அனஸ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் மகளின் அடக்கத்தில் கலந்து கொண்டோம். அப்போது கப்ருக்கருகில் உட்கார்ந்திருந்த நபி(ஸல்) அவர்களின் கண்கள் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன். (‘கடந்த) இரவு தம் மனைவியுடன் கூடாதவர் எவரேனும் உங்களில் உள்ளனரா?’ என்று நபி(ஸல்) வினவினார்கள்.
அபூ தல்ஹா(ரலி), ‘நான் உள்ளேன்’ என்றதும் ‘இந்தக் கப்ரில் இறங்குவீராக!’ என்றார்கள். உடனே அவர் கப்ரில் இறங்கி அடக்கம் செய்தார்.
‘லம் யுகாரிஃப்’ என்பதன் பொருள் பாவம் செய்யாதவர் என்பதுதான் என கருதுகிறேன்’ என ஃபுலைஹ் என்பவர் கூறுவதாக இப்னுல் முபாரக் குறிப்பிடுகிறார்.
யுகாரிஃப் என்பதன் பொருள் குர்ஆனில் (திருக்குர்ஆன் 06:113) லியக்தரிஃபூ எனப் பயன்படுத்தப்பட்டிருப்பதன் அடிப்படையில் பாவத்தைச் சம்பாதிக்காதவன் என்பதேயாகும் என அபூ அப்தில்லாஹ்(புகாரி) குறிப்பிடுகிறேன்.
Book :23
بَابُ مَنْ يَدْخُلُ قَبْرَ المَرْأَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
شَهِدْنَا بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عَلَى القَبْرِ، فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ، فَقَالَ: «هَلْ فِيكُمْ مِنْ أَحَدٍ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ؟» فَقَالَ أَبُو طَلْحَةَ: أَنَا، قَالَ: «فَانْزِلْ فِي قَبْرِهَا»، فَنَزَلَ فِي قَبْرِهَا فَقَبَرَهَا
قَالَ ابْنُ مُبَارَكٍ: قَالَ فُلَيْحٌ: «أُرَاهُ يَعْنِي الذَّنْبَ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: {لِيَقْتَرِفُوا} [الأنعام: 113]: أَيْ لِيَكْتَسِبُوا
சமீப விமர்சனங்கள்