Author: Farook

Tirmidhi-2649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

கல்வியை (பிறருக்குக் கற்பிக்காமல்) மறைப்பதைக் குறித்து வந்துள்ளவை.

2649. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் அவர் அறிந்திருக்கும் அறிவு ஒன்றைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டு அதை அவர் சொல்லாமல் மறைத்தால், மறுமை நாளில் அவருக்கு (நரக) நெருப்பினாலான கடிவாளம் பூட்டப்படும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி, ஜாபிர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தி “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ عَلِمَهُ ثُمَّ كَتَمَهُ أُلْجِمَ يَوْمَ القِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


Abu-Dawood-393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 145

தொழுகை நேரங்கள்.

393. கஃபாவில் இரு தடவை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் எனக்கு முன்னின்று தொழுவித்தார்கள். செருப்பின் வார் அளவிற்கு சூரியன் சாய்ந்த நேரத்தில் என்னோடு லுஹர் தொழுவித்தார்கள். ஒரு பொருளின் அது போன்ற அளவுக்கு ஆகிவிடும் போது என்னுடன் அஸர் தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். செம்மேகம் மறைந்ததும் என்னுடன் இஷா தொழுதார்கள். உண்ணுவதும், குடிப்பதும் நோன்பாளிக்கு கடைசியாகி விடும் நேரத்தில் என்னுடன் பஜ்ர் தொழுதார்கள். மறுநாளானதும், ஒரு பொருளின் அளவு அது போன்று ஆகிவிட்ட நேரத்தில் என்னுடன் லுஹர் தொழுதார்கள். ஒரு பொருளின் அது போன்று இரு மடங்கான நேரத்தில் என்னுடன் அஸர் தொழுதார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் என்னுடன் மக்ரிபு தொழுதார்கள். இரவில் மூன்றாம் பகுதி கடந்த போது என்னுடன் இஷா தொழுதார்கள். என்னுடன் சுப்ஹ் தொழுதார்கள். அப்போது வானம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. பிறகு என்னை நோக்கி திரும்பி, முஹம்மதே! இத்தொழுகை உமக்கு முன்னால் உள்ள இறைத் தூதர்களின் தொழுகை நேரமாகும். இவ்விரு நேரங்களுக்கிடையில் தான் தொழுகை நேரம் அடங்கியிருக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

«أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ، فَصَلَّى بِيَ الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَكَانَتْ قَدْرَ الشِّرَاكِ، وَصَلَّى بِيَ الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِيَ يَعْنِي الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، وَصَلَّى بِيَ الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ، فَلَمَّا كَانَ الْغَدُ صَلَّى بِيَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَهُ، وَصَلَّى بِي الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّهُ مِثْلَيْهِ، وَصَلَّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَصَلَّى بِيَ الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ، وَصَلَّى بِيَ الْفَجْرَ فَأَسْفَرَ» ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: «يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ»


Musnad-Ahmad-3322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3322.


أَمَّنِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عِنْدَ الْبَيْتِ مَرَّتَيْنِ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُكَ وَوَقْتُ النَّبِيِّينَ قَبْلَكَ، صَلَّى بِهِ الظُّهْرَ حِينَ كَانَ الْفَيْءُ بِقَدْرِ الشِّرَاكِ، وَصَلَّى بِهِ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، وَحَلَّ الطَّعَامُ وَالشَّرَابُ


Musnad-Ahmad-3082

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3082.


إِلا أَنَّهُ قَالَ فِي الْفَجْرِ فِي الْيَوْمِ الثَّانِي: «لَا أَدْرِي أَيَّ شَيْءٍ قَالَ» [ص:205] وَقَالَ فِي الْعِشَاءِ: «صَلَّى بِي حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلِ»


Musnad-Ahmad-3081

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3081.


أَمَّنِي جِبْرِيلُ عِنْدَ الْبَيْتِ، فَصَلَّى بِي الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَكَانَتْ بِقَدْرِ الشِّرَاكِ، ثُمَّ صَلَّى بِي الْعَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ، ثُمَّ صَلَّى بِي الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، ثُمَّ صَلَّى بِي الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ صَلَّى بِي الْفَجْرَ حِينَ حَرُمَ الطَّعَامُ وَالشَّرَابُ عَلَى الصَّائِمِ، ثُمَّ صَلَّى الْغَدَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ، ثُمَّ صَلَّى بِي الْعَصْرَ حِينَ صَارَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ، ثُمَّ صَلَّى بِي الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ، ثُمَّ صَلَّى بِي الْعِشَاءَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ، ثُمَّ صَلَّى بِي الْفَجْرَ فَأَسْفَرَ، ثُمَّ الْتَفَتَ إِلَيَّ فَقَالَ: يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، الْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ


Tirmidhi-149

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

149.

ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَمَّنِي جِبْرِيلُ عِنْدَ البَيْتِ مَرَّتَيْنِ، فَصَلَّى الظُّهْرَ فِي الأُولَى مِنْهُمَا حِينَ كَانَ الفَيْءُ مِثْلَ الشِّرَاكِ، ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ كُلُّ شَيْءٍ مِثْلَ ظِلِّهِ، ثُمَّ صَلَّى المَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ وَأَفْطَرَ الصَّائِمُ، ثُمَّ صَلَّى العِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ، ثُمَّ صَلَّى الفَجْرَ حِينَ بَرَقَ الفَجْرُ، وَحَرُمَ الطَّعَامُ عَلَى الصَّائِمِ، وَصَلَّى المَرَّةَ الثَّانِيَةَ الظُّهْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَهُ لِوَقْتِ العَصْرِ بِالأَمْسِ، ثُمَّ صَلَّى العَصْرَ حِينَ كَانَ ظِلُّ كُلِّ شَيْءٍ مِثْلَيْهِ، ثُمَّ صَلَّى المَغْرِبَ لِوَقْتِهِ الأَوَّلِ، ثُمَّ صَلَّى العِشَاءَ الآخِرَةَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ صَلَّى الصُّبْحَ حِينَ أَسْفَرَتِ الأَرْضُ، ثُمَّ التَفَتَ إِلَيَّ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، هَذَا وَقْتُ الأَنْبِيَاءِ مِنْ قَبْلِكَ، وَالوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ الوَقْتَيْنِ


Musnad-Ahmad-24409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில் ருகூஉ தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவா்: ஆயிஷா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ سَبْعًا فِي الرَّكْعَةِ الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ، سِوَى تَكْبِيرَتَيِ الرُّكُوعِ»


Musnad-Ahmad-24362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இருபெருநாள் தொழுகைகளிலும் (கிராஅத்) குர்ஆன் ஓதுவதற்கு முன், முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ سَبْعًا، وَخَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ»


Ibn-Majah-1280

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புபெருநாள், உள்ஹியா பெருநாள் போன்ற (இருபெருநாள்) தொழுகைகளில் ருகூஉ தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறனார்கள்.

அறிவிப்பவா்: ஆயிஷா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْفِطْرِ وَالْأَضْحَى سَبْعًا وَخَمْسًا، سِوَى تَكْبِيرَتَيِ الرُّكُوعِ»


Abu-Dawood-1150

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1150. ஹதீஸ் எண்-1149 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “ருகூஉ தக்பீர்கள் போக” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


سِوَى تَكْبِيرَتَيِ الرُّكُوعِ


Next Page » « Previous Page