தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1486

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 (தானியத்திற்குரிய ஸகாத்தாகிய) பத்தில் ஒன்றோ மற்ற ஸகாத்தோ கடமையான ஒருவர், தமது பேரீச்சங் கனிகளை அல்லது பேரீச்ச மரத்தை அல்லது தோட்டத்தை அல்லது பயிர்களை விற்றுவிட்டு வேறு பொருட்களாகத் தமது ஸகாத்தை நிறைவேற்றுதலும், கடமையாகாதவர் தமது கனிகளை விற்றலும்.

பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை கனிகளை விற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனினும் பலன் உறுதிப்படுத்தப்பட்ட பின் எவருக்கும் விற்பதைத் தடை செய்யவில்லை. இங்கே ஸகாத் கடமையானவனர், ஸகாத் கடமையாகாதவர் என்று பிரித்துக் கூறவில்லை. 

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களில் பலன் உறுதிப்படுவது என்றால் என்ன என்று கேட்கப்பட்டது ‘(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்து விடுவதே’ என்று பதிலளித்தார்கள்.
Book : 24

(புகாரி: 1486)

بَابُ مَنْ بَاعَ ثِمَارَهُ، أَوْ نَخْلَهُ، أَوْ أَرْضَهُ، أَوْ زَرْعَهُ، وَقَدْ وَجَبَ فِيهِ العُشْرُ أَوِ الصَّدَقَةُ، فَأَدَّى الزَّكَاةَ مِنْ غَيْرِهِ، أَوْ بَاعَ ثِمَارَهُ وَلَمْ تَجِبْ فِيهِ الصَّدَقَةُ

وَقَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَبِيعُوا الثَّمَرَةَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا» فَلَمْ يَحْظُرِ البَيْعَ بَعْدَ الصَّلاَحِ عَلَى أَحَدٍ، وَلَمْ يَخُصَّ مَنْ وَجَبَ عَلَيْهِ الزَّكَاةُ مِمَّنْ لَمْ تَجِبْ

حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا، وَكَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَحِهَا قَالَ: «حَتَّى تَذْهَبَ عَاهَتُهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.