Author: Farook

Bukhari-1415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண்டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி மனப்பூர்வமாக தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, மேடான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தனது கனிகளை அது இரட்டிப்பாகத் தருகின்றது. பெருமழை அதில் பெய்யவில்லை என்றாலும் லேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். உங்களில் ஒருவருக்கு பேரீச்சைகளும், திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருந்து அதனூடே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்க அனைத்துக் கனி வகைகளும் அதிலிருந்து அவருக்குக் கிடைத்து வருகின்றது… (2:265,266) 

1415. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

தர்மம் பற்றிய இறைவசனம் அருளப்பட்டதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் அதிகப் பொருளைத் தர்மம் செய்தார். மக்கள், ‘அவர் பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்’ எனக் கூறினார்கள். பிறகு இன்னொருவர் ஒரு ஸாவு தானியங்களைத் தர்மம் செய்தார். அப்போது மக்கள்

لَمَّا نَزَلَتْ آيَةُ الصَّدَقَةِ، كُنَّا نُحَامِلُ، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَيْءٍ كَثِيرٍ، فَقَالُوا: مُرَائِي، وَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِصَاعٍ، فَقَالُوا: إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَاعِ هَذَا، فَنَزَلَتْ: {الَّذِينَ يَلْمِزُونَ المُطَّوِّعِينَ مِنَ المُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ} [التوبة: 79]  الآيَةَ


Bukhari-1414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1414. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணிடம் அபயம் தேடியவர்களாக, நாற்பது பெண்கள் அவனை பின்தொடர்வார்கள். என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :24


«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ، بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ، ثُمَّ لاَ يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ، وَيُرَى الرَّجُلُ الوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً يَلُذْنَ بِهِ، مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ»


Bukhari-1413

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1413. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்).

நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) ‘நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?’ எனக் கேட்க அவன் ‘ஆம்’ என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்ப வில்லையா? எனக் கேட்டதும் அவன் ‘ஆம்’ என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும்.

எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்’ எனக்

كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلاَنِ أَحَدُهُمَا يَشْكُو العَيْلَةَ، وَالآخَرُ يَشْكُو قَطْعَ السَّبِيلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَمَّا قَطْعُ السَّبِيلِ: فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكَ إِلَّا قَلِيلٌ، حَتَّى تَخْرُجَ العِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ، وَأَمَّا العَيْلَةُ: فَإِنَّ السَّاعَةَ لاَ تَقُومُ، حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ، لاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا مِنْهُ، ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلاَ تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ لَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أُوتِكَ مَالًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى، ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أُرْسِلْ إِلَيْكَ رَسُولًا؟ فَلَيَقُولَنَّ: بَلَى، فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ، فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ


Bukhari-1412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :24


لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ المَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ: لاَ أَرَبَ لِي


Bukhari-1411

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல் 

1411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.’  என ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.
Book : 24


تَصَدَّقُوا، فَإِنَّهُ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا، يَقُولُ الرَّجُلُ: لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا، فَأَمَّا اليَوْمَ، فَلاَ حَاجَةَ لِي بِهَا


Bukhari-1410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 தர்மம் செய்வதில் முகஸ்துதி

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன்பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினை செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள்! (2:264)

பாடம் : 7 மோசடிப் பொருளிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.

முறையான சம்பாத்தியத்தில் கிடைத்த பொருளிலிருந்தே தவிர (தான தர்மத்தை) ஏற்றுக்கொள்வதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படி செய்வதைவிட மேலானவையாகும். மேலும் அல்லாஹ் தேவையற்றவன்; மிக்க பொறுமையாளன். (2:263)

பாடம் : 8 முறையாகச் சம்பாதித்தவற்றைத் தர்மமாக வழங்குதல்

அல்லாஹ் கூறுகிறான் : தான, தர்மங்களைப் (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையை நிலையாகக் கடைப் பிடித்து,ஸகாத்தும் கொடுத்துவருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்குத் தம் இறைவனிடத்தில்

«مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ»


Bukhari-1409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).’  இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 

Book :24


لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٍ آتَاهُ اللَّهُ مَالًا، فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الحَقِّ، وَرَجُلٍ آتَاهُ اللَّهُ حِكْمَةً، فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا


bukhari-1407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1407. & 1408. அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.

நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, ‘(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்’ என்று கூறினார்.

திரும்பிவிட்ட அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் ‘தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களே!’ என்று கேட்டேன். அதற்கவர், ‘அவர்கள் விவரமற்றவர்கள்’ எனக் கூறினார்.

1408. தோழர் என்னிடம் சொன்னார்…’ என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும் போதே நான் (குறுக்கிட்டு) ‘உம்முடைய தோழர் யார்?’ எனக் கேட்டேன். ‘நபி(ஸல்) அவர்கள் தாம்’ எனக் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் ‘அபூ தர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’

جَلَسْتُ إِلَى مَلَإٍ مِنْ قُرَيْشٍ، فَجَاءَ رَجُلٌ خَشِنُ الشَّعَرِ وَالثِّيَابِ وَالهَيْئَةِ، حَتَّى قَامَ عَلَيْهِمْ فَسَلَّمَ، ثُمَّ قَالَ: بَشِّرِ الكَانِزِينَ بِرَضْفٍ يُحْمَى عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ، ثُمَّ يُوضَعُ عَلَى حَلَمَةِ ثَدْيِ أَحَدِهِمْ حَتَّى يَخْرُجَ مِنْ نُغْضِ كَتِفِهِ، وَيُوضَعُ عَلَى نُغْضِ كَتِفِهِ حَتَّى يَخْرُجَ مِنْ حَلَمَةِ ثَدْيِهِ، يَتَزَلْزَلُ، ثُمَّ وَلَّى، فَجَلَسَ إِلَى سَارِيَةٍ، وَتَبِعْتُهُ وَجَلَسْتُ إِلَيْهِ وَأَنَا لاَ أَدْرِي مَنْ هُوَ؟ فَقُلْتُ لَهُ: لاَ أُرَى القَوْمَ إِلَّا قَدْ كَرِهُوا الَّذِي قُلْتَ، قَالَ: إِنَّهُمْ لاَ يَعْقِلُونَ شَيْئًا

1408. قَالَ لِي خَلِيلِي، قَالَ: قُلْتُ: مَنْ خَلِيلُكَ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا ذَرٍّ أَتُبْصِرُ أُحُدًا؟» قَالَ: فَنَظَرْتُ إِلَى الشَّمْسِ مَا بَقِيَ مِنَ النَّهَارِ، وَأَنَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرْسِلُنِي فِي حَاجَةٍ لَهُ، قُلْتُ: نَعَمْ، قَالَ: «مَا أُحِبُّ أَنَّ لِي مِثْلَ أُحُدٍ ذَهَبًا، أُنْفِقُهُ كُلَّهُ، إِلَّا ثَلاَثَةَ  دَنَانِيرَ» وَإِنَّ هَؤُلاَءِ لاَ يَعْقِلُونَ، إِنَّمَا يَجْمَعُونَ الدُّنْيَا، لاَ وَاللَّهِ، لاَ أَسْأَلُهُمْ دُنْيَا، وَلاَ أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ، حَتَّى أَلْقَى اللَّهَ


Bukhari-1406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1406. ஸைத் இப்னு வஹ்ப் அறிவித்தார்.

நான் ரப்தா என்னுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூ தர்(ரலி) இருந்தார். நான் அவரிடம் ‘நீர் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘நான் சிரியாவில் இருந்தபோது, தங்கத்தையோ வெள்ளியையோ சேமித்து வைத்துக் கொண்டு அதை இறைவழியில் செலவிடாதவர்கள்… என்ற (திருக்குர்ஆன் 09:34) இறைவசன(ம் இறக்கப்பட்ட காரண)த்தில் நானும் முஆவியா(ரலி)வும் கருத்து வேறுபாடு கொண்டோம்.

முஆவியா(ரலி) ‘இது வேதக்காரர்கள் விஷயமாக இறங்கியது’ என்றார். நானோ ‘நம்மையும் அவர்களையும் குறித்தே இறங்கியுள்ளது’ என்றேன். எனவே, எனக்கும் அவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான்(ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும் உஸ்மான்(ரலி) மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்கு முன் என்னைப் பார்க்காதவர்கள் போன்று என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவிற்கு அழைக்கப்பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.

நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான்(ரலி) அவர்களிடம், ‘நீர் விரும்பினால் தனியாக மதீனாவுக்கு அருகில் எங்கேனும் இருந்து கொள்ளும்!’ என்று கூறினார். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டு

مَرَرْتُ بِالرَّبَذَةِ فَإِذَا أَنَا بِأَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ لَهُ: مَا أَنْزَلَكَ مَنْزِلكَ هَذَا؟ قَالَ: ” كُنْتُ بِالشَّأْمِ، فَاخْتَلَفْتُ أَنَا وَمُعَاوِيَةُ فِي: {الَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} [التوبة: 34] ” قَالَ مُعَاوِيَةُ: نَزَلَتْ فِي أَهْلِ الكِتَابِ، فَقُلْتُ: ” نَزَلَتْ فِينَا وَفِيهِمْ، فَكَانَ بَيْنِي وَبَيْنَهُ فِي ذَاكَ، وَكَتَبَ إِلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَشْكُونِي، فَكَتَبَ إِلَيَّ عُثْمَانُ: أَنِ اقْدَمِ المَدِينَةَ فَقَدِمْتُهَا، فَكَثُرَ عَلَيَّ النَّاسُ حَتَّى كَأَنَّهُمْ لَمْ يَرَوْنِي قَبْلَ ذَلِكَ، فَذَكَرْتُ ذَاكَ لِعُثْمَانَ ” فَقَالَ لِي: إِنْ شِئْتَ تَنَحَّيْتَ، فَكُنْتَ قَرِيبًا، «فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا المَنْزِلَ، وَلَوْ أَمَّرُوا عَلَيَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ»


Bukhari-1405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக்= 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை. என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
Book :24


«لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ»


Next Page » « Previous Page