தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1354 & 1355

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1354. & 1355. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு ஸய்யாதை நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் பார்க்கச் சென்றபோது அவர்களுடன் உமர்(ரலி)யும் இருந்தார். பருவ வயதை நெருங்கிவிட்ட இப்னு ஸய்யாத் பனூ மகாலாவின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

நபி(ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகிறவரை, (அவன் நபி(ஸல்) தன்னை நெருங்கியதை) உணரவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் அவனிடம் ‘நானே இறைத்தூதர் என நீ சாட்சி கூறுகிறாயா?’ எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களை நோட்டமிட்டுவிட்டு, ‘நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாவதவர்களின் நபி என நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினான்.

பிறகு இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களிடம் ‘நான் இறைத்தூதர் என நீர் சாட்சி கூறுகிறீரா?’ எனக் கேட்டான். நபி(ஸல்) அவாக்ள் அவனை அப்படியேவிட்டுவிட்டு, ‘நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுள்ளேன்’ எனக் கூறினார்கள். பிறகு ‘(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?’ எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், ‘என்னிடம் மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன’ என்றான்.

நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு. ‘நான் ஒன்றை மனதில் நினைக்கிறேன் (அது யாது)?’ எனக் கேட்டார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்கள் துகான் (44) அத்தியாயத்தின் 10வது வசனத்தை மனத்திற்குள் நினைத்தார்கள்) அதற்கு இப்னு ஸய்யாத், ‘அது துக் (புகை வெற்றிடம்)’ என்றான். (அதாவது துகான், என்பதை ‘துக்’ என அரை குறையாகச் சொன்னான்) உடனே நபி(ஸல்) அவர்கள் ‘தூர விலகிப் போ! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டிவிட முடியாது’ என்றார்கள்.

அப்போது உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! இவனை நான் கொலை செய்து விடட்டுமா?’ எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், ‘இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனாக இல்லையெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை’ எனக் கூறினார்கள்.

சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களும் உபையுப்னு கஅபு(ரலி)யும் இப்னு ஸய்யாத் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதையேனும் செவியேற்க வேண்டும் என விரும்பினார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டு (வெல்வெட்டு)ப் போர்வையைப் போர்த்தி ஏதோ ஒரு விதமாக முணுமுணுப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்.

இப்னு ஸய்யாதின் தாயார் நபி(ஸல்) அவர்கள் ஈச்சை மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்து வீட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம் ‘ஸாஃபியே! …இது அவனுடைய பெயர் … இதோ முஹம்மது(வந்துவிட்டார்)’ என்று கூறியதும் இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பெண் அவனை(ப் பேச) விட்டிருந்தால் அவன் (தன்னுடைய நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்’ எனக் கூறினார்கள்.
Book :23

(புகாரி: 1354 & 1355)

بَابُ إِذَا أَسْلَمَ الصَّبِيُّ فَمَاتَ، هَلْ يُصَلَّى عَلَيْهِ، وَهَلْ يُعْرَضُ عَلَى الصَّبِيِّ الإِسْلاَمُ

وَقَالَ الحَسَنُ، وَشُرَيْحٌ وَإِبْرَاهِيمُ، وَقَتَادَةُ: «إِذَا أَسْلَمَ أَحَدُهُمَا فَالوَلَدُ مَعَ المُسْلِمِ» وَكَانَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَعَ أُمِّهِ مِنَ المُسْتَضْعَفِينَ، وَلَمْ يَكُنْ مَعَ أَبِيهِ عَلَى دِينِ قَوْمِهِ، وَقَالَ: «الإِسْلاَمُ يَعْلُو وَلاَ يُعْلَى»

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ

أَنَّ عُمَرَ انْطَلَقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ ابْنُ صَيَّادٍ الحُلُمَ، فَلَمْ يَشْعُرْ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ قَالَ لِابْنِ صَيَّادٍ: «تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟»، فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ، فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ، فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟ فَرَفَضَهُ وَقَالَ: «آمَنْتُ بِاللَّهِ وَبِرُسُلِهِ» فَقَالَ لَهُ: «مَاذَا تَرَى؟» قَالَ ابْنُ صَيَّادٍ: يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِّطَ عَلَيْكَ الأَمْرُ» ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا» فَقَالَ ابْنُ صَيَّادٍ: هُوَ الدُّخُّ، فَقَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: دَعْنِي يَا رَسُولَ اللَّهِ أَضْرِبْ عُنُقَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْهُ فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»

1355 – وَقَالَ سَالِمٌ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ انْطَلَقَ بَعْدَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُبَيُّ بْنُ كَعْبٍ إِلَى النَّخْلِ الَّتِي فِيهَا ابْنُ صَيَّادٍ، وَهُوَ يَخْتِلُ أَنْ يَسْمَعَ مِنْ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ ابْنُ صَيَّادٍ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُضْطَجِعٌ – يَعْنِي فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ أَوْ زَمْرَةٌ – فَرَأَتْ أمُّ ابْنِ صَيّادٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لِابْنِ صَيَّادٍ: يَا صَافِ – وَهُوَ اسْمُ ابْنِ صَيَّادٍ – هَذَا مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»

وَقَالَ شُعَيْبٌ فِي حَدِيثِهِ: فَرَفَصَهُ رَمْرَمَةٌ – أَوْ زَمْزَمَةٌ – وَقَالَ إِسْحَاقُ الكَلْبِيُّ، وَعُقَيْلٌ: رَمْرَمَةٌ، وَقَالَ مَعْمَرٌ: رَمْزَةٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.