பாடம் : 21 மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது இமாமுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்துவது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்தது. மக்களும் அழிந்தார்கள்’ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியே வருவதற்குள் மழை பெய்தது. அடுத்த ஜும்ஆ வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! பயணம் செல்வோர் கஷ்டப் படுகின்றனர். பாதை அடைபட்டுவிட்டது’ என்றார்.
Book : 15
بَابُ رَفْعِ النَّاسِ أَيْدِيَهُمْ مَعَ الإِمَامِ فِي الِاسْتِسْقَاءِ
قَالَ أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ
أَتَى رَجُلٌ أَعْرَابِيٌّ مِنْ أَهْلِ البَدْوِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلَكَتِ المَاشِيَةُ، هَلَكَ العِيَالُ هَلَكَ النَّاسُ، «فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ، يَدْعُو، وَرَفَعَ النَّاسُ أَيْدِيَهُمْ مَعَهُ يَدْعُونَ»، قَالَ: فَمَا خَرَجْنَا مِنَ المَسْجِدِ حَتَّى مُطِرْنَا، فَمَا زِلْنَا نُمْطَرُ حَتَّى كَانَتِ الجُمُعَةُ الأُخْرَى، فَأَتَى الرَّجُلُ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، بَشِقَ المُسَافِرُ وَمُنِعَ الطَّرِيقُ
சமீப விமர்சனங்கள்