ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 36 உபரித் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது.
நபி (ஸல்) அவர்கள் குறித்து (அவர்கள் இவ்வாறு தொழுவித்ததாக) அனஸ் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். (குறிப்பு: காண்க முன்சென்ற ஹதீஸ்கள்-380, 1044)
1185. & 1186. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, நான் பனூ ஸாலிம் என்ற என் சமூகத்தினருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். என் பார்வை குறைந்துவிட்டது. மழைக் காலங்களில் எனக்கும் என் சமூகத்தினரின் பள்ளிவாசலுக்கும் இடையே தண்ணீர் ஓடுகிறது. அதைக் கடந்து அவர்களின் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளது. எனவே தாங்கள் என் இல்லத்திற்கு வந்து ஒரு இடத்தில் தொழ வேண்டும். அவ்விடத்தை (என்னுடைய) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளவிரும்புகிறேன் என்றேன்.
‘செய்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு மறுநாள் நண்பகலில் அபூ பக்ர்(ரலி) உடன் வந்து (வீட்டின் உள்ளே வர) அனுமதி கோரினார். அனுமதித்தேன்.. வீட்டில் நுழைந்ததும் உட்காராமலேயே ‘உம்முடைய வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். வீட்டில் நான் விரும்பிய ஒரு பகுதியை அவர்களுக்குக் காட்டினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்தில் நின்று தக்பீர் கூறினார்கள். நாங்கள் வரிசையாக நின்றோம்.
சமீப விமர்சனங்கள்