தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1167

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம், “இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டர்கள்” என்று சொல்லப்பட்டது.

(பிறகு நடந்ததை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குள்ளிருந்து) வெளியே வந்து கொண்டிருந்தபோது, நான் அங்கு சென்று அவர்களைக் கண்டேன்; பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) தலைவாயில் அருகில் நிற்பதையும் கண்டேன். நான் பிலால் அவர்களிடம், “பிலாலே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற் குள் தொழுதார்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ‘எந்த இடத்தில்?’ என்று கேட்டேன். “இந்த இரு தூண்களுக்கு மத்தியில் (தொழுதார்கள்). பிறகு வெளியே வந்து கஅபாவை முன்னோக்கியபடி தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னை வலியுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நண்பகலில் என்னிடம் வந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். அவர்கள் (எங்களுக்கு) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள்” என இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தியாயம்: 19

(புகாரி: 1167)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ: حَدَّثَنَا سَيْفٌ: سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ

أُتِيَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ : هَذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَخَلَ الْكَعْبَةَ. قَالَ: فَأَقْبَلْتُ ، فَأَجِدُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ ، وَأَجِدُ بِلَالًا عِنْدَ الْبَابِ قَائِمًا ، فَقُلْتُ: يَا بِلَالُ ، صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ؟ قَالَ: نَعَمْ ، قُلْتُ: فَأَيْنَ؟ قَالَ: بَيْنَ هَاتَيْنِ الْأُسْطُوَانَتَيْنِ ، ثُمَّ  خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ

قَالَ أَبُو عَبْدِ اللهِ : قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: أَوْصَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَكْعَتَيِ الضُّحَى .
وَقَالَ عِتْبَانُ : غَدَا عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَأَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ ، بَعْدَمَا امْتَدَّ النَّهَارُ ، وَصَفَفْنَا وَرَاءَهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ


Bukhari-Tamil-1167.
Bukhari-TamilMisc-1167.
Bukhari-Shamila-1167.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.