இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு (இறப்பு நெருங்கி, நோயின்) வேதனை அதிகமான போது, “என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் வழிதவறவேமாட்டீர்கள்” என்றார்கள்.
(நபி அவர்களின் வேதனையை அறிந்த) உமர் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; (அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.) நம்மிடம்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே! நமக்கு (அதுவே) போதும்” என்றார்கள். உடனே (அங்கிருந்த மக்கள்) கருத்து வேறுபாடு கொண்டனர். கூச்சல் அதிகரித்தது.
இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “என்னை விட்டு எழுந்து செல்லுங்கள்; என்னருகில் (இது போன்ற) சச்சரவுகள் இருப்பது தகாது” என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் மத்தியில் குறுக்கீடு ஏற்பட்டதே சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறியபடி (எங்களிடமிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.
அத்தியாயம்: 3
(புகாரி: 114)حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
لَمَّا اشْتَدَّ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ قَالَ: «ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لاَ تَضِلُّوا بَعْدَهُ» قَالَ عُمَرُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَلَبَهُ الوَجَعُ، وَعِنْدَنَا كِتَابُ اللَّهِ حَسْبُنَا. فَاخْتَلَفُوا وَكَثُرَ اللَّغَطُ، قَالَ: «قُومُوا عَنِّي، وَلاَ يَنْبَغِي عِنْدِي التَّنَازُعُ» فَخَرَجَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ: إِنَّ الرَّزِيَّةَ كُلَّ الرَّزِيَّةِ، مَا حَالَ بَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ كِتَابِهِ
Bukhari-Tamil-114.
Bukhari-TamilMisc-114.
Bukhari-Shamila-114.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . யஹ்யா பின் ஸுலைமான்-முக்ரியீ
3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-அல்குரைஷி
4 . யூனுஸ் பின் யஸீத்-அல்அய்லீ
5 . ஸுஹ்ரீ இமாம்-முஹம்மத் பின் முஸ்லிம்-இப்னு ஷிஹாப்
6 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அல்ஹுதலீ
7 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
சமீப விமர்சனங்கள்