பாடம் : 3 தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம்.
ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டார். ‘நீர் விரும்பினால் செய்கிறேன்’ என அபூ பக்ர்(ரலி) கூறினார்.
பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்று தொழுகை நடத்த ஆரம்பித்தார். சற்று நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார். மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார். ‘அங்கேயே நிற்பீராக’ என்று நபி(ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள்.
Book : 21
بَابُ مَا يَجُوزُ مِنَ التَّسْبِيحِ وَالحَمْدِ فِي الصَّلاَةِ لِلرِّجَالِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصْلِحُ بَيْنَ بَنِي عَمْرِو بْنِ عَوْفِ بْنِ الحَارِثِ»، وَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ بِلاَلٌ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ: حُبِسَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَؤُمُّ النَّاسَ؟ قَالَ: نَعَمْ ، إِنْ شِئْتُمْ، فَأَقَامَ بِلاَلٌ الصَّلاَةَ، فَتَقَدَّمَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَصَلَّى «فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي فِي الصُّفُوفِ يَشُقُّهَا شَقًّا، حَتَّى قَامَ فِي الصَّفِّ الأَوَّلِ»، فَأَخَذَ النَّاسُ بِالتَّصْفِيحِ – قَالَ سَهْلٌ: هَلْ تَدْرُونَ مَا التَّصْفِيحُ؟ هُوَ التَّصْفِيقُ – وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرُوا التَفَتَ، فَإِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّفِّ، فَأَشَارَ إِلَيْهِ مَكَانَكَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ، ثُمَّ رَجَعَ القَهْقَرَى وَرَاءَهُ، «وَتَقَدَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى»
தங்களின் அறிவிப்புகளை இன்னும் ரமலான் நாட்களில் அதிகப்படுத்தவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.இன்னும் அதிகமான தலைப்புகளில் பயான்களை பதிவு செய்யவும்
வ அலைக்கும் ஸலாம்.
இன்ஷா அல்லாஹ். துஆச் செய்யவும்.
வ. அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இன்ஷா அல்லாஹ் இந்த பணி விரைவாக முடிய வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் ‘ஹர்ரா’ எனுமிடத்தில் தங்கி இருந்தார். அவரிடம் இன்னொரு மனிதர் வந்து ‘எனது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதை நீர் கண்டால் பிடித்து வைத்துக் கொள்வீராக’ எனக் கூறினார்.
(குடும்பத்துடன் தங்கியிருந்த அந்த மனிதர் அந்த ஒட்டகத்தைக் கண்டார். உரிமையாளரைக் காணவில்லை (அந்த ஒட்டகத்தைப் பிடித்து வைத்துக் கொண்டார்).
அந்த ஒட்டகம் நோயுற்றது. அதை அறுப்பீராக என்று அவரது மனைவி கூறிய போது அவர் மறுத்துவிட்டார்.
ஒட்டகம் செத்துவிட்டது. அப்போது அவரது மனைவி ‘இதன் தோலை உரிப்பீராக! நாமும் சாப்பிட்டு, இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்துக் கொள்வோம்’ எனக் கூறினார். அதற்கு அம்மனிதர் ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்.
இது பற்றிக் கேட்டார்.
அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘பிறரிடம் தேவையாகாத அளவுக்கு உமக்கு வசதி இருக்கிறதா? எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘அப்படியானால் அதை உண்ணுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: ஜாபிர் பின் ஸமுரா(ரலி). நூல்: அபூதாவூத் 3320, அஹ்மத் 19998
இந்தச் செய்தியின் நிலை பற்றி விளக்கவும்.ஜஸகல்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஹதீஸ் நூல்: அபூதாவூத்
இந்த ஹதீஸ் தன்மையை தெளிவுபடுத்தவும்
அல்-ஹரித் பின் முஸ்லீம் அல்-தமீமி தனது தந்தை முஸ்லீம் பின் அல்-ஹரித் அல்-தமிமியை மேற்கோள் காட்டி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் ரகசியமாகச் சொன்னார்கள்: நீங்கள் சூரியன் மறையும் தொழுகையை முடித்ததும், ‘அல்லாஹ்வே, என்னை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று சொல்லுங்கள். நேரங்கள்; நீங்கள் அதைச் சொல்லி அந்த இரவில் இறந்தால், அதிலிருந்து உங்களுக்கு பாதுகாப்பு பதிவு செய்யப்படும்; நீங்கள் விடியற்காலையில் தொழுகையை முடித்ததும், இதேபோல் சொல்லுங்கள், ஏனென்றால் நீங்கள் அன்று இறந்தால், அதிலிருந்து பாதுகாப்பு பதிவு செய்யப்படும். அல்-ஹாரித் கூறியதாக அபு சயீத் என்னிடம் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை எங்களிடம் ரகசியமாகச் சொன்னார்கள், எனவே நாங்கள் அதை எங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வழங்குகிறோம்
வ அலைக்கும் ஸலாம்
பார்க்க: அபூதாவூத்-5079 .
இந்த செய்தியை நடைமுறைப்படுத்தலாம் ஆனால் ஹதீஸாக யாருக்கும் சொல்ல வேண்டாம்
இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி தெளிவுபடுத்தியுள்ளார்
இந்த ஹதீஸை நடைமுறை படுத்தலாம்
திர்மிதீ-2572
பார்க்க: திர்மிதீ-2572
ரகசிம் என்று சொன்னால் எப்படி அதை வெளியில் சொல்வீர்கள்??
வெளியில் சொல்வது அது குடும்பத்தார்களாக இருந்தாலும் அது எப்படி ரகசியமாக ஆகும்? ??
இபாதத் என்பது பொதுவானது தான் விரும்பியவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்
யார் ரகசியம் என்று சொன்னது புரியவில்லை ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
என்னுடைய சிறிய வயதில் கீழ்க்கண்ட
நபிமொழியை ஜூம்மா பயான்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அல்லாஹ்வை நம்புவதால்,ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு விடலாமா என்று கேள்விக்கு “அல்லாஹ்வையும் நம்புங்கள்;ஒட்டகத்தையும் கட்டி வையுங்கள்”என்று நபியவர்கள் பதிலளித்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
அது ஸஹீஹான ஹதீஸாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி,இது போன்ற ஒன்று எந்த நபிமொழிகள் தொகுப்பில் உள்ளது என்பதைத் தெரியப் படுத்தவும்.
ஜஸகல்லாஹ்.
வ அலைக்கும் அலைக்கும்.
பார்க்க: இப்னு ஹிப்பான்-731 .
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன( அல்லது மொழி)வெறி என்றால் என்ன என்பது பற்றிய ஹதீஸைப் பதிவிடவும் இன்ஷா அல்லாஹ்.
வ அலைக்கும் ஸலாம்.
பார்க்க: முஸ்லிம்-3766 .
அஸ்ஸலாமு அலைக்கும்.
தாயத்து அணிதல் மற்றும் மவ்லிது பற்றிய உண்மையான ஹதீஸ்களை பதிவிட்டு அதை தேடலில் பெரும் படி தரவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அஹ்மத்-17422 . தாயத் என்று தேடுவதற்கு பதிலாக தாயத்தை என்று தேடினால் கிடைக்கும். தாயத் என்று தேடினால் சமுதாயத் என்ற வார்த்தையும் வரும். இன்ஷா அல்லாஹ் நீங்கள் கேட்டது போன்று தேடினால் கிடைக்க முயற்சி செய்கிறோம்.
வார்த்தைகளை போட்டு தேடும் வசதி பயனுள்ளதாக இருந்தது…
இப்போது search option இல்லாதது சிரமமாக உள்ளது
அஸ்ஸலாமு அலைக்கும்.
வெப்ஸைட்டில் வலது பக்கம் உள்ள பெல் பட்டனுக்கு பக்கத்தில் உள்ள லென்ஸை கிளிக் செய்யவும்.