தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6521

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பயணம் செல்லும் போது (வழியில்) பசுமையான நிலப்பரப்பைக் கண்டால் பயணம் செய்வதை நிறுத்திவிட்டு உங்கள் கால்நடைகளுக்கு அதற்குரிய பங்கை கொடுங்கள். நீங்கள் (வழியில்) வறண்டுப்போன நிலப்பரப்பைக் கண்டால் அதை (விரைவாக) கடந்து செல்லுங்கள்.

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

மேலும் நீங்கள் இரவில் ஓய்வெடுக்க விரும்பினால் பாதையின் நடுப்பகுதியில் ஓய்வெடுக்கவேண்டாம். ஏனெனில் அதுதான் மற்ற ஊர்ந்து, நடந்துசெல்லும் கால்நடைகளின் ஒதுங்குமிடமாக உள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(bazzar-6521: 6521)

حَدَّثنا نصر بن علي، أخبرنا خالد بن يزيد، حَدَّثنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ , عَنِ الرَّبِيعِ، عَن أَنَس؛ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

إِذَا سِرْتُمْ فِي أَرْضٍ خِصْبَةٍ فَأَعْطُوا الدَّوَابَّ حَقَّهَا، أَوْ حَظَّهَا، وَإِذَا سِرْتُمْ فِي أَرْضٍ جَدْبَةٍ فَانْجُوا عَلَيْهِمْ وَعَلَيْكُمْ بَالدُّلْجَةِ فَإِنَّ الأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، وَإِذَا عَرَّسْتُمْ فَلا تُعَرِّسُوا عَلَى قَارِعَةِ الطَّرِيقِ فَإِنَّهَا مَأْوَى كُلِّ دَابَّةٍ.

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُهُ يُرْوَى بِهَذَا التَّمَامِ، عَن أَنَس إلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ بَعْضَ كَلامِهِ الزُّهْرِيّ، عَن أَنَس.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6521.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2056.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஜஃபர்- ஈஸா பின் மாஹான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 4 / 503 ).எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அபூதாவூத்-2571 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.