தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1415

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண்டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

யார் அல்லாஹ்வுடைய உவப்பை நாடி மனப்பூர்வமாக தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களு(டைய தர்மத்து)க்கு உவமை, மேடான பூமியிலுள்ள ஒரு தோட்டம் போன்றதாகும். அதில் பெருமழை பெய்யும் பொழுது தனது கனிகளை அது இரட்டிப்பாகத் தருகின்றது. பெருமழை அதில் பெய்யவில்லை என்றாலும் லேசான தூறல்கூட அதற்குப் போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான். உங்களில் ஒருவருக்கு பேரீச்சைகளும், திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருந்து அதனூடே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்க அனைத்துக் கனி வகைகளும் அதிலிருந்து அவருக்குக் கிடைத்து வருகின்றது… (2:265,266) 

 அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

தர்மம் பற்றிய இறைவசனம் அருளப்பட்டதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் அதிகப் பொருளைத் தர்மம் செய்தார். மக்கள், ‘அவர் பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்’ எனக் கூறினார்கள். பிறகு இன்னொருவர் ஒரு ஸாவு தானியங்களைத் தர்மம் செய்தார். அப்போது மக்கள் ‘இவரின் ஸாவு (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை’ எனக் கூறலானார்கள்.

அப்போது ‘இ(ம் முனாஃபிக்கான)வர்கள் நம்பிக்கையாளர்களில் தாராளமாகத் தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பைத் தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு’ என்ற (திருக்குர்ஆன் 09:79) வசனம் அருளப்பட்டது.
Book : 24

(புகாரி: 1415)

بَابٌ: اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ وَالقَلِيلِ مِنَ الصَّدَقَةِ

{وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ} الآيَةَ وَإِلَى قَوْلِهِ {مِنْ كُلِّ الثَّمَرَاتِ} [البقرة: 266]

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الحَكَمُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ البَصْرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا نَزَلَتْ آيَةُ الصَّدَقَةِ، كُنَّا نُحَامِلُ، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَيْءٍ كَثِيرٍ، فَقَالُوا: مُرَائِي، وَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِصَاعٍ، فَقَالُوا: إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَاعِ هَذَا، فَنَزَلَتْ: {الَّذِينَ يَلْمِزُونَ المُطَّوِّعِينَ مِنَ المُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ} [التوبة: 79]  الآيَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.