தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1213

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 தொழும் போது எச்சில் உமிழ்வதும் வாயால் ஊதுவதும் கூடும்

நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சஜ்தாவில் ஊதியுள்ளனர் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அவர்கள் கிப்லாத் திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்ததுடன் ‘அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே, யாரேனும் தொழுது கொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம்’ எனக் கூறிவிட்டு இறங்கி வந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள்.

யாரேனும் உமிழ்ந்தால் தம் இடப்புறத்தில் உமிழட்டும்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 21

(புகாரி: 1213)

بَابُ مَا يَجُوزُ مِنَ البُصَاقِ وَالنَّفْخِ فِي الصَّلاَةِ

وَيُذْكَرُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: «نَفَخَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُجُودِهِ فِي كُسُوفٍ»

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ المَسْجِدِ، فَتَغَيَّظَ عَلَى أَهْلِ المَسْجِدِ، وَقَالَ: ” إِنَّ اللَّهَ قِبَلَ أَحَدِكُمْ، فَإِذَا كَانَ فِي صَلاَتِهِ فَلاَ يَبْزُقَنَّ – أَوْ قَالَ: لاَ يَتَنَخَّمَنَّ – ” ثُمَّ نَزَلَ فَحَتَّهَا بِيَدِهِ وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «إِذَا بَزَقَ أَحَدُكُمْ فَلْيَبْزُقْ عَلَى يَسَارِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.