தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1020

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 பஞ்சத்தின் போது இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களிடம் பிரார்த்திக்கும்படி கோரினால்… 

 இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

குறைஷிகள் இஸ்லாத்தை மறுத்தபோது அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அழிவுக்கு நெருங்கினார்கள். செத்தவற்றையும் எலும்புகளையும் கூட உண்ணலானார்கள்.

இந்நிலையில் அபூ சுஃப்யான், நபி(ஸல்) அவர்களிடம் வந்து,

‘முஹம்மதே! உறவினர்களோடு இணைந்து வாழுமாறு கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் . எனவே அல்லாஹ்விடம் துஆச் செய்வீராக!’ என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘வானம் தெளிவான புகை மூட்டத்தை வெளிப்படுத்தும் நாளை எதிர் பார்ப்பீராக!’ (திருக்குர்ஆன் 44:10) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் குரைஷிகள் நிராகரிப்பிற்கே திரும்பினார்கள். இதையே ‘அவர்களைப் பெரும்பிடியாக நாம் பிடிக்கக் கூடியநாளில்’ (திருக்குர்ஆன் 44:16) என்ற வசனம் கூறுகிறது. இது பத்ருப் போரின்போது நிறைவேறியது.

நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. ஏழு நாள்கள் மழை நீடித்தது. பெருமழை குறித்து மக்கள் முறையிட்டபோது ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக ஆக்கி விடாதே!’ என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் விலகியது. அவர்களின் சுற்றுப் புறத்தில் மழை பொழிந்தது.
Book : 15

(புகாரி: 1020)

بَابُ إِذَا اسْتَشْفَعَ المُشْرِكُونَ بِالْمُسْلِمِينَ عِنْدَ القَحْطِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ: أَتَيْتُ ابْنَ مَسْعُودٍ، فَقَالَ

إِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ، «فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا، وَأَكَلُوا المَيْتَةَ وَالعِظَامَ»، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ، فَقَالَ: يَا مُحَمَّدُ جِئْتَ تَأْمُرُ بِصِلَةِ الرَّحِمِ وَإِنَّ قَوْمَكَ هَلَكُوا، فَادْعُ اللَّهَ، فَقَرَأَ: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} [الدخان: 10] ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {يَوْمَ نَبْطِشُ البَطْشَةَ الكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ} [الدخان: 16] يَوْمَ بَدْرٍ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَزَادَ أَسْبَاطٌ، عَنْ مَنْصُورٍ، فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسُقُوا الغَيْثَ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ سَبْعًا، وَشَكَا النَّاسُ كَثْرَةَ المَطَرِ، قَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَانْحَدَرَتِ السَّحَابَةُ عَنْ رَأْسِهِ، فَسُقُوا النَّاسُ حَوْلَهُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.