தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1053

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 கிரகணத் தொழுகையில் ஆண்களுடன் பெண்களும் தொழுவது. 

 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு சூரிய கிரகணத்தின்போது ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்’ என்பது போல் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன்.

நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு ‘நான் இதுவரை காணாத அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன் செர்க்கம், நரகம் உட்பட, மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் சோதனை போல் அல்லது அதற்கு நெருக்கமான அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களில் ஒருவரிடம் வானவர் வந்து ‘இம்மனிதரைப் பற்றி உம்முடைய முடிவு என்ன? என்று கேட்பார். நம்பிக்கையாளர் உறுதியுடனிருந்தவர் ‘அவர்கள் முஹம்மது நபியாவார்கள். எங்களிடம் தெளிவான மார்ககத்தையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று, நம்பிப் பின் பற்றினோம்’ என்று கூறுவார். அவரிடம், நல்லவராக நீர் உறங்குவீராக! நிர் நம்பிக்கையாளராக இருந்ததை நாம் நிச்சயமாக அறிவோம்’ என்று கூறப்படும். நயவஞ்சகர் சந்தேகத்திலிருந்தவர் (இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் போது) ‘மக்கள் எதையோ சொன்னார்கள்; நானும் சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது’ என்று விடையளிப்பார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 16

(புகாரி: 1053)

بَابُ صَلاَةِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ فِي الكُسُوفِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ امْرَأَتِهِ فَاطِمَةَ بِنْتِ المُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهَا قَالَتْ

أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي، فَقُلْتُ: مَا لِلنَّاسِ، فَأَشَارَتْ بِيَدِهَا إِلَى السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ: أَيْ نَعَمْ، قَالَتْ: فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الغَشْيُ، فَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي المَاءَ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا، حَتَّى الجَنَّةَ وَالنَّارَ، وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي القُبُورِ مِثْلَ – أَوْ قَرِيبًا مِنْ – فِتْنَةِ الدَّجَّالِ – لاَ أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ – يُؤْتَى أَحَدُكُمْ، فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا المُؤْمِنُ – أَوِ المُوقِنُ، لاَ أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ  أَسْمَاءُ – فَيَقُولُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا، وَأَمَّا المُنَافِقُ – أَوِ المُرْتَابُ لاَ أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ – فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.