Author: Farook

Bukhari-1168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) திற்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பது. 

1168. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் பணி படுத்தக் கொள்வார்கள்.
Book : 19


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي، وَإِلَّا اضْطَجَعَ»


Bukhari-1167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1167. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம், “இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டர்கள்” என்று சொல்லப்பட்டது.

(பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்தபோது, நான் அங்கு சென்று அவர்களைக் கண்டேன்; பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) தலைவாயில் அருகில் நிற்பதையும் கண்டேன். நான் பிலால் அவர்களிடம், “பிலாலே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் தொழுதார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘எந்த இடத்தில்?’ என்று கேட்டேன். “இந்த இரு தூண்களுக்கு மத்தியில் (தொழுதார்கள்). பிறகு வெளியே வந்து கஅபாவை முன்னோக்கியபடி தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நண்பகலில் என்னிடம் வந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம்.

أُتِيَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ : هَذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَخَلَ الْكَعْبَةَ. قَالَ: فَأَقْبَلْتُ ، فَأَجِدُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ ، وَأَجِدُ بِلَالًا عِنْدَ الْبَابِ قَائِمًا ، فَقُلْتُ: يَا بِلَالُ ، صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ؟ قَالَ: نَعَمْ ، قُلْتُ: فَأَيْنَ؟ قَالَ: بَيْنَ هَاتَيْنِ الْأُسْطُوَانَتَيْنِ ، ثُمَّ  خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ

قَالَ أَبُو عَبْدِ اللهِ : قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَوْصَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَكْعَتَيِ الضُّحَى .
وَقَالَ عِتْبَانُ : غَدَا عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ ، بَعْدَمَا امْتَدَّ النَّهَارُ ، وَصَفَفْنَا وَرَاءَهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ


Bukhari-1166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1166. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் ‘இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது’ அல்லது ‘அவர் புறப்பட்டு வந்திருக்கும்போது’ (பள்ளிவாசலுக்குள்) வந்தால், இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்” என்று (ஜுமுஆ நாள்) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 19


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ: إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالْإِمَامُ يَخْطُبُ أَوْ قَدْ خَرَجَ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ


Bukhari-1165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் தொழுதிருக்கிறேன்.
Book :19


صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْجُمُعَةِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ


Bukhari-1164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1164. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி முடித்தார்கள்.
Book :19


صَلَّى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ


Bukhari-1163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1163. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 19


إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ ، فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ


Bukhari-1162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 உபரித் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது (அவசியம் என்பது) குறித்து வந்துள்ளவை.

இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்), இக்ரிமா (ரஹ்), இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பகலில் (தொழும் உபரித் தொழுகைகளில்) நமது (மதீனா) நகர மார்க்க அறிஞர்கள் ஒவ்வோர் இரண்டு ரக்அத்களிலும் சலாம் கொடுப்பதையே நான் கண்டுள்ளேன் என யஹ்யா பின் சயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

1162. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும்.

பின்னர் ‘இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ ، يَقُولُ: إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ، ثُمَّ لِيَقُلِ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ: عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ، فَاقْدُرْهُ لِي ، وَيَسِّرْهُ لِي ، ثُمَّ بَارِكْ لِي فِيهِ ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي ، فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ، أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ، فَاصْرِفْهُ عَنِّي ، وَاصْرِفْنِي عَنْهُ ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ، ثُمَّ أَرْضِنِي. قَالَ: وَيُسَمِّي حَاجَتَهُ


Bukhari-1161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)திற்கப் பிறகு படுக்காமல் பேசிக் கொண்டிருக்கலாம். 

1161. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் தொழுகைக்கு அழைக்கும் வரை படுத்துக் கொள்வார்கள்.
Book : 19


كَانَ إِذَا صَلَّى: فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي ، وَإِلَّا اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلَاةِ


Bukhari-1160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுத பின் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வது. 

1160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
Book : 19


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ»


Bukhari-1159

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுகையை விட்டு விடாமல் தொழுதல்.

1159. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஸுப்ஹுடைய பாங்குக்கும் இகாமத்துக்குமிடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் விட்டது இல்லை.
Book :19


«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ صَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، وَرَكْعَتَيْنِ جَالِسًا، وَرَكْعَتَيْنِ بَيْنَ النِّدَاءَيْنِ وَلَمْ يَكُنْ يَدَعْهُمَا أَبَدًا»


Next Page » « Previous Page