Author: Farook

Bukhari-563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 மஃக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது. 

563. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிகள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம்..’ என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
Book : 9


«لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمُ المَغْرِبِ» قَالَ الأَعْرَابُ: وَتَقُولُ: هِيَ العِشَاءُ


Bukhari-562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

562. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

(மஃக்ரிப், இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (லுஹர், அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
Book :9


«صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعًا جَمِيعًا وَثَمَانِيًا جَمِيعًا»


Bukhari-561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

561. ஸலமா(ரலி) அறிவித்தார்.

சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுபவர்களாக இருந்தோம்.
Book :9


«كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالحِجَابِ»


Bukhari-560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

560. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.

‘நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள. சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப்படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.
Book :9


قَدِمَ الحَجَّاجُ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، فَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالهَاجِرَةِ، وَالعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالمَغْرِبَ إِذَا  وَجَبَتْ، وَالعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَؤُوا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا – أَوْ كَانَ – النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا بِغَلَسٍ»


Bukhari-559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 மஃக்ரிப் தொழுகையின் நேரம்.

நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உசெய்து) தொழுது கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

559. ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)
Book : 9


«كُنَّا نُصَلِّي المَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ»


Bukhari-558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குரிய உவமையாவது. கீழ்காணும் உவமையைப் போன்றதாகும். ஒருவர் ஒரு கூட்டத்தினரை (காலையிலிருந்து) இரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, ‘எங்களுக்கு உம்முடைய கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் மற்றும் ஒரு கூட்டத்தினரைக் கூலிக்கு அமர்த்தி இந்த எஞ்சிய நாளின் கூலியை) நான் முன்பு கூறியவாறு தருகிறேன்’ என்றார். அவர்கள் அஸர் தொழுகையின் நேரம் வரை வேலை செய்தார்கள். ‘நாங்கள் செய்த வேலை உமக்கே இருக்கட்டும்! (கூலி எதுவும் எங்களுக்குத் தேவையில்லை) என்றனர்.

இதன் பின்னர் மற்றொரு கூட்டத்தினரை அவர் கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் அந்த நாளின் எஞ்சிய பகுதியில் சூரியன் மறையும் வரை வேலை செய்தனர். அந்த இரண்டு கூட்டத்தினரின் கூலியையும் அவர்கள் பெற்றார்கள்.’ என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :9


” مَثَلُ المُسْلِمِينَ وَاليَهُودِ وَالنَّصَارَى، كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ قَوْمًا، يَعْمَلُونَ لَهُ عَمَلًا إِلَى اللَّيْلِ، فَعَمِلُوا إِلَى نِصْفِ النَّهَارِ فَقَالُوا: لاَ حَاجَةَ لَنَا إِلَى أَجْرِكَ، فَاسْتَأْجَرَ آخَرِينَ، فَقَالَ: أَكْمِلُوا بَقِيَّةَ يَوْمِكُمْ وَلَكُمُ الَّذِي شَرَطْتُ، فَعَمِلُوا حَتَّى إِذَا كَانَ حِينَ صَلاَةِ العَصْرِ، قَالُوا: لَكَ مَا عَمِلْنَا، فَاسْتَأْجَرَ قَوْمًا، فَعَمِلُوا بَقِيَّةَ يَوْمِهِمْ حَتَّى غَابَتِ الشَّمْسُ، وَاسْتَكْمَلُوا أَجْرَ الفَرِيقَيْنِ “


Bukhari-557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு ‘கீராத்’ கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு ‘கீராத்’ கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு ‘கீராத்’ வழங்கப்பட்டோம்.

‘எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் ‘உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?’ என்று கேட்பான். அவர்கள் ‘இல்லை’ என்பர். ‘அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்’

إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ العَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ، فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ، فَعَمِلُوا إِلَى صَلاَةِ العَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِينَا القُرْآنَ، فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ: أَهْلُ الكِتَابَيْنِ: أَيْ رَبَّنَا، أَعْطَيْتَ هَؤُلاَءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثَرَ عَمَلًا؟ قَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَيْءٍ؟ قَالُوا: لاَ، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ “


Bukhari-556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை ஒருவர் அடைந்து கொண்டால் (அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள்ளட்டும்). 

556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! ஸுப்ஹுத் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) சூரியன் உதிக்கு முன் அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 9


«إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ سَجْدَةً مِنْ صَلاَةِ العَصْرِ، قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَلْيُتِمَّ صَلاَتَهُ، وَإِذَا أَدْرَكَ سَجْدَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ، قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَلْيُتِمَّ صَلاَتَهُ»


Bukhari-555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

555. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். ‘என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?’ என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான்.

‘அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்’ என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :9


يَتَعَاقَبُونَ  فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الفَجْرِ وَصَلاَةِ العَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ


Bukhari-554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 அஸ்ர் தொழுகையின் சிறப்பு. 

554. ஜரீர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி ‘இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்!

சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!’ என்று கூறிவிட்டு,

‘சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!’ (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
Book : 9


كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَظَرَ إِلَى القَمَرِ لَيْلَةً – يَعْنِي البَدْرَ – فَقَالَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ، كَمَا تَرَوْنَ هَذَا القَمَرَ، لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا» ثُمَّ قَرَأَ: {وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الغُرُوبِ} [ق: 39]، قَالَ إِسْمَاعِيلُ: «افْعَلُوا لاَ تَفُوتَنَّكُمْ»


Next Page » « Previous Page