பாடம்: 56
(விளைபொருட்களில்) ஐந்து வஸக் அளவிற்கும் குறைவான பொருட்களில் ஸகாத் கடமையில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விளைபொருட்களில்) ஐந்து வஸக்குகளை விடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஊகியாக்களை விடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
அபூஅப்துல்லாஹ்-புகாரி இமாம் கூறுகிறார்:
ஐந்து வஸக்குகளை விடக் குறைந்ததற்கு ஸகாத் இல்லை எனும் இந்த ஹதீஸ் முன் சொன்ன புகாரி-1483 க்கு விளக்கமாக அமைந்துள்ளது. ஒருவர் கூறியதை விட அதிகமான விவரத்தை நம்பகமானவர்கள் கூறினாலோ, அவர் கூறியதை அவர்கள் தெளிவு படுத்தினாலோ ஹதீஸ் கலையில் ஏற்றுக் கொள்ளப்படும். (இந்த அடிப்படையில்தான் இந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது)
அத்தியாயம்: 24
(புகாரி: 1484)بَابٌ: لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا مَالِكٌ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَيْسَ فِيمَا أَقَلُّ مِنْ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسَةٍ مِنَ الإِبِلِ الذَّوْدِ صَدَقَةٌ، وَلاَ فِي أَقَلَّ مِنْ خَمْسِ أَوَاقٍ مِنَ الوَرِقِ صَدَقَةٌ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: هَذَا تَفْسِيرُ الأَوَّلِ إِذَا قَالَ: «لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ» وَيُؤْخَذُ أَبَدًا فِي العِلْمِ بِمَا زَادَ أَهْلُ الثَّبَتِ أَوْ بَيَّنُوا
Bukhari-Tamil-1484.
Bukhari-TamilMisc-1484.
Bukhari-Shamila-1484.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்