Author: Farook

Bukhari-1352

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1352. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

எனது தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார்; ஆயினும் என்னுடைய மனம் அதை விரும்பவில்லை. எனவே அவரின் உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன்.
Book :23


«دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ، فَلَمْ تَطِبْ نَفْسِي حَتَّى أَخْرَجْتُهُ، فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ»


Bukhari-1351

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

1351. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹதுப்போர் நடக்கவிருந்தபோது என்னுடைய தந்தை அன்றிரவு என்னை அழைத்து, ‘நபி (ஸல்) அவர்களின் சகாக்களில் (நாளைய போரில்) முதலில் நானே கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். மேலும் எனக்குப் பின் நான்விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன்னுடைய சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்’ என்றார். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார்.

இன்னொருவருடன் அவரை கப்ரில் விட்டுவைப்பதை என்னுடைய மனம் விரும்பவில்லை. எனவே, (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரின் உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அவரின் உடம்பு அன்று சற்று முன்னர்தான் அடக்கம் செய்யப்பட்டது போன்று இருந்தது. அவரின் காதைத் தவிர.(அதில் மாற்றம் இருந்தது).

அத்தியாயம்: 23


لَمَّا حَضَرَ أُحُدٌ دَعَانِي أَبِي مِنَ اللَّيْلِ، فَقَالَ: مَا أُرَانِي إِلَّا مَقْتُولًا فِي أَوَّلِ مَنْ يُقْتَلُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنِّي لاَ أَتْرُكُ بَعْدِي أَعَزَّ عَلَيَّ مِنْكَ، غَيْرَ نَفْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ عَلَيَّ دَيْنًا فَاقْضِ، وَاسْتَوْصِ بِأَخَوَاتِكَ خَيْرًا، «فَأَصْبَحْنَا، فَكَانَ أَوَّلَ قَتِيلٍ وَدُفِنَ مَعَهُ آخَرُ فِي قَبْرٍ، ثُمَّ لَمْ تَطِبْ نَفْسِي أَنْ أَتْرُكَهُ مَعَ الآخَرِ، فَاسْتَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ، فَإِذَا هُوَ كَيَوْمِ وَضَعْتُهُ هُنَيَّةً غَيْرَ أُذُنِهِ»


Bukhari-1350

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1350. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(நயவஞ்சகர்ககளின்தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அ(ந்த மய்யித்)தை வெளியிலெடுக்குமாறு கூறினார்கள். வெளியிலெடுக்கப்பட்டதும் அதைத் தம் மடியில் வைத்து, அதன் மீது தம் உமிழ் நீரை உமிழ்ந்து, தம் மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள்.

(இதற்குக் காரணம் என்னவோ?) அல்லாஹ்வே அறிந்தவன்! நபி(ஸல்) அவர்கள் ஆடை ஒன்றை அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு அணிவித்திருந்தார்கள். ‘அப்போது நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு மேலாடைகள் இருந்தன’ என அபூ ஹாரூனும் சுஃப்யானும் கூறுகின்றனர்.

அப்துல்லாஹ் இப்னு உபையின் மகன் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் மேனியைத் தழுவியுள்ள இவ்வாடையை என்னுடைய தந்தைக்கு அணிவியுங்களேன்’ என்று கோரி இருந்தார்.

இப்னு உபைக்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை அணிவித்தது. அவர் (பத்ருப்போரின்போது கைதான அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரமாகத்தான்’ எனப்பலரும் கருதுகிறார்கள் என சுஃப்யான் கூறுகிறார்.
Book :23


أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَ مَا أُدْخِلَ حُفْرَتَهُ «فَأَمَرَ بِهِ، فَأُخْرِجَ، فَوَضَعَهُ عَلَى رُكْبَتَيْهِ وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ»، فَاللَّهُ أَعْلَمُ وَكَانَ كَسَا عَبَّاسًا قَمِيصًا قَالَ سُفْيَانُ: وَقَالَ أَبُو هَارُونَ: وَكَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  قَمِيصَانِ، فَقَالَ لَهُ ابْنُ عَبْدِ اللَّهِ: يَا رَسُولَ اللَّهِ، أَلْبِسْ أَبِي قَمِيصَكَ الَّذِي يَلِي جِلْدَكَ، قَالَ سُفْيَانُ: «فَيُرَوْنَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلْبَسَ عَبْدَ اللَّهِ قَمِيصَهُ مُكَافَأَةً لِمَا صَنَعَ»


Bukhari-1349

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1349. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கியுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக்கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின்பும் யாருக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனக்கு மட்டும் பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது.

எனவே, இனி மக்காவிலுள்ள புற்கள் களையப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ்(ரலி) இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம்முடைய கப்ருகளுக்கும் பொற் கொல்லர்களுக்கும் தேவைப்படுகிறதே’ என்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் என்ற புல்லைத் தவிர’ என்றனர்.

அபூ ஹுரைரா(ரலி), ‘நம்முடைய கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கூறினார். ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவித்தார்.

அப்பாஸ்(ரலி), ‘நம்முடைய உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்’ என்று கூறினார்கள் என தாவூஸ் அறிவித்தார்.
Book :23


«حَرَّمَ اللَّهُ مَكَّةَ فَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَلاَ لِأَحَدٍ بَعْدِي، أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، لاَ يُخْتَلَى خَلاَهَا وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلَّا لِمُعَرِّفٍ» فَقَالَ العَبَّاسُ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِلَّا الإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا؟ فَقَالَ: إِلَّا الإِذْخِرَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِقُبُورِنَا وَبُيُوتِنَا»، وَقَالَ أَبَانُ بْنُ صَالِحٍ عَنِ الحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَقَالَ مُجَاهِدٌ: عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «لِقَيْنِهِمْ وَبُيُوتِهِمْ»


Bukhari-1348

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1348. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களைக் கண்டு இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அவரின் உடலை அவருடனிருந்தவருக்கு முன்பாக கப்ரில் வைத்தார்கள். இவ்விதம் என் தந்தையும் சிறிய தந்தையும் ஒரே துணியில் கஃபனிடப்பட்டார்கள்.
Book :23


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِقَتْلَى أُحُدٍ: «أَيُّ هَؤُلاَءِ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟» فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى رَجُلٍ قَدَّمَهُ فِي اللَّحْدِ قَبْلَ صَاحِبِهِ، وَقَالَ جَابِرٌ: فَكُفِّنَ أَبِي وَعَمِّي فِي نَمِرَةٍ وَاحِدَةٍ


Bukhari-1347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1347. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, ‘இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு. ‘இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாக்குவேன்’ எனக் கூறினார்கள்.

பின்பு இரத்தத்துடனேயே அடக்குமாறு கட்டளையிட்டார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவில்லை; இவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவுமில்லை.
Book :23


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ يَقُولُ: «أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟»، فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ، وَقَالَ: «أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ» وَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ، وَلَمْ يُغَسِّلْهُمْ


Bukhari-1346

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1346. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

உஹதுப் போரில் மரணித்தவர்களை இரத்தத்துடனேயே அடக்குங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேலும் நபி(ஸல்) அவர்கள் அவர்களைக் குளிப்பாட்டவில்லை.
Book :23


« ادْفِنُوهُمْ فِي دِمَائِهِمْ» – يَعْنِي يَوْمَ أُحُدٍ – وَلَمْ يُغَسِّلْهُمْ


Bukhari-1345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1345. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போரில் (ஷஹீதானவர்களில்) இரண்டிரண்டு நபர்களை சேர்த்து (ஒரே கப்ரில்) அடக்கம் செய்தார்கள்.
Book :23


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ»


Bukhari-1344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1344. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, ‘நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன்.

எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள்… கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பாளர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!’ என்று கூறினார்கள்.
Book :23


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا، فَصَلَّى عَلَى أَهْلِ أُحُدٍ صَلاَتَهُ عَلَى المَيِّتِ، ثُمَّ انْصَرَفَ إِلَى المِنْبَرِ، فَقَالَ: «إِنِّي فَرَطٌ لَكُمْ، وَأَنَا شَهِيدٌ عَلَيْكُمْ، وَإِنِّي وَاللَّهِ لَأَنْظُرُ إِلَى حَوْضِي الآنَ، وَإِنِّي أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الأَرْضِ – أَوْ مَفَاتِيحَ الأَرْضِ – وَإِنِّي وَاللَّهِ مَا أَخَافُ عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»


Bukhari-1343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1343. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, ‘இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?’ எனக் கேட்டார்கள்.

இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, ‘இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்’ எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை.
Book :23


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ يَقُولُ: «أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ»، فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا قَدَّمَهُ فِي اللَّحْدِ، وَقَالَ: «أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلاَءِ يَوْمَ القِيَامَةِ»، وَأَمَرَ بِدَفْنِهِمْ فِي دِمَائِهِمْ، وَلَمْ يُغَسَّلُوا، وَلَمْ يُصَلَّ عَلَيْهِمْ


Next Page » « Previous Page