தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-864

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கைப்பற்றப்பட்டு (மரணித்து) விடுவேன். நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். எனவே அவ்விரண்டிற்கு பின்னால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். காணாமல் போன பொருளை தேடப்பட்டு அது கிடைக்காமல் போவதைப் போன்று நபித்தோழர்களையும் தேடப்படும் ஒரு காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது…

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(bazzar-864: 864)

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ جَعْفَرٍ، قَالَ: نا عَلِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ: نا سُعَادُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

إِنِّي مَقْبُوضٌ وَإِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللَّهِ وَأَهْلَ بَيْتِي وإِنَّكُمْ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا وَأَنَّهُ لَنْ تَقُومَ السَّاعَةُ حَتَّى يُبْتَغَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا تُبْتَغَى الضَّالَّةُ فَلَا تُوجَدُ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-864.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-798.




إسناد فيه متهم بالوضع وهو الحارث بن عبد الله الأعور وهو متهم بالكذب

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பற்றி இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அபூ கைஸமா போன்றோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளனர். மேலும் பல அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

وقال الدارقطني : الحارث ضعيف .
تهذيب التهذيب: (1 / 331)

  • மேலும் இதில் வரும் ஸஃஆத் பின் முஆத் பலவீனமானவர்.
  • மேலும் இதில் வரும் அபூஇஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர். இவர் ஹாரிஸிடமிருந்து நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை.

மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.