தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1387

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்றபோது ‘நபி(ஸல்) அவர்களை எத்தனைத் துணிகளில் கஃபன் செய்தீர்கள்?’ என்று அவர் கேட்டார். ‘வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்.’ அபூ பக்ர்(ரலி) என்னிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரண மடைந்தார்கள்?’ எனக் கேட்டார்.

நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். ‘இன்று என்ன கிழமை?’ என்று கேட்டதும் நான் ‘திங்கட்கிழமை’ என்றேன். அதற்கவர் ‘இன்றிரவுக்குள் (என்னுடைய மரணம்) நிகழும் என எண்ணுகிறேன்’ என்று கூறிவிட்டுத் தாம் நோயுற்றிருந்தபோது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. ‘இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரண்டு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள்’ எனக் கூறினார்.

நான் ‘இது பழையதாயிற்றே!’ என்றேன். அதற்கவர் ‘மய்யித்தைவிட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதியுடையவர்; மேலும், அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்கே போகும்’ என்றார். பிறகு அன்று மாலை வரை மரணிக்க வில்லை. செவ்வாய் இரவில்தான் மரணித்தார். (அன்று) காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்.

அத்தியாயம்: 23

(புகாரி: 1387)

بَابُ مَوْتِ يَوْمِ الِاثْنَيْنِ

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

دَخَلْتُ عَلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: فِي كَمْ كَفَّنْتُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «فِي ثَلاَثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ» وَقَالَ لَهَا: فِي أَيِّ يَوْمٍ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: «يَوْمَ الِاثْنَيْنِ» قَالَ: فَأَيُّ يَوْمٍ هَذَا؟ قَالَتْ: «يَوْمُ الِاثْنَيْنِ» قَالَ: أَرْجُو فِيمَا بَيْنِي وَبَيْنَ اللَّيْلِ، فَنَظَرَ إِلَى ثَوْبٍ عَلَيْهِ، كَانَ يُمَرَّضُ فِيهِ بِهِ رَدْعٌ مِنْ زَعْفَرَانٍ، فَقَالَ: اغْسِلُوا ثَوْبِي هَذَا وَزِيدُوا عَلَيْهِ ثَوْبَيْنِ، فَكَفِّنُونِي فِيهَا، قُلْتُ: إِنَّ هَذَا خَلَقٌ، قَالَ: إِنَّ الحَيَّ أَحَقُّ بِالْجَدِيدِ مِنَ المَيِّتِ، إِنَّمَا هُوَ لِلْمُهْلَةِ فَلَمْ يُتَوَفَّ حَتَّى أَمْسَى مِنْ لَيْلَةِ الثُّلاَثَاءِ، وَدُفِنَ قَبْلَ أَنْ يُصْبِحَ


Bukhari-Tamil-1387.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1387.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-1264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.