. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பனூ ஸலிமா குலத்தினர் பள்ளிவாசலின் அருகே குடிபெயர விரும்பினார்கள். மதீனா(வின் மற்ற பகுதிகள்) காலியாவதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

எனவே, ‘பனூ கூட்டத்தினரே! நீங்கள் நடந்து வருவதற்கான) காலடிச் சுவடுகளின் நன்மைகளை (நற்கூலியை) எதிர் பார்க்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். எனவே, பனூ ஸலிமா குலத்தினர் (தாம் முன்பு வசித்துக் கொண்டிருந்த இடத்திலேயே) தங்கிவிட்டனர்.
Book : 29


«لاَ يَكِيدُ أَهْلَ المَدِينَةِ أَحَدٌ، إِلَّا انْمَاعَ كَمَا يَنْمَاعُ المِلْحُ فِي المَاءِ»


Bukhari-1886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1886. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ஊர் திரும்பும்போது மதீனாவி(ல் உள்ள வீடுகளி)ன் சுவர்களைக் கண்டதும் தம் வாகனத்தை விரைந்து செலுத்துவார்கள். வாகனத்தில் மேல் அவர்கள் அமர்ந்திருந்தால் அன்புடன் அதைத் தட்டிக் கொடுப்பார்கள்.
Book :29


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الإِيمَانَ لَيَأْرِزُ إِلَى المَدِينَةِ كَمَا تَأْرِزُ الحَيَّةُ إِلَى جُحْرِهَا»


Bukhari-1885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1885. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப் போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :29


«تُفْتَحُ اليَمَنُ، فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بِأَهْلِهِمْ وَمَنْ أَطَاعَهُمْ، وَالمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ، وَتُفْتَحُ الشَّأْمُ، فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ، وَالمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ، وَتُفْتَحُ العِرَاقُ، فَيَأْتِي قَوْمٌ يُبِسُّونَ، فَيَتَحَمَّلُونَ بِأَهْلِيهِمْ وَمَنْ أَطَاعَهُمْ، وَالمَدِينَةُ خَيْرٌ لَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ»


Bukhari-1884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1884. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள்.

அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக் கொல்வோம்!’ என்றனர். அப்போது ‘நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இரண்டு வகையான (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ (திருக்குர்ஆன் 04:88) என்னும் வசனம் இறங்கியது.

‘நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் இந்நகரம் தீயவர்களை வெளியேற்றிவிடும்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :29


«يَتْرُكُونَ المَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ، لاَ يَغْشَاهَا إِلَّا العَوَافِ – يُرِيدُ عَوَافِيَ السِّبَاعِ وَالطَّيْرِ – وَآخِرُ مَنْ يُحْشَرُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ، يُرِيدَانِ المَدِينَةَ، يَنْعِقَانِ بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وَحْشًا، حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الوَدَاعِ، خَرَّا عَلَى وُجُوهِهِمَا»


Bukhari-1883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 மதீனா தீயவர்களை வெளியேற்றும். 

1883. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி மொழி கொடுத்தார். மறுநாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். ‘(இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள்!’ என்று கேட்டார்.

நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். ‘மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும்! அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றி விடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள்!’ என்று கூறினார்கள்.
Book : 29


لَوْ رَأَيْتُ الظِّبَاءَ بِالْمَدِينَةِ تَرْتَعُ مَا ذَعَرْتُهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ لاَبَتَيْهَا حَرَامٌ»


Bukhari-1881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1881. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!’
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

Book :29


«لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ، إِلَّا عَلَيْهِ المَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»


Next Page » « Previous Page