ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பள்ளிவாயிலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். மறுநாள் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்கள் அதிகமானார்கள். மூன்றாவது இரவிலோ நான்காவது இரவிலோ மக்கள் திரண்டபோது நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. ஸுப்ஹு நேரம் வந்ததும் ‘நீங்கள் செய்ததை நிச்சயமாக நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். உங்கள்மீது இத்தொழுகை கடமையாக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வராமல் என்னைத் தடுத்துவிட்டது’ என்று கூறினார்கள். இது ஒரு ரமலான் மாதத்தில் நடந்ததாகும்.
Book :19
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى ذَاتَ لَيْلَةٍ فِي المَسْجِدِ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ، ثُمَّ صَلَّى مِنَ القَابِلَةِ، فَكَثُرَ النَّاسُ، ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَصْبَحَ قَالَ: «قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ وَلَمْ يَمْنَعْنِي مِنَ الخُرُوجِ إِلَيْكُمْ إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ وَذَلِكَ فِي رَمَضَانَ»
சமீப விமர்சனங்கள்