Author: Farook

Bukhari-973

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

பெரு நாள் தினத்தில் இமாம் (தொழுகைக்குப் புறப்பட்டுச் செல்லும் போது அவருக்கு) முன்னால் கைத்தடியோ அல்லது ஈட்டியோ எடுத்துச் செல்வது. 

973. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காகத்) தொழும் திடலுக்குப் புறப்படுவார்கள். அவர்களுக்கு முன்பே கைத்தடி எடுத்துச் செல்லப் பட்டுத் தொழும் இடத்தில் அவர்களுக்கு முன்னால் நாட்டப்படும். அதை நோக்கி நபி(ஸல்) தொழுவார்கள்.

அத்தியாயம்: 13


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْدُو إِلَى المُصَلَّى وَالعَنَزَةُ بَيْنَ يَدَيْهِ تُحْمَلُ، وَتُنْصَبُ بِالْمُصَلَّى بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا»


Bukhari-972

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

பெரு நாள் தினத்தில் ஈட்டி(யைத் தடுப்பாக வைத்துக் கொண்டு அதை) நோக்கித் தொழுதல். 

972. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஓர் ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழுவார்கள்.

அத்தியாயம்: 13


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ تُرْكَزُ الحَرْبَةُ قُدَّامَهُ يَوْمَ الفِطْرِ وَالنَّحْرِ، ثُمَّ يُصَلِّي»


Bukhari-971

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

971. உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்.

பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அத்தியாயம்: 13


«كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ البِكْرَ مِنْ خِدْرِهَا، حَتَّى نُخْرِجَ الحُيَّضَ، فَيَكُنَّ خَلْفَ النَّاسِ، فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ، وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ اليَوْمِ وَطُهْرَتَهُ»


Bukhari-970

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 12

(துல்ஹஜ் 10, 11, 12 ஆகிய) மினாவின் நாட்களிலும் (துல்ஹஜ் 9 ஆம் நாள் காலையில்) அரஃபாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் போதும் தக்பீர் சொல்வது.

உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும் நாட்களில்) தமது கூடாரத்திலிருந்தபடி தக்பீர் கூறுவார்கள். அதைக் கேட்டு பள்ளியில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். கடைவீதிகளில் உள்ளவர்களும் தக்பீர் கூறுவார்கள். எந்த அளவிற்கென்றால் மினா முழுவதும் தக்பீர் முழக்கத்தால் அதிரும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் (தங்கியிருக்கும்) இந்த நாட்களில் தக்பீர் கூறுவார்கள். எல்லாத் தொழுகைகளுக்குப் பிறகும், தமது படுக்கையில் இருக்கும் போதும், தமது கூடாரத்தில் இருக்கும் போதும், அமரும் போதும் நடக்கும் போதும் அந்த அனைத்து நாட்களிலும் தக்பீர் கூறுவார்கள்.

மைமூனா (ரலி) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ஆம்) நாளில் தக்பீர் சொல்லிக் கொண்டிருப்பார்கள். (அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அபான் பின் உஸ்மான், (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) ஆகியோருக்குப் பின்னால் அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13) நாட்களில் பள்ளிவாசலில் ஆண்களுடன் பெண்களும் தக்பீர் கூறுவார்கள். 


970. முஹம்மத்

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ وَنَحْنُ غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَاتٍ عَنِ التَّلْبِيَةِ، كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «كَانَ يُلَبِّي المُلَبِّي، لاَ يُنْكَرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ المُكَبِّرُ، فَلاَ يُنْكَرُ عَلَيْهِ»


Bukhari-969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நற்செயல் (வழிபாடு)கள் புரிவதன் சிறப்பு.

(அல்குர்ஆன்: 22:28) ஆவது வசனத்தில் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்வார்கள் என்பதிலுள்ள குறிப்பிட்ட நாட்கள் என்பது (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களைக் குறிக்கும். எண்ணப்பட்ட நாட்கள் என்பது அய்யாமுத் தஷ்ரீக் நாட்களைக் குறிக்கும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

இப்னு உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர் சொல்லும் போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள்.

நஃபிலான தொழுகைக்குப் பிறகும் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள். 


969. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்;

«مَا العَمَلُ فِي أَيَّامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ؟» قَالُوا: وَلاَ الجِهَادُ؟ قَالَ: «وَلاَ الجِهَادُ، إِلَّا رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ، فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ»


Bukhari-968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 பெரு நாள் தொழுகைக்கு காலையிலேயே (நேரத்தோடு) செல்வது.

உபரித் தொழுகை (அனுமதிக்கப்படும்) நேரத்தில் எல்லாம் நாங்கள் (பெரு நாள் தொழுகையைத் தொழுது) முடித்து விடுவோம் என அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

968. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) ‘இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக. அவசரப்பட்டுவிட்டார்; அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூ புர்தா இப்னு நியார் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டை விடச் சிறந்த ஆறுமாதக் குட்டி ஒன்று உள்ளது (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்து கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று விடையளித்தார்.
Book : 13


خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنَّمَا هُوَ لَحْمٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ  النُّسُكِ فِي شَيْءٍ»، فَقَامَ خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ قَالَ: ” اجْعَلْهَا مَكَانَهَا – أَوْ قَالَ: اذْبَحْهَا – وَلَنْ تَجْزِيَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ


Bukhari-967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

967. ஸயீத் இப்னு அம்ர் ( அறிவித்தார்)

இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது நானும் அவர்களுடனிருந்தேன். ‘இப்னு உமர்(ரலி) எப்படி இருக்கிறார்?’ என்று (என்னிடம்) கேட்டார். நலமாக உள்ளார் என்று கூறினேன்.
பிறகு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘உம்மைத் தாக்கியவர் யார்?’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.

‘ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத நாளில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கியவர்’ என்று ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக் குறிப்பிட்டார்கள்.
Book :13


دَخَلَ الحَجَّاجُ عَلَى ابْنِ عُمَرَ وَأَنَا عِنْدَهُ، فَقَالَ: كَيْفَ هُوَ؟ فَقَالَ: صَالِحٌ، فَقَالَ: مَنْ أَصَابَكَ؟ قَالَ: «أَصَابَنِي مَنْ أَمَرَ بِحَمْلِ السِّلاَحِ فِي يَوْمٍ لاَ يَحِلُّ فِيهِ حَمْلُهُ» يَعْنِي الحَجَّاجَ


Bukhari-966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 பெரு நாளின் போதும் ஹரம்-புனித எல்லைக்குள்ளும் ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. பெரு நாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்கள் தடைவிதிக்கப்பட்டார்கள். ஆனால் எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர! என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

966. ஸயீத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) உடைய பாதத்தின் மையப் பகுதியில் அம்பு தாக்கி அவர்களின் பாதம் வாகனத்துடன் ஒட்டிக் கொண்ட சமயத்தில் நான் அவர்களுடன் இருந்தேன். நான் (கீழே) இறங்கி அதைப் பிடுங்கினேன். இது மினாவில் இருந்தபோது நடந்தது.
இச்செய்தி ஹஜ்ஜாஜு(பின் யூஸுஃபு)க்குக் கிடைத்து அவர் நோய் விசாரிக்க வந்தார். ‘உம்மைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (நடவடிக்கை எடுப்போம்)’ என்று அப்போது குறிப்பிட்டார்.

அதற்கு இப்னு உமர்(ரலி) ‘நீர் தாம் தாக்கினீர்’ என்றார்கள். ‘அது எப்படி?’ என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். ‘ஆயுதம் கொண்டு செல்லக் கூடாத நாளில் நீர் தாம் ஆயுதம் தரித்தீர்! ஹரம் எல்லையில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படக் கூடாது என்ற நிலையில் நீர் ஹரம் எல்லையில் ஆயுதங்களை நடமாட விட்டீர்’ என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்.
Book : 13


كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حِينَ أَصَابَهُ سِنَانُ الرُّمْحِ فِي أَخْمَصِ قَدَمِهِ، فَلَزِقَتْ قَدَمُهُ بِالرِّكَابِ، فَنَزَلْتُ، فَنَزَعْتُهَا وَذَلِكَ بِمِنًى، فَبَلَغَ الحَجَّاجَ فَجَعَلَ يَعُودُهُ، فَقَالَ الحَجَّاجُ: لَوْ نَعْلَمُ مَنْ أَصَابَكَ، فَقَالَ ابْنُ عُمَرَ: «أَنْتَ أَصَبْتَنِي» قَالَ: وَكَيْفَ؟ قَالَ: «حَمَلْتَ السِّلاَحَ فِي يَوْمٍ لَمْ يَكُنْ يُحْمَلُ فِيهِ، وَأَدْخَلْتَ السِّلاَحَ الحَرَمَ وَلَمْ يَكُنِ السِّلاَحُ يُدْخَلُ الحَرَمَ»


Bukhari-965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

965. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

‘இன்றைய தினத்தில் நாம் முதலில் செய்ய வேண்டியது தொழுவதாகும். பிறகு (இல்லம்) திரும்பி அறுத்துப் பலியிடுதலாகும். இவ்வாறு செய்கிறவர் நம்முடைய வழிமுறையில் நடந்தவராவார். தொழுகைக்கு முன்னர் அறுக்கிறவர் அறுத்தது, தம் குடும்பத்திற்காக அவர் ஒதுக்கிய மாமிசமாகும். அது குர்பானியில் சேராது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ புர்தா இப்னு நியார் என்று அழைக்கப்படும் அன்ஸார்களில் ஒருவர் ‘இறைத்தூதர் அவர்களே! நான் (முன்பே) அறுத்து விட்டேன். என்னிடம் ஓராண்டு நிறைந்த ஆட்டைவிடச் சிறந்த ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?)’ என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஒரு வயது ஆட்டுக்குப் பதிலாக அதை நீ அறுத்துக் கொள்! இனி மேல் உன்னைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது’ என்று விடையளித்தார்கள்.
Book :13


«إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لِأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسْكِ فِي شَيْءٍ» فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ: يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ، فَقَالَ: «اجْعَلْهُ مَكَانَهُ وَلَنْ تُوفِيَ أَوْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»


Bukhari-964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

964. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.
Book :13


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ الفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ تُلْقِي المَرْأَةُ خُرْصَهَا وَسِخَابَهَا»


Next Page » « Previous Page