பாடம்: 96
நபி (ஸல்), ஆபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் அடக்கத்தலங்கள் தொடர்பாக வந்துள்ளவை.
“பின்னர் அவனை மரணிக்கச்செய்து மண்ணறைக்குள் (கப்றுக்கு) இறைவன் அனுப்புகின்றான்” (80:21) என்று குர்ஆன் கூறுகின்றது.
மண்ணறையில் பிரேதத்தை வைப்பதற்கும் புதைப்பதற்கும் அக்பர, கபர என்பர்.
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இந்தப் பூமியை, உயிருள்ளவர்களுக்கு (வாழ) ஏற்றதாகவும் இறந்தவர்களுக்கு (புதைக்க) ஏற்றதாகவும் (கிஃபாத்) நாம் ஆக்கவில்லையா? (77:25,26)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, ‘இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களின் உயிரை என்னுடைய நெஞ்சுக்கும் தோளுக்குமிடையே அல்லாஹ் கைப்பற்றினான். என்னுடைய வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அத்தியாயம்: 23
(புகாரி: 1389)بَابُ مَا جَاءَ فِي قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ: {فَأَقْبَرَهُ} [عبس: 21]: أَقْبَرْتُ الرَّجُلَ أُقْبِرُهُ إِذَا جَعَلْتَ لَهُ قَبْرًا، وَقَبَرْتُهُ: دَفَنْتُهُ {كِفَاتًا} [المرسلات: 25]: يَكُونُونَ فِيهَا أَحْيَاءً، وَيُدْفَنُونَ فِيهَا أَمْوَاتًا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي سُلَيْمَانُ، عَنْ هِشَامٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا أَبُو مَرْوَانَ يَحْيَى بْنُ أَبِي زَكَرِيَّاءَ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَتَعَذَّرُ فِي مَرَضِهِ: «أَيْنَ أَنَا اليَوْمَ، أَيْنَ أَنَا غَدًا» اسْتِبْطَاءً لِيَوْمِ عَائِشَةَ، فَلَمَّا كَانَ يَوْمِي، قَبَضَهُ اللَّهُ بَيْنَ سَحْرِي وَنَحْرِي وَدُفِنَ فِي بَيْتِي
Bukhari-Tamil-1389.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1389.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்