பாடம் : 49 (ஸகாத்- அடிமைகளை) விடுதலை செய்வதற்கும் கடன்பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்)… எனும் (9:60ஆவது) இறைவசனம்.
அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (வசதியற்றோர்) ஹஜ் செய்வதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது ஸகாத் பொருளிலிருந்தே செலவழித்தாக கூறப்படுகின்றது.
ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்கள், (அடிமையாயிருக்கும்) தந்தையை விடுதலை செய்ய தனது ஸகாத் பொருளை மகன் வழங்கலாம். அறப்போர் வீரர்களுக்கும் ஹஜ் செய்யாதவர்களுக்கும் வழங்கலாம்’என்று கூறிவிட்டு, தானதர்மங்கள் ஏழைகளுக்கும்… (என்று தொடங்கும் 9:60ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு, இவைகளில் எதில் நீ செலவழித்தாலும் நீ முறையாக செலவழித்தவனாவாய்’ எனக் கூறினார்கள்.
காலித் அவர்கள் (ரலி) தமது போர்க் கவசங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் எங்களை ஸதகா ஒட்டகங்களின் மீது பயணம் செய்ய வைத்தார்கள் என அபூலாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஸகாத் தர மறுத்துள்ளார். காலிதை(ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரே,
அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஸகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.
Book : 24
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَفِي الرِّقَابِ وَالغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ} [التوبة: 60]
وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «يُعْتِقُ مِنْ زَكَاةِ مَالِهِ وَيُعْطِي فِي الحَجِّ» وَقَالَ الحَسَنُ: ” إِنِ اشْتَرَى أَبَاهُ مِنَ الزَّكَاةِ جَازَ وَيُعْطِي فِي المُجَاهِدِينَ وَالَّذِي لَمْ يَحُجَّ، ثُمَّ تَلاَ: {إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ} [التوبة: 60] الآيَةَ فِي أَيِّهَا أَعْطَيْتَ أَجْزَأَتْ ” وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خَالِدًا احْتَبَسَ أَدْرَاعَهُ فِي سَبِيلِ اللَّهِ» وَيُذْكَرُ عَنْ أَبِي لاَسٍ، «حَمَلَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِبِلِ الصَّدَقَةِ لِلْحَجِّ»
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّدَقَةِ، فَقِيلَ مَنَعَ ابْنُ جَمِيلٍ، وَخَالِدُ بْنُ الوَلِيدِ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنَّهُ كَانَ فَقِيرًا، فَأَغْنَاهُ اللَّهُ وَرَسُولُهُ، وَأَمَّا خَالِدٌ: فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا، قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا العَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ، فَعَمُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهِيَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلُهَا مَعَهَا
تَابَعَهُ ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَنْ أَبِي الزِّنَادِ، «هِيَ عَلَيْهِ وَمِثْلُهَا مَعَهَا» وَقَالَ ابْنُ جُرَيْجٍ: حُدِّثْتُ عَنِ الأَعْرَجِ بِمِثْلِهِ
சமீப விமர்சனங்கள்