ஸைத் இப்னு வஹ்ப் அறிவித்தார்.
நான் ரப்தா என்னுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூ தர்(ரலி) இருந்தார். நான் அவரிடம் ‘நீர் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘நான் சிரியாவில் இருந்தபோது, தங்கத்தையோ வெள்ளியையோ சேமித்து வைத்துக் கொண்டு அதை இறைவழியில் செலவிடாதவர்கள்… என்ற (திருக்குர்ஆன் 09:34) இறைவசன(ம் இறக்கப்பட்ட காரண)த்தில் நானும் முஆவியா(ரலி)வும் கருத்து வேறுபாடு கொண்டோம்.
முஆவியா(ரலி) ‘இது வேதக்காரர்கள் விஷயமாக இறங்கியது’ என்றார். நானோ ‘நம்மையும் அவர்களையும் குறித்தே இறங்கியுள்ளது’ என்றேன். எனவே, எனக்கும் அவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான்(ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும் உஸ்மான்(ரலி) மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்கு முன் என்னைப் பார்க்காதவர்கள் போன்று என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவிற்கு அழைக்கப்பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.
நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான்(ரலி) அவர்களிடம், ‘நீர் விரும்பினால் தனியாக மதீனாவுக்கு அருகில் எங்கேனும் இருந்து கொள்ளும்!’ என்று கூறினார். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மேலும், எனக்கு ஓர் அபிஸினியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவி தாழ்த்திக் கட்டுப்படுவேன்’ என்று கூறினார்.
Book :24
حَدَّثَنَا عَلِيُّ بْنُ أَبِي هَاشِمٍ، سَمِعَ هُشَيْمًا، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ
مَرَرْتُ بِالرَّبَذَةِ فَإِذَا أَنَا بِأَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ لَهُ: مَا أَنْزَلَكَ مَنْزِلكَ هَذَا؟ قَالَ: ” كُنْتُ بِالشَّأْمِ، فَاخْتَلَفْتُ أَنَا وَمُعَاوِيَةُ فِي: {الَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} [التوبة: 34] ” قَالَ مُعَاوِيَةُ: نَزَلَتْ فِي أَهْلِ الكِتَابِ، فَقُلْتُ: ” نَزَلَتْ فِينَا وَفِيهِمْ، فَكَانَ بَيْنِي وَبَيْنَهُ فِي ذَاكَ، وَكَتَبَ إِلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَشْكُونِي، فَكَتَبَ إِلَيَّ عُثْمَانُ: أَنِ اقْدَمِ المَدِينَةَ فَقَدِمْتُهَا، فَكَثُرَ عَلَيَّ النَّاسُ حَتَّى كَأَنَّهُمْ لَمْ يَرَوْنِي قَبْلَ ذَلِكَ، فَذَكَرْتُ ذَاكَ لِعُثْمَانَ ” فَقَالَ لِي: إِنْ شِئْتَ تَنَحَّيْتَ، فَكُنْتَ قَرِيبًا، «فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا المَنْزِلَ، وَلَوْ أَمَّرُوا عَلَيَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ»
சமீப விமர்சனங்கள்