தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1435

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 தர்மம் பாவங்களை அழித்துவிடும் 

 ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் நினைவில் வைத்திருப்பவர் யார்? என உமர்(ரலி) கேட்டார். (ஃபித்னா என்ற வார்த்தைக்கு, சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் உண்டு) நான் ‘நபி(ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்’ என்றேன்.

உமர்(ரலி), ‘நீர் தாம் அதற்குத் துணிச்சல் பெற்றவராக இருந்தீர்! அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?’ என்று கேட்டார். ‘ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் (அவர்களின் மீது அளவு கடந்து நேசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவவை அதற்கான பரிகாரமாகும்’ என்று நான் பதில் கூறினேன்.

‘நான் இதைக் கருதவில்லை; கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய நபி(ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட குழப்பத்)தைப் பற்றியே கேட்கிறேன்’ என்றார்கள். நான், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது’ எனக் கூறியதும், ‘அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘உடைக்கப்படும்’ என்றேன். ‘அது உடைக்கப்பட்டால் மூடப்படவே மாட்டாது தானே?’ என உமர்(ரலி) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.

(நல்லறம் என்பதற்கு பதிலாக அபூ வாயில் அவர்கள் நல்லதை ஏவுதல் தீயதை தடுத்தல் என்று கூறினார்களென சுலைமான் என்பவர் கூறுகிறார்)

அபூ வாயில் கூறினார்:

கதவு எதுவென? ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் என்பாரை அவரிடம் கேட்கச் சொன்னோம். அவர் கேட்டதற்கு ஹுதைஃபா(ரலி) ‘(அந்தக் கதவு) உமர்(ரலி) தாம்’ என்றார். மேலும் அவரிடமே ‘நீங்கள் குறிப்பிடுவதை உமர்(ரலி) அறிவாரா?’ எனக் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்!, நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்’ என்றும் ஹுதைஃபா(ரலி) கூறினார்.
Book : 24

(புகாரி: 1435)

بَابُ الصَّدَقَةُ تُكَفِّرُ الخَطِيئَةَ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَيُّكُمْ يَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الفِتْنَةِ؟ قَالَ: قُلْتُ: أَنَا أَحْفَظُهُ كَمَا قَالَ، قَالَ: إِنَّكَ عَلَيْهِ لَجَرِيءٌ، فَكَيْفَ؟ قَالَ: قُلْتُ: ” فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ، وَوَلَدِهِ، وَجَارِهِ، تُكَفِّرُهَا الصَّلاَةُ، وَالصَّدَقَةُ وَالمَعْرُوفُ -( قَالَ سُلَيْمَانُ: قَدْ كَانَ يَقُولُ: الصَّلاَةُ وَالصَّدَقَةُ ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ – وَالنَّهْيُ عَنِ المُنْكَرِ)

، قَالَ: لَيْسَ هَذِهِ أُرِيدُ، وَلَكِنِّي أُرِيدُ الَّتِي تَمُوجُ كَمَوْجِ البَحْرِ، قَالَ: قُلْتُ: لَيْسَ عَلَيْكَ بِهَا يَا أَمِيرَ المُؤْمِنِينَ بَأْسٌ بَيْنَكَ وَبَيْنَهَا بَابٌ مُغْلَقٌ، قَالَ: فَيُكْسَرُ البَابُ أَوْ يُفْتَحُ، قَالَ: قُلْتُ: لاَ بَلْ يُكْسَرُ، قَالَ: فَإِنَّهُ إِذَا كُسِرَ لَمْ يُغْلَقْ أَبَدًا،

قَالَ: قُلْتُ: أَجَلْ، فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ مَنِ البَابُ فَقُلْنَا لِمَسْرُوقٍ: سَلْهُ، قَالَ: فَسَأَلَهُ، فَقَالَ: عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْنَا، فَعَلِمَ عُمَرُ مَنْ تَعْنِي؟ قَالَ: نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ لَيْلَةً وَذَلِكَ أَنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.