தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1147

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. 

 அபூ ஸலமா அறிவித்தார்.

ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள்’ என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.

அத்தியாயம்: 19

(புகாரி: 1147)

بَابُ قِيَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فِي رَمَضَانَ وَغَيْرِهِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ

أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: «مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا، فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا»

قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي»


Bukhari-Tamil-1147.
Bukhari-TamilMisc-1147.
Bukhari-Shamila-1147.
Bukhari-Alamiah-1079.
Bukhari-JawamiulKalim-1085.




  • மேற்கண்ட ஹதீஸில் முதலில் நபி (ஸல்) அவர்கள் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக் அத்களாகத் தொழ வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸுக்கு இது முரண்படுவது போல் அமைந்துள்ளது.
  • இதை அடிப்படையாகக் கொண்டு இரவுத் தொழுகையை நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழலாமா? என்று சந்தேகம் ஏற்படலாம்.

இந்த அறிவிப்பு மட்டும் வந்திருந்தால் நான்கு ரக்அத்களாகத் தொழ வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்.

நூல்: இப்னு மாஜா-1177 .

  • நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களிலும் ஸலாம் கொடுப்பார்கள். ஆயினும் நான்கு ரக்அத் முடிந்ததும் சற்று இடைவெளி கொடுப்பார்கள் என்று புரிந்து கொண்டால் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான இரண்டு ஹதீஸ்களும் முரண்பாடு இல்லாமல் பொருந்திவிடும்.
  • நபி (ஸல்) அவர்கள் நான்கு நான்கு ரக்அத்களாகத் தொழுதார்கள் என்பது சந்தேகமில்லாத வகையில் உறுதி செய்யப்பட்டாலும் அவர்களின் கட்டளையும் அவர்களின் செயலும் முரண்பட்டால் அவர்களின் கட்டளையைத் தான் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • இரவுத் தொழுகையை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று அவர்கள் நமக்குத் தெளிவாக கட்டளை இட்டுள்ளதால் இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவதே சரியானதாகும். ஆனால் பகல் தொழுகைக்கு இது போல் கட்டளை இல்லாததால் நான்கு ரக் அத்கள் தொழுதால் நான்கையும் ஒரு ஸலாமில் தான் தொழ வேண்டும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.