பாடம்: 40 இரவில் கற்(பிப்)பதும் போதிப்பதும்.
ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி (ஸல்) அவர்கள் (ஆச்சரியமாக), “அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன? என்று கூறிவிட்டு, “தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்தைவிட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
அத்தியாயம்: 3
(புகாரி: 115)بَابُ العِلْمِ وَالعِظَةِ بِاللَّيْلِ
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، وَعَمْرٍو، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ هِنْدٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ
اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتَنِ، وَمَاذَا فُتِحَ مِنَ الخَزَائِنِ، أَيْقِظُوا صَوَاحِبَاتِ الحُجَرِ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»
Bukhari-Tamil-115.
Bukhari-TamilMisc-115.
Bukhari-Shamila-115.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் மூன்று அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஸதகா பின் ஃபல்-அல்மர்வஸீ
3 . ஸுஃப்யான் பின் உயைனா-இப்னு உயைனா
4 . மஃமர் பின் ராஷித்-அபூஉர்வா, 5 . அம்ர் பின் தீனார்,பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
6 . யஹ்யா பின் சயீத்-அல்அன்ஸாரீ.
7 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
8 . ஹிந்த் பின்த் ஹாரிஸ்-அல்ஃபிராஸிய்யா
9 . உம்மு ஸலமா (ரலி)-ஹிந்த் பின்த் ஹுதைஃபா
சமீப விமர்சனங்கள்