பாடம் : 33 ஸகாத்தைப் (பணமாக அன்றிப்) பொருட்களாகப் பெறல்
முஆத் (ரலி), யமன் வாசிகளிடம் நீங்கள் உங்கள் ஸகாத் பொருட்களான தீட்டாத கோதுமை, தீட்டிய கோதுமை ஆகியவற்றுக்குப் பகரமாகத் துணிகள், ஆடைகளைத் தாருங்கள். இது உங்களுக்கு இலகுவானதாகவும் மதீனாவில் வசிக்கும் நபித் தோழர்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும் எனக் கூறினார்கள் என தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
காலித் பின் வலீத் (ரலி) தமது கவசங்களையும் போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் தானம் செய்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்.
மேலும் ஸகாத்தைப் பிற தர்மங்களிலிருந்து வேறுபடுத்திக் கூறாமல் (பெண்களே!) உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள். பெண்கள் தங்கள் கழுத்தணிகளையும் காது வளையங்களையும் தர்மமாக அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்கம், வெள்ளியைத்தான் தர்மமாகக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூபக்ர்(ரலி) அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கட்டளையிட்டுள்ள (பிராணிகளுக்கான) ஸகாத் சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியனுப்பியபோது
‘ஒரு வயது பெண் ஒட்டகம் ஸகாத் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் மட்டுமே இருந்தால் அதையே ஸகாத்தாக ஏற்றுக் கொண்டு ஸகாத் வசூலிப்பவர் ஸகாத் கொடுத்தவருக்கு இருபது திர்ஹம்களோ, இரண்டு ஆடுகளோ கொடுக்க வேண்டும்;
அவரிடம் ஒரு வயதுடைய பெண் ஒட்டகம் இல்லாமல் இரண்டு வயதுடைய ஆண் ஒட்டகம் இருந்தால் அதை ஸகாத்தாக ஏற்றுக் கொள்ளவேண்டும்; ஸகாத் வசூலிப்பவர் அவருக்கு எதையும் கொடுக்க வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டார்கள்.
Book : 24
بَابُ العَرْضِ فِي الزَّكَاةِ
وَقَالَ طَاوُسٌ: قَالَ مُعَاذٌ رَضِيَ اللَّهُ عَنْهُ لِأَهْلِ اليَمَنِ: «ائْتُونِي بِعَرْضٍ ثِيَابٍ خَمِيصٍ – أَوْ لَبِيسٍ – فِي الصَّدَقَةِ مَكَانَ الشَّعِيرِ وَالذُّرَةِ أَهْوَنُ عَلَيْكُمْ وَخَيْرٌ لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ» وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَأَمَّا خَالِدٌ فَقَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ» فَلَمْ يَسْتَثْنِ صَدَقَةَ الفَرْضِ مِنْ غَيْرِهَا، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي خُرْصَهَا وَسِخَابَهَا، وَلَمْ يَخُصَّ الذَّهَبَ وَالفِضَّةَ مِنَ العُرُوضِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي ثُمَامَةُ، أَنَّ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ حَدَّثَهُ
أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ لَهُ الَّتِي أَمَرَ اللَّهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَنْ بَلَغَتْ صَدَقَتُهُ بِنْتَ مَخَاضٍ وَلَيْسَتْ عِنْدَهُ، وَعِنْدَهُ بِنْتُ لَبُونٍ فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ وَيُعْطِيهِ المُصَدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ، فَإِنْ لَمْ يَكُنْ عِنْدَهُ بِنْتُ مَخَاضٍ عَلَى وَجْهِهَا، وَعِنْدَهُ ابْنُ لَبُونٍ فَإِنَّهُ يُقْبَلُ مِنْهُ وَلَيْسَ مَعَهُ شَيْءٌ»
சமீப விமர்சனங்கள்