Author: Farook

muwatta-malik-528

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

528. என் வீட்டிற்கும், என் பிரசங்க மேடைக்கும் மத்தியில் உள்ள இடம் சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என் பிரசங்கமே (மறுமையில் உள்ள) என் தடாகத்தின் மீது உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»


muwatta-malik-526

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

526. கிப்லாவின் திசையை முன்னோக்கி விட்டால், கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட (அதாவது பூமி முழுதும்) கிப்லாவாகும் என உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ إِذَا تُوُجِّهَ قِبَلَ الْبَيْتِ»


muwatta-malik-525

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

525. மதீனாவிற்கு வந்த பின் நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி 16 மாதங்கள் தொழுதனர். பின்பு பத்ருப் போருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் கிப்லா (வின் திசை) மாற்றப்பட்டது என ஸயீத் இப்னு முஸய்யப் அறிவிக்கின்றார்கள்.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ أَنْ قَدِمَ الْمَدِينَةَ، سِتَّةَ عَشَرَ شَهْرًا، نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ. ثُمَّ حُوِّلَتِ الْقِبْلَةُ قَبْلَ بَدْرٍ بِشَهْرَيْنِ»


muwatta-malik-524

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 127

‘கிப்லா’ பற்றி வந்துள்ளவை.

524. குபா என்ற இடத்தில் மக்கள் சுப்ஹு தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, ‘கஅபாவை முன்னோக்கிட கட்டளையிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்கள் மீது சென்ற இரவு இறக்கப்பட்டுள்ளது. எனவே, கஅபாவை முன்னோக்குங்கள் என்று கூறினார். மக்களின் முகங்களோ (ஷாமை) சிரியாவை நோக்கி இருந்தது. உடனே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


بَيْنَمَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلَاةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبَلُوهَا»، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ


muwatta-malik-523

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

523. நபி(ஸல்) அவர்கள் கிப்லாவின் (திசை) சுவற்றில் எச்சிலையோ, காரல் எச்சிலையோ, சளியையோ கண்டால் நபி(ஸல்) அவர்கள் அதை சுரண்டுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ بُصَاقًا أَوْ مُخَاطًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ»


muwatta-malik-522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 126

‘கிப்லா’ திசையில் எச்சில் துப்புவது கூடாது

522. நபி(ஸல்) அவர்கள் கிப்லா – (திசை) சுவற்றில் காரல் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டினார்கள். பின்பு மக்களை நோக்கியவர்களாக ‘உங்களில் ஒருவர் தொழுதால் தன் முகத்தின் முன்பாக எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தொழும் போது அவன் முன்னே இருக்கிறான்’ என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ، فَحَكَّهُ. ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»


muwatta-malik-520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

520. சிறுநீர், மலம் கழித்து கிப்லாவை முன்னோக்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அன்சாரி நபித் தோழர்களில் ஒருவர் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ»


muwatta-malik-519

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 124

மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது கூடாது

519. உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றால், மறைவுறுப்பின் மூலம் கிப்லாவை முன்னோக்குதல், பின்னோக்குதல் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கும் நிலையில் நான் எப்படி இந்த கழிவறைகளை பயன்படுத்துவது என்பதை அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான்அறிய மாட்டேன் என்று எகிப்தில் இருக்கும் போது அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் கூறியதாக, அபூதல்ஹா(ரலி) அவர்களின் அடிமை என்று கூறப்படும் ராபிஉ இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார்கள்.

(இது நஸயீ யில் உள்ளது).


أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ بِمِصْرَ يَقُولُ: وَاللَّهِ مَا أَدْرِي كَيْفَ أَصْنَعُ بِهَذِهِ الْكَرَابِيسِ؟

وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمُ الْغَائِطَ أَوِ الْبَوْلَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا بِفَرْجِهِ»


muwatta-malik-518

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

518. மக்கள் மழை கொடுக்கப்பட்ட நிலையில் காலையில் எழுந்தால், வளம் தரும் நட்சத்திரம் மூலமே மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ், மக்களுக்கு தன் கருணையில் கொடுக்க எண்ணியதை, எவரும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதன் பின் ஒருவருக்கு கொடுக்க (எவராலும்) முடியாது’ என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்தத் தகவல் தனக்கு செய்தியாக கிடைத்தது என மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் வழியாகவோ அறிவிக்கவில்லை.)


إِذَا أَصْبَحَ وَقَدْ مُطِرَ النَّاسُ، ” مُطِرْنَا بِنَوْءِ الْفَتْحِ ثُمَّ يَتْلُو هَذِهِ الْآيَةَ {مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا، وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ} [فاطر: 2]


muwatta-malik-516

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 123

நட்சத்திரங்கள் மூலம் மழை பெய்யத் தேடுவது

516. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த போது இரவு மழை பெய்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள். (தொழுகை) முடிந்த போது, மக்களை முன்னோக்கிய அவர்கள், ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான்? என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். ‘என் அடியார்களில் ஒருவர்என்னை நம்பியவராகவும், ஒருவர் என்னை மறுத்தவராகவும் காலையில் எழுகிறார்கள். ‘அல்லாஹ்வின் அருளால், அவன் கருணையினால் நாம் மழை கொடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவராக உள்ளார். இன்ன, இன்ன நட்சத்திரம் மூலமாக மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவராவார்’ என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ. فَلَمَّا انْصَرَفَ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ، قَالَ: ” أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي، وَكَافِرٌ بِي. فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ. فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ. وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ


Next Page » « Previous Page