இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கியுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக்கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின்பும் யாருக்கும் அனுமதிக்கப்பட மாட்டாது. எனக்கு மட்டும் பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது.
எனவே, இனி மக்காவிலுள்ள புற்கள் களையப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ்(ரலி) இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம்முடைய கப்ருகளுக்கும் பொற் கொல்லர்களுக்கும் தேவைப்படுகிறதே’ என்றதும் நபி(ஸல்) அவர்கள், ‘இத்கிர் என்ற புல்லைத் தவிர’ என்றனர்.
அபூ ஹுரைரா(ரலி), ‘நம்முடைய கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கூறினார். ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவித்தார்.
அப்பாஸ்(ரலி), ‘நம்முடைய உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்’ என்று கூறினார்கள் என தாவூஸ் அறிவித்தார்.
Book :23
بَابُ الإِذْخِرِ وَالحَشِيشِ فِي القَبْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«حَرَّمَ اللَّهُ مَكَّةَ فَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَلاَ لِأَحَدٍ بَعْدِي، أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ، لاَ يُخْتَلَى خَلاَهَا وَلاَ يُعْضَدُ شَجَرُهَا، وَلاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ تُلْتَقَطُ لُقَطَتُهَا إِلَّا لِمُعَرِّفٍ» فَقَالَ العَبَّاسُ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِلَّا الإِذْخِرَ لِصَاغَتِنَا وَقُبُورِنَا؟ فَقَالَ: إِلَّا الإِذْخِرَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لِقُبُورِنَا وَبُيُوتِنَا»، وَقَالَ أَبَانُ بْنُ صَالِحٍ عَنِ الحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، وَقَالَ مُجَاهِدٌ: عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «لِقَيْنِهِمْ وَبُيُوتِهِمْ»
சமீப விமர்சனங்கள்