அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அல்ஹுஜ்ஜூன் என்ற இடத்தில் நின்றவர்களாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)……..என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(bazzar-7937: 7937)حَدَّثنا مُحَمد بن بَشَّار، قَال: حَدَّثنا عَبد الوهاب، قَال: حَدَّثنا مُحَمد بن عَمْرو، عَن أبي سَلَمَة، عَن أبي هُرَيرة؛
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم وقف عام الفتح بالحجون فقال: والله إنك لأخير أرض الله وأحب أرض الله إلى الله، ولولاَ أني أخرجت منك ما خرجت وإنها لم تحل لأحد كان قبلي، ولاَ تحل لأحد بعدي، وَإنَّما أحلت لي ساعة من نهار، ثُمَّ هي حرام ساعتي هذه لا يعضد شجرها، ولاَ يحتش كلأها، ولاَ تلتقط ضالتها إلاَّ لمنشد قال: فقال رجل قال – وزعم الناس أنه عباس – يا رَسولَ اللهِ إلاَّ الإذخر فإنه لبيوتنا ولقبورنا ولعيوننا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: إلاَّ الإذخر.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7937.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா அவர்களின் அறிவிப்பை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் 2 செய்தியிலும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் 10 செய்திகளிலும் துணை ஆதாரமாக பதிவு செய்துள்ளனர்.
(பார்க்க: புகாரி-782 , 3356 , முஸ்லிம்-1452)
மேலும் பல ஹதீஸ்நூல்களின் ஆசிரியர்கள் இவர் இடம்பெறும் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.
- அப்துல்லாஹ் பின் முபாரக், முஹம்மது பின் அப்துல்லாஹ், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்ற பல அறிஞர்கள் இவரைப்பற்றி சுமாரானவர் என்று கூறியுள்ளனர். இவரின் அறிவிப்புகளை ஆதாரமாக எடுத்துள்ளனர். - மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம், யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்கத்தான், இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜவ்ஸஜானீ போன்றோர் (இவரின் சில அறிவிப்புகளில் ஏற்பட்ட தவறினால்) இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.
(யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் ஆரம்பத்தில் இவரை விமர்சித்தாலும் பிறகு இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்தார் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.நூல்: அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-4090)
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியதாக அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபூமர்யம் கூறியுள்ளார். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் இவர் அபூஸலமா வழியாக தவறாக அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். அதாவது இவர் ஒரு நேரம் அபூஸலமா கூறினார் என்றும், மற்றொரு நேரம் அபூஸலமாவிடமிருந்து அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாகவும் ஹதீஸை அறிவித்தார். இதனால் மக்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்பதில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதாக அபூபக்ர் பின் அபூகைஸமா அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/30, தஹ்தீபுல் கமால்-26/212, தாரீகுல் இஸ்லாம்-3/973, ஸியரு அஃலாமின் நுபலா-6/136, அல்காஷிஃப்-4/177, தஹ்தீபுத் தஹ்தீப்-3/662)
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் விமர்சித்தது இவர், அபூஸலமா வழியாக அறிவிக்கும் செய்தியின் விசயத்தில் தான் என்று தெரிகிறது.
(இந்த விமர்சனத்தின்படி அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இவர் அறிவித்தால் இவர் போன்று மற்றவர்கள் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு மற்றவர்கள் அறிவித்தால் இவரின் செய்தி ஏற்கப்படும். அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்காவிட்டால் இவரின் செய்தி மறுக்கப்படும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
- இவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்த நடுநிலையான ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் சுமாரானவர் என்று கருதப்படுகிறார். எனவே தான் நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பல அறிஞர்கள் இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்று கூறுவதாக அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-எண்-203)
இவர் அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரம் என்பதால் இதே செய்தி, வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலோ அல்லது ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடரிலோ வந்தால் இவரின் அறிவிப்பு ஸஹீஹுன் லிகைரிஹீ-துணை சான்றால் சரியானது என்ற தரத்தை அடையும் என்பது ஹதீஸ்கலை விதிப்படி உள்ள சட்டமாகும். எனவே தான் ஒரு செய்தியை முஹம்மது பின் அம்ர் போன்று மற்ற சரியான அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் இவரின் செய்தியை ஹஸன் ஸஹீஹ் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறுவார்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் முன்சென்ற அறிஞர்களின் குறை, நிறை விமர்சனத்தின் அடிப்படையில் இவரைப்பற்றி நம்பகமானவர், என்றாலும் சில அறிவிப்புகளில் தவறுசெய்தவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என்பதால் இவரின் செய்திகள் ஹஸன் தரம் என்றும், இவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அதை ஏற்கப்படும்; இவர் தனித்து அறிவித்திருந்தால் அதை நிறுத்திவைக்க வேண்டும். மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அது ஷாத் ஆகும் என்று கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/884, துஹ்ஃபதுல் லபீப்-201, 2/58, அல்மஸாபீஹ்-57)
கூடுதல் தகவல் பார்க்க: முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா .
சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-3925 .
சமீப விமர்சனங்கள்