தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1253

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 இலந்தையிலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கசுத்தி (உளூ) செய்வித்தல்.

சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுடைய மகன் மரணமடைந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாததால்) உளூச் செய்யாமலேயே ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

முஸ்லிம் உயிருடனிருக்கும் போதும் இறந்துவிட்டாலும் அசுத்தமாவதில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

(இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்த சடலத்தைத் தொட்டிருக்க மாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இறைநம்பிக்கையாளர் (மூமின்) அசுத்தமாவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

 உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ எனக் கூறினார்கள்.
Book : 23

(புகாரி: 1253)

بَابُ غُسْلِ المَيِّتِ وَوُضُوئِهِ بِالْمَاءِ وَالسَّدْرِ

وَحَنَّطَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ابْنًا لِسَعِيدِ بْنِ زَيْدٍ، وَحَمَلَهُ، وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «المُسْلِمُ لاَ يَنْجُسُ حَيًّا وَلاَ مَيِّتًا»

وَقَالَ سَعِيدٌ: «لَوْ كَانَ نَجِسًا مَا مَسِسْتُهُ»

وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُؤْمِنُ لاَ يَنْجُسُ»

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ ، فَأَعْطَانَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» تَعْنِي إِزَارَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.