Author: Farook

Nasaayi-968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

968. அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…” (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், “இது என்ன?” நாங்கள் இதற்கு சஜ்தாச் செய்ததில்லையே! என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னார்கள்.


صَلَّيْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ صَلَاةَ الْعِشَاء يَعْنِي الْعَتَمَةَ «فَقَرَأَ سُورَةَ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا». فَلَمَّا فَرَغَ قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ هَذِهِ – يَعْنِي سَجْدَةً – مَا كُنَّا نَسْجُدُهَا. قَالَ: «سَجَدَ بِهَا أَبُو الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا خَلْفَهُ» فَلَا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Nasaayi-967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

967. “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்துள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَجَدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»


Nasaayi-966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

966. அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»


Nasaayi-965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

965. அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.

அவ்விருவரையும்விட சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«سَجَدَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَمَنْ هُوَ خَيْرٌ مِنْهُمَا»


Nasaayi-963

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

963. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»،


Nasaayi-962

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

962. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ»


Nasaayi-961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத் எனும் (84ஆவது) அத்தியாயத்தின் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

961. அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) எங்களுக்கு “இதஸ்ஸமாஉன் ஷக்கத்” எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பிய பின் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்” எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّ أَبَا هُرَيْرَةَ، «قَرَأَ بِهِمْ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا»، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُمْ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا»


Abu-Dawood-1408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1408. அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…” (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னார்கள்.


صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ: فَقَرَأَ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ السَّجْدَةُ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،، فَلَا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»


Tirmidhi-573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க போன்ற அத்தியாயங்களில் இடம்பெரும் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

573. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي اقْرَأْ بِاسْمِ رَبِّكَ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ»


Next Page » « Previous Page