Author: Farook

Bukhari-1815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 அல்லது தர்மம் செய்ய வேண்டும் எனும் (2:196ஆவது) வசனத் தொடர்.

தர்மம்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதைத்தான். 

1815. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.

ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!’ என்று கேட்டார்கள்.

நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு ‘உம் தலையை மழித்துக் கொள்ளும்!’ என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள்,

‘மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!’ என்று கூறினார்கள்.
Book : 27


وَقَفَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحُدَيْبِيَةِ وَرَأْسِي يَتَهَافَتُ قَمْلًا، فَقَالَ: «يُؤْذِيكَ هَوَامُّكَ؟»، قُلْتُ: نَعَمْ، قَالَ: ” فَاحْلِقْ رَأْسَكَ، أَوْ – قَالَ: احْلِقْ – “، قَالَ: فِيَّ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ} [البقرة: 196] إِلَى آخِرِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ تَصَدَّقْ بِفَرَقٍ بَيْنَ سِتَّةٍ، أَوْ انْسُكْ بِمَا تَيَسَّرَ»


Bukhari-1814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 உங்களில் யாரேனும் நோயாளிகளாக இருந்தால் அல்லது அவரது தலையில் துன்பம்தரும் (பேன்,பொடுகு, அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால், இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தன் தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக அவர் நோன்பு நோற்க வேண்டும்;அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்! எனும் (2: 196ஆவது) இறைவசனம்.

(இம்மூன்றில் எதைச் செய்வதற்கும்) அவர்களுக்கு சலுகை உண்டு. நோன்பு நோற்பது என்றால் மூன்று நாட்கள் நோற்க வேண்டும். 

1814. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.

‘உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?’ என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!’ என்றார்கள்.
Book : 27


«لَعَلَّكَ آذَاكَ هَوَامُّكَ»، قَالَ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْلِقْ رَأْسَكَ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوْ انْسُكْ بِشَاةٍ»


Bukhari-1813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 (கஅபாவிற்குச் செல்ல முடியாதபடி) ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டவர் மீண்டும் (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை.

யார் (தாம்பத்திய) இன்பத்தை நாடித் தமது ஹஜ்ஜை முறித்துக்கொள்கிறாரோ அவர் மீது தான் மீண்டும் (அதை) நிறைவேற்றும் கடமை உள்ளது! தக்க காரணமோ (நோய், எதிரிகளின் முற்றுகை போன்ற) வேறு ஏதுமோ ஒருவரைத் தடுத்திருந்தால் அவர் இஹ்ராமிலிருந்து விடுவார்; அவர் திரும்ப (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை. தடுக்கப்படும் போது அவரிடம் பலிப்பிராணி இருந்தால், அதை பலியிடும் இடத்திற்கு (மினாவுக்கு) அனுப்ப இயலாவிட்டால், தடுக்கப்பட்ட இடத்திலேயே அதை அறுத்து பலியிடுவார். அனுப்ப இயலுமானால் பலிப்பிராணி அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

தடுக்கப்படுபவர் தமது பலிப் பிராணியை அறுத்து பலியிட்டு விடுவார். எந்த இடத்திலிருந்தாலும் தலையை மழித்துக்கொள்வார்; (தடுக்கப்பட்ட ஹஜ்ஜை அல்லது உம்ராவை) அவர் திரும்ப நிறைவேற்ற வேண்டியதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹுதைபிய்யாவில் உம்ராவிலிருந்து தடுக்கப்பட்ட போது அவர்கள் அறுத்து பலியிட்டார்கள்; தலை மழித்துக் கொண்டார்கள்;தவாஃப் செய்வதற்கு முன்பும் பலிப்பிராணி

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ حِينَ خَرَجَ إِلَى مَكَّةَ مُعْتَمِرًا فِي الفِتْنَةِ: «إِنْ صُدِدْتُ عَنِ البَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَهَلَّ بِعُمْرَةٍ مِنْ أَجْلِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الحُدَيْبِيَةِ»، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ نَظَرَ فِي أَمْرِهِ، فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، فَالْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ الحَجَّ مَعَ العُمْرَةِ، ثُمَّ طَافَ لَهُمَا طَوَافًا وَاحِدًا، وَرَأَى أَنَّ ذَلِكَ مُجْزِيًا عَنْهُ وَأَهْدَى


Bukhari-1812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1812. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஸாலிம், அப்துல்லாஹ் ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்து) ஆட்சேபனை செய்தபோது இப்னு உமர்(ரலி) ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்.

குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள்; எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தம் தலையை மழித்தார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்!)’ என்று கூறினார்கள்.
Book :27


أَنَّ عَبْدَ اللَّهِ، وَسَالِمًا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ: «خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَمِرِينَ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ البَيْتِ، فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدْنَهُ وَحَلَقَ رَأْسَهُ»


Bukhari-1811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 (ஹஜ் அல்லது உம்ரா செய்வதிலிருந்து) தடுக்கப்படும் போது, தலையை மழித்துக்கொள்வதற்கு முன் (பலிப் பிராணியை) அறுத்து பலியிடுதல். 

1811. மிஸ்வர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும் படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.
Book : 27


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحَرَ قَبْلَ أَنْ يَحْلِقَ، وَأَمَرَ أَصْحَابَهُ بِذَلِكَ»


Bukhari-1810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல். 

1810. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால், அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்! பலிப் பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!’
Book : 27


«أَلَيْسَ حَسْبُكُمْ سُنَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ إِنْ حُبِسَ أَحَدُكُمْ عَنِ الحَجِّ، طَافَ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالمَرْوَةِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ، حَتَّى يَحُجَّ عَامًا قَابِلًا، فَيُهْدِي أَوْ يَصُومُ إِنْ لَمْ يَجِدْ هَدْيًا»


Bukhari-1809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1809. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள்.

அத்தியாயம்: 27


«قَدْ أُحْصِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَلَقَ رَأْسَهُ، وَجَامَعَ نِسَاءَهُ، وَنَحَرَ هَدْيَهُ، حَتَّى اعْتَمَرَ عَامًا قَابِلًا»


Bukhari-1807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1807. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், ‘நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காது; நீங்கள் கஅபாவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்!’ என்றனர்.

அதற்கு இப்னு உமர்(ரலி) ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் (நபி(ஸல்) அவர்களைத்) தடுத்தனர்; நபி(ஸல்) தம் பலிப்பிராணியை அறுத்து (பலியிட்டுவிட்டு)த் தலையை மழித்தார்கள்: நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன். கஅபாவிற்குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன்! அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்தது போல் நானும் செய்வேன்!’ என்றார்கள்.

பிறகு, துல்ஹுலைஃபா எனும் இடத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு, சிறிது நேரம் நடந்துவிட்டு, ‘ஹஜ் உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானவையே! நான்

أَخْبَرَاهُ أَنَّهُمَا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، لَيَالِيَ نَزَلَ الجَيْشُ بِابْنِ الزُّبَيْرِ، فَقَالاَ: لاَ يَضُرُّكَ أَنْ لاَ تَحُجَّ العَامَ، وَإِنَّا نَخَافُ أَنْ يُحَالَ بَيْنَكَ وَبَيْنَ البَيْتِ، فَقَالَ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ البَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيَهُ وَحَلَقَ رَأْسَهُ، وَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ العُمْرَةَ إِنْ شَاءَ اللَّهُ، أَنْطَلِقُ، فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ البَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ فَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ»، فَأَهَلَّ بِالعُمْرَةِ مِنْ ذِي الحُلَيْفَةِ، ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: إِنَّمَا شَأْنُهُمَا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي، فَلَمْ يَحِلَّ مِنْهُمَا حَتَّى حَلَّ يَوْمَ النَّحْرِ، وَأَهْدَى، وَكَانَ يَقُولُ: لاَ يَحِلُّ حَتَّى يَطُوفَ طَوَافًا وَاحِدًا يَوْمَ يَدْخُلُ مَكَّةَ،


Bukhari-1806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

பாடம்: 1

உம்ராவிற்குச் செல்பவர் தடுக்கப்பட்டால்…?

1806. நாஃபிவு (ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்காவிற்குப் புறப்பட்டார்கள். ‘நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!’ என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.

அத்தியாயம்: 27


«إِنْ صُدِدْتُ عَنِ البَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الحُدَيْبِيَةِ»


Bukhari-1805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 பயணி, வீட்டுக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? 

1805. உமர்(ரலி) அவர்களின் ஊழியாரான அஸ்லம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மக்கா செல்லும் வழியில் நான் அவர்களுடன் (பயணம் செய்து) இருந்தேன். (அவரின் மனைவி) ஸஃபிய்யா பின்த் அபீ உபைத் என்பவர் கடும் வேதனையில் இருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே, பயணத்தை விரைவுபடுத்தினார்கள்.

அடிவானத்தின் செம்மை மறைந்த பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

‘நபி(ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செய்வதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இரண்டு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை பார்த்திருக்கிறேன்!’ என்றும் குறிப்பிட்டார்கள்.
Book : 26


كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ، فَأَسْرَعَ السَّيْرَ حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى المَغْرِبَ وَالعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ: إِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ المَغْرِبَ وَجَمَعَ بَيْنَهُمَا»


Next Page » « Previous Page